குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்கு உறவுகள் தேவையில்லையா?

 

 

சென்ற வாரம் ‘சம்மர் கேம்ப்’ பற்றி எழுதியதற்கு ஒரு சகோதரி எனது வலைப்பதிவில் ஒரு கருத்துரை போட்டிருந்தார். ‘தேவையில்லைன்னு சொல்றீங்க….பாட்டி வீடு, உறவினர் வீடு என்று செல்ல முடியாமல் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் இடத்துப் பிள்ளைகளை என்ன செய்வது?’

 

ரொம்பவும் வருந்த வேண்டிய நிலை இல்லையா இது? உறவுகளே இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா? அந்தக் காலத்தைப் போல நாலு அத்தை, இரண்டு சித்தப்பா, மூணு மாமா என்றெல்லாம் வேண்டாம். ஒரு தாத்தா பாட்டியாவது குழந்தைக்கு வேண்டும், இல்லையா? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்?

 

இன்றைக்கும் எங்களுக்கு எங்கள் மாமாக்கள் என்றால் அத்தனை ஒட்டுதல். எங்கள் குழந்தைகள், அவர்கள் குழந்தைகள் என்று எல்லோருக்குமே இனிய நண்பர்கள். போன வருடம் என் பேரனின் பூணூல் வைபவத்திற்கு என் மாமா வந்திருந்தார். இந்த உறவுகள் எல்லாம் நம் தலைமுறையை சொல்பவவை அல்லவா? நமது பரம்பரை, பழக்க வழக்கங்கள் எல்லாம் இவர்களிடமிருந்து தானே நமக்கு வருகிறது.

 

பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளிடம் கண்டிப்பும் கறாருமாக இருப்பார்கள். பாட்டி தாத்தாக்கள் தங்கள் முழு அன்பையும் குழந்தைகளிடம் கொட்டுவார்கள். இரண்டும் குழந்தைகளுக்கு வேண்டும். அதுவுமின்றி, தங்கள் குழந்தைகளை கொஞ்ச நேரமின்றி இருந்திருக்கும். இப்போது பேரக்குழந்தைகள் வந்து தாத்தா பாட்டி என்று கூப்பிடும்போது ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே, அது அளவு கடந்தது. இன்றைய இளைய தலைமுறை இதை உணர வேண்டும்.

 

மேலும் படிக்க: நான்குபெண்கள்

 

Advertisements

8 thoughts on “குழந்தைகளுக்கு உறவுகள் தேவையில்லையா?

  1. ஆசிரியர் வேலையில் இருந்தால் பிள்ளைகளோடு சேர்ந்து பெற்றோருக்கும்(முக்கியமாக அம்மா) விடுமுறை கிடைக்கும். உறவு வீடுகளுக்கு சென்று வரலாம். இல்லையென்றால் பிரச்சினைதான்.

    ஹ்ம் …… நாங்களெல்லாம் என்ன செய்வது ? நல்லவேளை, எங்கள் மகள் ஐந்து வயதுவரை ஊரில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாள். அதனால் எல்லோரையும் தெரியும். ஊருக்குப் போவதில் என்னைவிட அவளுக்குத்தான் ஆர்வ‌ம் அதிகம்.

  2. இளய தலைமுறை கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை ரஞ்சனி மிக அழகாக அலசியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  3. ஒற்றைக்குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம். இன்னும் சில தலைமுறைகளில், மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா உறவுகள் எல்லாம், இல்லாமல் போய் விடும் அபாயம் உருவாகி விட்டதே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s