Uncategorized

செல்லப்பிராணிகளுக்கு ஒரு தகன இடம்

பெங்களூருவில் இருக்கும் செல்லப்பிராணிகள் விரும்பிகள் மிகுத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். காரணம் பெங்களூரு மகாநகர பாலிகே செல்லப் பிராணிகளுக்கென்று முதன்முதலாக தகன இடம் ஒன்றை அமைக்கப் போகிறார்கள். இங்கு இரண்டு நீற்றுலைகள் (incinerator) அதாவது எரிதொட்டிகள் அமையவிருக்கின்றன. ஒன்று சிறிய பிராணிகளான நாய், பூனை இவற்றிற்கும் இன்னொன்று பெரிய விலங்குகளுக்கும். இன்னும் ஒரு மாதத்தில் இந்த தகன இடம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு மகாநகர பாலிகேயின் இந்த செயலைப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். நடிகை அயிந்த்ரிதா ராய் இதைப்பற்றிப் பேசும்போது சொன்னார்: ‘இது ஒரு நல்ல விஷயம். இன்னும் முன்னாலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நாய் மனிதனின் நல்ல தோழன். சிலர் தங்கள் குடும்ப அங்கத்தினராகவே நாய்களை எண்ணுகிறார்கள். அதனால் அவைகள் மரிக்கும்போது அவைகளை நல்லமுறையில் வழியனுப்ப எண்ணுகிறார்கள். செல்லப்பிராணிகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்குவது வரவேற்கத்தக்கது. இந்த வருட பட்ஜெட்டின் போது செல்லப் பிராணிகளுக்கு வரிவிலக்கு பற்றி கூட பேசினார்கள். இதெல்லாம் நடந்தால் நிறைய பேர்கள் செல்லப் பிராணிகள் வளர்க்க முன் வருவார்கள்’.

நாய்விரும்பி திருமதி பிரியா-செட்டி ராஜகோபால் தனது நாயின் நினைவுக்காக பரிசுகூட கொடுக்கிறார். ‘இந்த பரிசு மக்கள் பிராணிகளின் மேல் காட்டும் அக்கறையை பாராட்டுவதற்குத்தான்’ என்று சொல்லும் இவர், கடந்த ஒரு வருடமாக இந்த செல்லப்பிராணிகளுக்கான தனியான தகன இடத்திற்காக ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். ‘பெங்களூரு நகரசபை கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த விஷயத்தை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அரசின் இந்த நடவடிக்கை நிச்சயம் பாராட்டத் தக்கது. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது இந்தத் திட்டம். பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள் என்பதால் செல்லப் பிராணிகளின் சாம்பலை எப்படி சம்பிரதாய முறைப்படி அகற்றுவது என்றும் இங்கு வசதிகள் செய்து தரப்படும்; இங்கு ஒரு பிராணிகள் மருத்துவர் ஒருவரும் இருப்பார் என்றும் கேள்விப்பட்டேன். பெங்களூரு எப்போதுமே செல்லப் பிராணிகளின் தோழமை நகரம். அதனால் இங்கு இந்த தகன இடம்  வருவது மிகவும் சரியானது தான்’.

செல்லப் பிராணிகளுக்கான தகன இடம் பெங்களூரில் அமையவிருப்பது  இதுதான் முதல் முறை என்றாலும், ஏற்கனவே பீபிள் ஃபார் அனிமல் என்ற அமைப்பு ஒரு இடுகாட்டை அமைத்திருக்கிறது. ‘செல்லப் பிராணி என்பது பலருக்கும் குடும்ப உறுப்பினரைவிட மேலானது. எனக்குத் தெரிந்து எங்கள் இடுகாட்டிற்கு ஒரு பெண் அவளது செல்லப் பிராணி இறந்தபின் தினமும் தனது இன்னொரு செல்லப் பிராணியை அழைத்து வருவாள். அந்த இன்னொரு செல்லப் பிராணி தன்னுடனிருந்த இன்னொரு செல்லப் பிராணி இறந்துவிட்டது என்பதை ஏற்க மறுக்கிறதாம். அதற்காகவே இவள் தினமும் இந்த நாயை அழைத்துக் கொண்டு இறந்த நாயின் கல்லறையை அதற்குக் காட்டுகிறாளாம்’ என்கிறார் பீபிள் ஃபார் அனிமல் அமைப்பைச் சேர்ந்த தீபக் நாயக். ‘அதுவுமில்லாமல் உயிருடன் இருக்கும்போது நம் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் செல்லப் பிராணிகளின் மறைவிற்குப் பிறகு அவைகளுக்கு நல்லபடியாக விடை கொடுப்பதும் நம் கடமை அல்லவா? அரசு செல்லப் பிராணிகளை வீட்டினுள்ளேயே அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. காலி இடங்களிலும் அவைகளை அடக்கம் செய்ய முடியாது. வீட்டினுள் அடக்கம் செய்தால் எலி, பெருச்சாளி இவைகளை சமாளிக்க வேண்டும். இதுபோல ஒரு தகன இடம் வருவது மிகவும் வரவேற்கத் தக்கது. செல்லப் பிராணிகளின் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் அல்லல்களை அரசு புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று தொடர்ந்து கூறுகிறார்.

‘வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளுக்கு மட்டுமில்லாமல், தெருவில் திரியும் பிராணிகளுக்கும் அவைகள் இறந்த பின் இங்கு எடுத்து வந்து தகனம் செய்யலாம். தற்சமயம் அரசு இதுபோல தெரு நாய்களின் உடல்களை எங்கோ ஓரிடத்தில் குழி வெட்டி புதைக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தொல்லையாக உருவாகியிருக்கிறது. இனி தெரு நாய்களுக்கும் நல்லமுறையில் கடைசி விடை கொடுக்கலாம்’ என்று சந்தோஷப் பெருமூச்சு விடுகிறார் Compassion Unlimited Plus Action (CUPA) அமைப்பை சேர்ந்த ஒரு அதிகாரி.

தாமதமானாலும் நல்ல விஷயம் என்றால் நாமும் பாராட்டலாம், இல்லையா?

வெப்துனியாவில் வெளியான கட்டுரை 31.10.2014

http://tamil.webdunia.com/article/ranjani-narayanan-articles/bangalore-city-to-get-its-first-animal-incinerator-114103100026_1.html

Advertisements

11 thoughts on “செல்லப்பிராணிகளுக்கு ஒரு தகன இடம்

 1. வணக்கம்
  அம்மா.

  இந்தியாவில் அனைத்திடங்களிலும் அமுலுக்கு வந்தால் சாலச் சிறந்தது.. இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாங்க ஸ்ரீராம்!
   இன்றைக்கு இன்னொரு செய்தி படித்தேன். அதை நீங்கள் படித்தல் அட! அட! என்பீர்கள்.

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 2. பயனுள்ள தகவலை பகிர்ந்ததற்கு நன்றி. செல்லப்பிராணிகளை தகனம் செய்வதைவிட, வெளிநாடுகளில் உள்ளது போல செல்லப் பிராணிகளுக்கு என்று கல்லறை தோட்டம் ( PET CEMETERY) ஒதுக்கினால் நன்றாக இருக்கும்..

  எங்கள் செல்லநாய் ஜாக்கி இறந்தபோது புதைக்க இடம்தேடி அலைந்தது தனிக் கதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s