அரசியல்

மோடி – வாட்நகர் முதல் புது டெல்லி வரை

ஆழம் ஜூன் 2014 இதழில் வெளிவந்த எனது கட்டுரை

 

 • 1950 ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் தேதி குஜராத் மாநிChap01லத்திலுள்ள வாட்நகர் கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. குடும்பத்துக்குச் சொந்தமான டீக்கடையில் சிறு வயதில் வேலை செய்தார். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் சேர்ந்து பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார்.
 • 1987 – பாரதிய ஜனதா கட்சியில் சேர்கிறார்.
 • 1990 – எல்.கே. அத்வானியின் தலைமையில், குஜராத்திலுள்ள சோமநாத்திலிருந்து அயோத்தியா வரையிலான ராம் ரத யாத்திரையின் முக்கிய வடிவமைப்பாளராக மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
 • 1995 – ஐந்து மாநிலங்களுக்கு பாஜகவின் தேசியச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். குஜராத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற, கட்சியில் மோடியின் நிலையும் உயர்கிறது.
 • 1998 – கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றம்.
 • 2001 – ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 மக்கள் பலியாக, அதன் காரணமாக அப்போதைய முதலமைச்சர் கேஷுபாய் படேல் பதவி இழக்க நேர்கிறது. அவருக்குப்  பதிலாக மோடி குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
 • 2002 பிப்ரவரி – கோத்ராவில் நடந்த ரயில் தீ விபத்தில் 59 இந்து கர சேவகர்கள் இறக்க நேர்ந்ததன் பின்விளைவாக நடந்த கொடூரமான கலவரத்தில் சிறுபான்மையினர் ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்படுகிறார்கள். இவர்களை அடக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காரணம் காட்டி மோடிமீது கடும் விமரிசனங்கள் எழுகின்றன.
 • 2002 – தேர்தலில் 182 இடங்களில் 128 இடங்களைக் கைப்பற்றி மகத்தான  வெற்றியுடன் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கிறார்.
 • 2005 – மோடிக்கு  மதச்சகிப்புத்தன்மை இல்லாததைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுக்கிறது.
 • 2007 – மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • 2008 – அக்டோபர்  டாடா மோட்டாரின் குறைந்த விலை நானோ கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்குமாறு அழைக்கிறார்.
 • 2012 – 182 இடங்களில் 115 இடங்களைக் கைப்பற்றி நான்காவது முறையாக குஜராத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • 2013 ஜூன் 9 – 2014 பொதுத் தேர்தலின் பிரசாரத் தலைமை பொறுப்பாளராக மோடியை நியமிக்கிறது.
 • 2013 செப்டம்பர் 13 – தனது கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கிறது பாஜக.
 • 2013 நவம்பர் – கோப்ரா போஸ்ட் என்ற இணையத்தளம் மோடியின் வலது கையான அமித் ஷா சட்டத்துக்குப் புறம்பாக 2009ல் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி காணொளியையும் ஒளிபரப்பியது.
 • 2014 ஏப்ரல் 9 – வதோதராவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
 • 2014 ஏப்ரல் 24 – வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
 • 2014 மே 16 – தேர்தல் முடிவுகள் வெளிவருகின்றன. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி வாகை சூடுகிறார் மோடி. பாஜக வரலாறு காணாத வெற்றி பெறுகிறது. புதிய பிரதமராக நரேந்திர மோடி அடுத்த சில தினங்களில் பொறுப்பேற்கப்படவுள்ளார்.
Advertisements

7 thoughts on “மோடி – வாட்நகர் முதல் புது டெல்லி வரை

 1. மோடி அவர்களின் முக்கிய வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து பகிர்ந்தமை சிறப்பு! ஆழம் இதழில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

 2. திரு மோடியின் நாடியை நன்றாகவே பிடித்து எழுதியுள்ளீர்களே இந்தக் கட்டுரை ஆழம் இதழில் பதிவானதற்கு பாராட்டுக்கள் ரஞ்சனி அருமையான பகிர்வு அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு வாழ்த்துக்கள்.

 3. அழகாகத் தொகுத்து எழுதியுள்ளீர்கள். ஆழம் இதழிலும் படித்தேன். உங்களைப் பார்க்க முடிகிறது. ஸந்தோஷம்.

 4. வணக்கம்
  அம்மா.

  பாரத தேசத்தின் பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல…. வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 5. நமது பிரதமரின் வாழ்க்கை வரலாறு உங்கள் எழுத்தில் ஆழம் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s