குழந்தை வளர்ப்பு

சம்மர் கேம்ப் தேவையா?

 

 

செல்வ களஞ்சியமே 66

 

எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?

 

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே 65

Advertisements

5 thoughts on “சம்மர் கேம்ப் தேவையா?

 1. தேவையில்லைன்னு சொல்றீங்க….பாட்டி வீடு, உறவினர் வீடு என்று செல்ல முடியாமல் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் இடத்துப் பிள்ளைகளை என்ன செய்வது?

  1. வாங்க எழில்!
   உங்கள் மறுமொழி என்னை ரொம்பவும் வருந்தச் செய்தது.

   //உறவினர் வீடு செல்ல முடியாமல்// என்றால் என்ன பொருள்? ஏனிந்த நிலை? குழந்தைக்கு யாருமே வேண்டாமா?

   நாம் உறவுகளை சரிவர பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்று கொள்ளலாமா? பாட்டி தாத்தாக்களை இந்த சமயத்ததில் வரவழைத்துக் கொள்ளலாமே!

   இருவரும் வேலைக்குப் போகிறார்கள் என்றால் முறை வைத்துக் கொண்டு விடுமுறை எடுத்துக் கொண்டு குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே நம் குழந்தை அடுத்தவரிடத்திலேயே இருக்க முடியுமா?
   எப்போதுதான் குழந்தைகளுடன் நாம் இருப்பது?

   1. அந்தக் குழந்தையைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. எதையாவது கற்றுக் கொள்ளட்டும் . பரவாயில்லை. அதற்காKஅப் பள்ளி செல்வது போல லீவு நாட்கள் முழுவதும் அலைந்தால் அந்தக் குழந்தைக்கு அலுப்பு வராதா. .

   2. இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் நானும் உறவுகளை விரும்புபவள் அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக்கொண்டவள். என் வீட்டிலேயே என் குழந்தை சிறியவனாய் இருந்த போது என் அம்மா, அப்பாவும் வேலைக்குச் செல்பவர்கள். அவனது அத்தையும் வேலைக்குச் செல்பவர். அதனால் அங்கு விட முடியவில்லை.ஆனால் என்னுடையது சொந்த தொழில் என்பதால் அக்குழந்தைகளையும் இங்கே வரவழைத்தேன். நானும் சம்மர் கிளாஸ் நடத்தியதால் நேரம் அட்ஜெஸ்ட் செய்து அக்குழந்தைகளில் பெரியவளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் செல்வேன். ஏதோ இரண்டொரு நாள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் அதற்கு மேல் முடியாதே? அப்போதுதான் யோசித்தேன் இருவரும் வேலைக்குச் செல்பவர் படும் கஷ்டம் குறித்து…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s