என் குடும்பம்

அருமைப் பேரனின் அரிய சாதனை

 

teji teji

இந்தப் படத்தில் இருப்பது தேஜஸ் கிருஷ்ணா. என் பிள்ளையின் புகைப்பட ஆற்றலையும் கண்டு களியுங்களேன்!

 

எனது பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா CBSE பத்தாம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் பத்துக்குப் பத்து புள்ளிகள் பெற்று அவனது பள்ளியில் முதல் மாணவனாக வந்திருக்கிறான் என்பதை மிக மிக மிக மிகப் பெருமையுடன் இங்கு பதிய விரும்புகிறேன். இந்த கல்வி முறையில் மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. (வாழ்க, முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபல்!!) Cumulative Grade Point Average (CGPA) என்று ஒவ்வொரு பாடத்திலும் 10 புள்ளிகளுக்கு மாணவர்களின் திறமை கணக்கிடப்படுகிறது.

 

அவனது திறமையை வெளிக் கொணருவதில் என் மகளின் பங்கு மிகப்பெரியது. தேஜஸ் வெகு புத்திசாலி. அவனது புத்திசாலித்தனத்தை நல்லமுறையில் வழிநடத்திச் சென்ற பெருமை என் மகளையே சேரும்.

 

தேஜஸ் கிருஷ்ணாவின் அப்பா (என் மாப்பிள்ளை), அத்தைகள், பெரியப்பா என்று எல்லோருமே படிப்பில் புலிகள். என் மாப்பிளையின் பெரியப்பா (80+) அஸ்ட்ராலஜி எனப்படும் ஜோசியத்தில் இப்போது முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறார். என் மாப்பிளையின் அப்பா பல சம்ஸ்க்ருத நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கணணி தொழில் நுட்பத்திலும் வல்லவர்கள். தங்கள் ஆராய்ச்சிகளுக்கும், நூல் மொழி பெயர்ப்புகளுக்கும் கணணியை அசாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்!

 

மொத்தத்தில் பெரிய படிப்பாளிக் குடும்பம். அப்படியிருக்கையில் தேஜஸ் செய்தது என்ன பெரிய சாதனையா என்று தோன்றலாம். இந்தப் பக்கத்தில் நான் இருக்கிறேனே!!!!

 

எங்களுடன் இந்த விடுமுறையில் தேஜஸ் வந்து இருந்தான். ரொம்பவும் ஒட்டுதலாக பேசிக்கொண்டும், எனக்கும், அவனது தத்தாவிற்கும் உதவிகள் செய்துகொண்டும் இருந்தான். அவன் வந்தது சோர்ந்திருந்த எங்களுக்கு (கணவர் தொலைக்காட்சி முன், நான் என் கணணி முன் – வீட்டில் சத்தமே இருக்காது) பாலைவனத்தில் பெய்த மழையைப் போல குளிர்ச்சி ஊட்டியது.

 

அவன் ஒரு நல்ல படிப்பாளியாக, நல்ல மகனாக, நல்ல அண்ணாவாக, நல்ல பேரனாக மட்டுமின்றி, ஒரு நல்ல மனிதனாகவும் முழுமை பெற்று வாழ எங்கள் எல்லோரின் ஆசிகளும்.

 

பாதகமலங்கள் காணீரே!  – தேஜஸ் கிருஷ்ணாவைப் பற்றிப் படிக்க

 

அம்மா மின்னலு…..! மகளின் பெருமையைப் படிக்க

 

 

Advertisements

23 thoughts on “அருமைப் பேரனின் அரிய சாதனை

 1. ஆசிகள். மிக்க ஸந்தோஷம். தேஜஸ் கிருஷ்ணா மேன்மேலும் படித்துப் பட்டங்கள் பெற
  எங்கள் எல்லோரின் ஆசிகளும். அன்புடன் காமாட்சி

 2. தேஜஸ் கிருஷ்ணாவிற்கு எங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சாதனைப் பேரனின் சாதனையில் அன்புப் பாட்டியின் புத்திசாலித்தனமும் கட்டாயம் சேர்ந்திருக்கும் என்பதால் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்

 3. தேஜஸ் கிருஷ்ணாவிற்கு என் ஆசிகளையும் சொல்லிவிடுங்கள் ரஞ்சனி. பாட்டியின் திறமை பேரனிடம் இல்லாமல் இருக்குமா என்ன? பாட்டி, பேரன் இருவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

 4. மனம் கொள்ளா மகிழ்ச்சி ரஞ்சனி. தேஜஸ். என்ன ஒரு நல்ல பெயர். உங்கள் சம்பந்திகள் பெருமையும் உங்கள் பெருமையும் நன்கு விளங்குகிறது. அனைவரின் ஆசிகளுடன் தேஜஸ் மேலும் ஒளிவிட என் வாழ்த்துகள்.

 5. வாழ்த்துகள்/ஆசிகள்/ சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நடைபெறும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எப்போவுமே புள்ளிகள் தான். மதிப்பெண்கள் கிடையாது. எங்கள் குழந்தைகள் இருவருமே கேந்திரிய வித்யாலயா மாணவர்களே. இப்போ மாறி இருக்கா தெரியலை. 🙂

 6. பேரப்பிள்ளை தேஜஸ் கிருஷ்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்.! பாதக் கமலங்கள் பதிவு இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு சங்க இலக்கிய பாடலை மேற்கோள் காட்டியதாக நினைவு.

 7. “அவன் ஒரு நல்ல படிப்பாளியாக, நல்ல மகனாக, நல்ல அண்ணாவாக, நல்ல பேரனாக மட்டுமின்றி, ஒரு நல்ல மனிதனாகவும் முழுமை பெற்று வாழ எங்கள் எல்லோரின் ஆசிகளும்.” என்ற வரிகளையே மீள நானும் தெரிவிப்பதோடு
  கல்விச் செல்வம்
  அழியாச் செல்வம் – அதனை
  மேலும் மேலும் பெற்று
  வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

 8. அன்புத் தோழி ரஞ்சனிக்கு உங்கள் பேரனின் திறமை கண்டு நாங்களும்
  மகிழ்ந்தோம்.நல்ல செல்வம் என்பது நன்மக்களே. அந்த வகையில் நீங்கள் பெரும்
  செல்வந்தராயிருக்கிறீர்கள்.உங்கள் அல்ல நம் பேரனுக்கு இந்தப் பாட்டியின்
  ஆசிகளைக் கூறுங்கள்.அவன் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
  அன்புடன் ருக்மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s