குழந்தை வளர்ப்பு

கடவுளுக்கு ஒரு கடிதம்

செல்வ களஞ்சியமே – 58

கடவுளுக்கு  ஒரு  லெட்டர்

ஒரு சிறிய  பள்ளிக்கூடம் அதில் ஒரே ஒரு டீச்சர் தான் எல்லா வகுப்பிலும் பாடம் நடத்த வேண்டும்.  வேறே  டீச்சர் கிடையாதே!. அன்று  நாலாம் வகுப்புக்கு  ஒரு  பாடம் நடத்த வேண்டும். டீச்சர் அம்புலு ரொம்ப டயர்டாக இருந்தாள். ஆகவே குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுக்க  என்ன செய்யலாம் என்று யோசித்து “குழந்தைகளே  நீங்களாக யோசித்து  ஒரு  கடிதம் எழுத வேண்டும்.  யாருக்குத்  தெரியுமா?   கடவுளுக்கு உங்களுக்கு அவசியம்  என்ன வேண்டுமோ அதை கேட்டு எழுதவேண்டும்  பத்து  நிமிஷம் தான் டயம், ஆரம்பியுங்கள்”. குழந்தைகள் எழுதின  கடிதங்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டாள். படித்தாள். ஒரு  கடிதம்  அவளை  ரொம்ப உலுக்கியது. அசந்தே போய் விட்டாள் .இதென்ன விசித்ரம்.  அதை  வீட்டுக்கு  கொண்டு போய் அன்று மாலை  ஆபிசிலிருந்து வந்த தனது  கணவனிடம்  காட்டினாள்.   கோபாலன்  ரொம்ப களைத்துப் போயிருந்தான்.  “அம்புலு  நீயே அதைப் படியேன். ரொம்ப  டயர்டாக .இருக்கிறது எனக்கு.”  டீச்சர் படித்தாள்  அதில்  என்ன எழுதியிருந்தது?

“ஏ,  கடவுளே  நான்  உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்.  என்னை  ஒரு  டிவி யாக பண்ணு.  அப்போ தான்,   எனக்கு என்று  ஒரு தனி  இடம் கிடைக்கும்  என்னை சுற்றி  எப்போதும் என்  குடும்பத்தில்  அனைவரும்  இருப்பார்கள்.  என்கிட்டே  இருந்து  வரும் பேச்சை நம்புவார்கள்.  உன்னிப்பாக கேட்பார்கள். குறுக்கே பேசாமல் முழு கவனமும் என் மேலே இருக்கும் எனக்கு உடம்பு சரியில்லை, நான்  வேலை செய்ய வில்லை   என்றால் உடனே என்னை கவனித்து சரியாக்கி விடுவார்கள். எவ்வளவோ களைப்பாக இருந்தாலும் ஆபிசிலிருந்து வந்ததும் அப்பா என்னெதிரே. என் அம்மா எவ்வளவு வேலையிருந்தாலும் என்னிடம் நிமிஷத்துக்கு ஒருதடையாவது வருவா. என் தம்பி தங்கை எல்லாம் யார் எனக்கு  முன்னாலே  இருப்பது என்று  சண்டை போடுவார்கள்.

எல்லோருக்கும்  என்னை  பிடிக்குமே, எனக்கும் அவர்கள் எல்லாருடனும்   சந்தோஷமாக இருக்க வேண்டுமே. அதற்காவாவது என்னை  ஒரு   டிவியாக பண்ணிவிடு என் வீட்டில்.

இப்படிக்கு……..”

இதை டீச்சர்  புருஷனுக்கு  படித்து  காட்டினதும் அவன்  சொன்னான். ”ச்சே   அந்த குழந்தையின் மனதில் எவ்வளவு வேதனை. எவ்வளவு  மோசமான பெற்றோர் அந்த குழந்தைக்கு  பார்த்தாயா?’  என்று  அங்கலாய்த்தான் டீச்சரம்மா சொன்னாள்:  “என்  பள்ளிக்கூடத்திலேயே  4 வது   படிக்கும் உங்க  பிள்ளை ரங்கு தான்  இதை  எழுதியிருக்கான். புரிஞ்சுக்குங்கோ?!’

கதை முடிந்துவிட்டது. இதிலும் ஒரு சின்ன வருத்தம். அந்த டீச்சர் தங்கள் குழந்தையை ‘உங்க பிள்ளை’ என்கிறாள். எவ்வளவு தப்பு?

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள் 

Advertisements

5 thoughts on “கடவுளுக்கு ஒரு கடிதம்

  1. வணக்கம்
    அம்மா

    நல்ல கதை

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது கூடிய அன்பு செலுத்த வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழத்துக்கள் அம்மா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

  2. “கடவுளுக்கு ஒரு லெட்டர்” மூலம் இன்றைய நிலையை (திரு சிவன் அவர்களுக்கும் நன்றி) அருமையாக சொன்னீர்கள்… // குழந்தையை அவர்களது நிலையிலிருந்து பார்க்க வேண்டும்… // சிறப்பு…

    வாழ்த்துக்கள்…

  3. பிஞ்சு மனதின் ஏக்கம் நெஞ்சைப் பிழிகிறது மிகவும் உருக்கமானக் கடிதம் தான் கடவுள் கண்டிப்பாக மனம் இரங்க வேண்டும் அருமையான பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s