Language

இங்கிலீஷ் விங்க்லீஷ்!

 

பத்துவருடங்கள் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுத்தது ரொம்பவும் நிறைவான அனுபவம். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வகையான அனுபவம். எதைச் சொல்ல எதை விட?

 

நம்மூர் மாணவர்களுக்கு எல்லாவற்றையும் அவர்களது மொழியில் சொல்ல வேண்டும். கன்னட மாணவர்களுக்கு கன்னடதல்லி ஹேள பேக்கு. தமிழ்ல சொல்லுங்க – தமிழ் மாணவர்கள் கேட்பார்கள். ஹிந்தி மே போலியே மேடம் என்பார்கள் ஹிந்தி மாணவர்கள். தெலுகல் செப்பண்டி, மலையாளம் அறியுமோ? போன்றவைகளையும் அவ்வப்போது சமாளிக்க வேண்டும்.

 

ஒருமுறை அபுதாபியிலிருந்து ஒரு மாணவர். பிரைவேட் டியுஷன். (ஒரு மாணவர் – ஒரு ஆசிரியை) என்ன கேட்டாலும் ‘இன்-ஷா அல்லா’ என்பார். அல்லது ‘மாஷா அல்லா’ என்பார். அவர் நிறைய பேசுவார் – ஆங்கிலத்தில் இல்லை; உருதுவில்! அவர் என்னிடத்திலிருந்து ஆங்கிலத்தில் என்ன கற்றுக் கொண்டாரோ தெரியாது. நான் அவரிடத்திலிருந்து இன்-ஷா அல்லா, மாஷா அல்லா கற்றுக் கொண்டேன்!

 

ஆந்திராவிலிருந்து ஒரு பெண். படித்தது M.Tech. ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது இந்த மாணவிக்கு. ஒருநாள் என்னிடம் ‘Tomorrow going to father-in-law house’ என்றாள். எனக்கு வியப்பு. ‘Are you married?’ என்றேன். நோ, நோ மேடம், I am going to my mother brother house!’ அம்மாவின் சகோதரர் ஃபாதர் இன் லா! அதேபோல அப்பாவின் சகோதரி மதர் இன்லா! இது எப்படி இருக்கு? இந்த மாணவி எப்படி எம்.டெக் படித்து தேறியிருப்பாள் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

 

father’s name, mother’s name என்பதெல்லாம் அடிப்படை வகுப்பு மாணவர்களுக்குப் புரியவே புரியாது. எம்.டெக் படித்த பெண்ணிற்கே புரியவில்லை என்றால் இவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு முறை ஒரு மாணவரை father’s name என்று சொல்லுங்கள் என்று சொன்னதற்கு எனக்கு ஒரு அப்பாதான் மேடம் என்றார்!!!!! S சேர்த்தால் அது பன்மைதான் அம்மாவாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும்!

 

இன்னொரு மாணவர். திருமணமானவர். மனைவியுடன் அமெரிக்கா செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் பேச வராது. மனைவி சொன்னார்: ‘அடிப்படை வகுப்பிலிருந்து இருக்கும் எல்லா வகுப்புகளிலும் படிக்கட்டும்’ என்று. அதனால் நான் எடுக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வருவார். எந்த வகுப்பிலும் வாயை மட்டும் திறக்கமாட்டார். கடைசி நாளன்று கூட ஆங்கிலத்தில் பேசாமல் என் பொறுமையை ரொம்பவும் சோதித்தார். ‘நீங்கள் இன்று பேசினால்தான் நான் மேற்கொண்டு வகுப்பை நடத்துவேன்’ என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சநேரம் யோசித்தார். மற்ற மாணவர்களும் அவரை பேசும்படி வற்புறுத்தவே ‘ஒன் ஸ்டோரி’ என்றவாறே எழுந்து வந்தார்.

 

‘டூ பிரெண்ட்ஸ். ம்…..ம்……ம்…. வென்ட் துபாய்…….ம்…..ம்…..ம்….  ஏஜென்ட் சீட் (cheat) ……ம்…..ம்….. பாதர் மதர் சூசையிடு…..’

 

நான் அவரை இடைமறித்தேன். இது ஆங்கிலமா? என்ன பேசுகிறீர்கள்?’ என்று கோபமாக ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ‘மேடம், ப்ளீஸ். ஸ்டோரி இன்டரஸ்டிங்! டோன்ட் டிரபிள்!(trouble) என்று ஆளுக்குஆள் சொல்ல (கத்த!) வகுப்பே எனக்கு எதிரியானது.

 

உண்மைதானே கதை புரிகிறது. சுவாரஸ்யமாக வேறு இருக்கிறது. யாருக்கு வேண்டும் is, are எல்லாம்?

இதோ நாடக நடிகர் மௌலி அவரது ப்ளைட் 172 நாடகத்தில் பேசுகிற ஆங்கிலத்தை ரசியுங்கள்!

 

 

என் மொழிப்புலமை 

வம்பு வேணுமா உமா?

ஹிந்தி மாலும்?

கன்னட கொத்து!

Advertisements

26 thoughts on “இங்கிலீஷ் விங்க்லீஷ்!

