Uncategorized

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – ஆன்மாவை வருடிய அமர சங்கீதம்!

 

வெப்துனியாவில் 20.9.2014 அன்று  வெளியான அஞ்சலி கட்டுரை

 

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது 9ஆவது வயதில் மேடை ஏறியவர். கர்நாடக இசைக் கலைஞர் யாருமே அதுவரை இசைக்க முயலாத ஒரு மேற்கத்திய இசைக் கருவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே மேதையைப் போல இசைத்தவர்.

மாண்டலின் என்னும் இந்த மேற்கத்திய இசைக் கருவிக்குத் தவில் வாத்தியத்தைப் பக்க வாத்தியமாகக் கொண்டு கர்நாடக இசை கச்சேரி செய்து, ரசிகர்களை அசத்தியவர். 11 வயதில் தமிழக அரசின் ஆஸ்தான வித்துவான் ஆனவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

 

 

இத்தனை சிறப்புகள் இருந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸிற்கு ஆயுள் இல்லாமல் போனது அவரது ரசிகர்களை மீளாத துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. மாண்டலின் என்றால் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீநிவாஸ் என்றால் மாண்டலின் என்று இசைப் பயணம் செய்து வந்த ஸ்ரீனிவாஸின் இவ்வுலகப் பயணம் 2014 செப்டம்பர் 19 அன்றுடன் முடிந்தது.
மேடையில் மாண்டலின் இசைக்கும்போது இவரது முகத்தில் இருக்கும் புன்னகை எவரையும் கவரும். இசையின் இன்பம், அந்தப் புன்னகை மூலம் ரசிகர்களுக்கும் பரவும். சின்னஞ்சிறுவனாக மாண்டலின் இசைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இந்தப் புன்னகை அவருடனேயே இருந்தது.”இசை ஒரு, தெய்வீகப் பரிசு. எதை வாசித்தாலும் அது கேட்பவர்களின் ஆன்மாவைத் தொட வேண்டும். அது எப்படி சாத்தியம்? நீங்கள் அனுபவித்து வாசித்தால், கேட்பவர்களும் அவ்வாறே அனுபவிப்பார்கள்” என்று மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ஒரு முறை கூறினார். அவர் கூறியதற்கு ஏற்ப, அனுபவித்து வாசித்து, கேட்பவர்களின் ஆன்மாவை வருடிய அமர சங்கீதக் கலைஞர், மாண்டலின் ஸ்ரீநிவாஸ்.

சிறுவயதில் தம் தந்தையின் மாண்டலின் மீது ஏற்பட்ட தீராத ஆர்வம், இவர் ஒரு இசை மேதையாக மலர உதவியது. இவரது குரு ருத்ரராஜூ சுப்புராஜு, ஒரு வாய்ப்பாட்டுக் கலைஞர். அவருக்கு மாண்டலின் இசைக்கத் தெரியாது. அவர் வாயால் பாடுவதைக் கேட்டு மாண்டலினில் வாசிப்பார் ஸ்ரீநிவாஸ். கடினமான பிருகாக்களையும் கமகங்களையும் அனாயாசமாக அந்தக் கருவியில் கொண்டுவருவார்.
எல்லோரிடத்திலும் மரியாதையாகவும் பணிவுடனும் நடந்துகொள்ளுவார். ஆரம்ப காலத்தில் மேற்கத்திய இசைக் கருவியான மாண்டலினைக் கர்நாடக இசை வாசிக்கப் பயன்படுத்தியபோது நிறைய எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. அவர் வாசிப்பது கர்நாடக இசையே இல்லை என்று கூட கேலி செய்தனர். தமது அபாரமான வாசிப்பால் அத்தனை வாய்களையும் மூட வைத்தார்.
இசையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய ஸ்ரீனிவாஸின் சொந்த வாழ்க்கை, அத்தனை சந்தோஷமானதாக அமையவில்லை. இவரது மனைவி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் பெண். தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறி மனைவி யுவஸ்ரீ மீது இவர் போட்ட வழக்கு, இவருக்கு 2012இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தந்தது. இவர்களது ஒரே மகன் சாய்கிருஷ்ணா இப்போது அம்மாவுடன் இருக்கிறார். புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரான இவர், 2011இல் சாய்பாபா இறந்தது முதல் மிகுந்த துயரத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.
கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இணைவு இசையிலும் (fusion music) ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்ரீநிவாஸ். இந்தியாவில் ஜாகிர் உசேன், ஷங்கர் மகாதேவன் ஆகியோருடனும், வெளிநாட்டுக் கலைஞர்கள் பலருடனும் சேர்ந்து ஃப்யுஷன் இசையை வாசித்தவர்.
இந்த இளம் கலைஞனுக்கு நமது அஞ்சலிகள்.
Advertisements

17 thoughts on “மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – ஆன்மாவை வருடிய அமர சங்கீதம்!

 1. எனக்கு திருமணமாகி வருமுன் இவரது கச்சேரியை சென்னையில் நேரில் பார்த்து ரசிக்கும் அனுபவம் கிடைத்தது. என்ன ஒரு மயக்கும் இசை இசையுலகம் அனாதையாகிவிட்டது என்பது உண்மைதான்

 2. மாண்டலின் திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் மறைவு இசைத் துறைக்கு மாபெரும் இழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

 3. அந்த இளம் வயதிலேயே எவ்வளவு திறமை? இசை அறியாதவர்கள் கூட இவரது இசையை ரசிப்பதைப் பார்த்திருக்கிறேன். மனதை மிகவும் வருத்தப்பட வைத்த மறைவு.

 4. 1985ல் பாரிசில் இவர் கச்சேரியை முதல் முதல் நேரே கேட்டேன் .சிறுவனான அவர் ஆற்றல் பிரஞ்சுக்காரரை வியப்பில் ஆழ்ந்தியது.இவர் இசை கவலையை மறக்கடிக்க வைக்கும்.அவர் முகத்தில் இருக்கும் தெய்வீகப் புன்னகை மறக்கமுடியாதது.
  நீண்ட ஆயுள் இல்லாமல் போய்விட்டாரே!

 5. அகால மரணத்தினால் இசைஉலகை அதிர வைத்திருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். பத்தோடு பதினொண்ணாக எங்கோ கிடந்த மேற்கத்திய வாத்தியத்தை, கர்னாடக இசை உலகிற்குக்கொணர்ந்து கர்னாடக இசைக்குப் புதிய பரிணாமம் தந்த மேதை.

  உலகின் உன்னதக்கலைஞர்கள் பலரின் குடும்ப வாழ்க்கை நன்றாக அமைந்ததில்லை. இவரும் அந்தப்பட்டியலில் வந்திருக்கிறார். மேதைமை நிறைந்த கலை வாழ்வு. சோகமயமானத் தனிமனித வாழ்வு. இறைவனின் வரம் போலும்.
  -ஏகாந்தன்

  1. இசைக்கென்று இவரைப் படைத்துவிட்ட கடவுள் இவருக்கு சொந்த வாழ்க்கையை சோகமயமாக வைத்தது ஏனோ? கடவுளின் கணக்கு பல சமயம் நமக்குப் புரிவதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s