 1. //எனக்கு ஒரு அப்பாதான் மேடம் என்றார்!!!!! // ஹா ஹா ஹா

  மீ ஆல்சோ ஆங்கிலம் நாட் சரியா கம்மிங்.. ப்ளீஸ் டீச் மீ ஆங்கிலம் :-)))))

  1. வாங்க சீனு!
   சீனுகுரு என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி காமெடி செய்யலாமா?
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 2. சுவாரஸ்யமான அனுபவங்கள்
  சொல்லிச் சென்றவிதம் கூடுதல் சுவாரஸ்யம்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

 3. நீங்களும் அவங்களுக்கு ஃபீஸ் கொடுத்திருக்கணும். பின்னே, அவங்க மூலமா இவ்ளோ மொழிகளை தெரிஞ்சுகிட்டீங்களே

  ஒரு இடத்தில் s சேர்த்தால் பன்மையாகிறது.இதுவே வேறொரு இடத்தில் வேறு மாதிரி. குழப்பம் வராமல் எப்படியிருக்கும்.

  கதை விஷயத்தில் நாங்களும் மாணவர்களுடன் சேர்ந்துவிட்டோம். ஹா ஹா. ஜாலியான அனுபவம்தான்.

  1. வாங்க சித்ரா!
   உண்மையில் ஆங்கிலம் கொஞ்சம் குழப்பும் தான்.
   வருகைக்கும், சிரித்து ரசித்ததற்கும் நன்றி!

 4. ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். நேற்று ஜவர்லால் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் ஒரு கிளிப்பிங் போட்டுக் காட்டினார். ஒரு எஞ்சினியர் நண்பர் தன்னுடன் அலைபேசியில் ஆங்கிலத்தில் பேசிய விற்பனைப்பெண் ஒருவரை அரைகுறை ஆங்கிலம் அறிந்தவர் பேசுவது போலப் பேசி கலாய்த்த கிளிப்பிங்…இதுபோல இன்னும் பகிருங்கள்!

 5. மா ஷா அல்லா ? என்ன ஒரு காமெடி பஜார் நடத்தியிருக்கிறீர்கள் என்பது புரிந்தது. நிஜமாகவே இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கப்போய் நீங்கள் நிறைய பாஷ கற்றுக்கொண்டதாக தெரிகிரது. நான் ஹைதிராபாத்தில் இருப்பதால் ஆரம்பம் அப்படி உள்ளது பயப்படவேண்டாம். நேற்ரு நான் சிரிப்பது எவ்வளவு நல்லது என ஒரு பதிவுக்கு யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த மாதிரி இங்கிலீஷ் கேட்டால் நிறைய சிரிக்கலாம் என்று தோன்றுகிறது. இன் ஷா அல்லா

  1. வாங்க விஜயா!
   நேற்று நீங்க யோசித்தது எனக்கு இங்கு டெலிபதி மூலம் தெரிந்துவிட்டதோ?
   இன்ஷா அல்லா என்றால் அல்லாவின் விருப்பபடி, மாஷா அல்லா என்றால் அல்லா ஆசீர்வதிக்கட்டும் என்று பொருள், சரியா?
   வருகைக்கும் சிரித்து ரசித்ததற்கும் நன்றி!

 6. அவர் என்னிடத்திலிருந்து ஆங்கிலத்தில் என்ன கற்றுக் கொண்டாரோ தெரியாது. நான் அவரிடத்திலிருந்து இன்-ஷா அல்லா, மாஷா அல்லா கற்றுக் கொண்டேன்!//

  ரசனையான அனுபவங்கள்..

  1. வணக்கம்,

   நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

   2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

   தற்போது பதிவை இணைக்கலாம்.

   தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

   http://www.Nikandu.com
   நிகண்டு.காம்

 7. \\ஆந்திராவிலிருந்து ஒரு பெண். படித்தது M.Tech. ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது \\

  ஆந்திரா காரர்களைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். ஆந்திரா காரர்களில் பெருமபாலோனோர் இந்த பெண் மாதிரிதான் ஆங்கிலம் பேசுவார்கள், இந்த ஆங்கிலத்தை வைத்தே 60% ஐ.ஐ.டி இடங்களையும், சாஃப்ட்வேர் வேலைகளையும் அவர்கள்தான் கைப்பற்றுகிறார்கள். ………………!!

  1. வாங்க ஜெயதேவ்!
   நீங்க சொல்வதை நூறு சதவிகிதம் ஒப்புக்கொள்ளுகிறேன். இந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே அந்த மாணவர் மனைவியுடன் dependent விசாவில் அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிட்டார்! குறைத்து மதிப்பிடுவதே இல்லை அவர்களை, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 8. நான்கூட, புரோகிராமர் கோர்ஸில் சிக்கிக்கொண்டபோது, இப்படி இங்லீஷ் பேசித்தான் சமாளிக்க வேண்டியிருந்தது. அதுவும், ப்ராஜக்ட் பிரசன்டேசனில் பட்டபாடு இருக்கிறதே, இப்போது நினைத்தாலும், வயிற்றைக்கலக்கும்.

  1. வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
   நீங்கள் சொல்வது நிஜமா? இல்லை காமெடி செய்கிறீர்களா?
   எப்படியாயினும், வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s