குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் பொய் சொல்லுவதில் பெற்றோரின் பங்கு?

செல்வ களஞ்சியமே 57

 

‘குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம், வெளியில் அழைத்துப் போகிறோம் எதற்கும் குறை வைப்பதே இல்லையே, அப்படியும் என் குழந்தை பொய் பேசுகிறதே’ என்று பெற்றோர்கள் விசனப்படுகிறார்கள்.

 

வகுப்பில் ஆசிரியை தேர்வு முடிந்தபின் தாள்களை மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர்களின் கையெழுத்து வாங்கி வரச் சொல்லுகிறார். ரவி மிகவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். எப்போது கேட்டாலும் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார் என்கிறான். இவனது பையில் கையெழுத்திடாத தாள் இருப்பதை பார்த்த ஆசிரியை வகுப்பில் எல்லார் முன்னாலும் கோபிக்கிறார். ‘என்ன பெற்றோர்கள்’ என்று பெற்றோர்கள் மேல் அவரது கோபம் திரும்புகிறது.

 

வீட்டில் என்ன நடக்கிறது? ஏன் குறைந்த மதிப்பெண், நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறார், தந்தை. தாயும் அதையே சொல்லும்போது ரவியால் என்ன செய்யமுடியும்? ஆசிரியையும் சரி, பெற்றோர்களும் சரி ஏன் குறைந்த மதிப்பெண் வாங்கினாய், அப்பா ஊரில் இல்லை என்று ஏன் பொய் சொல்லுகிறாய் என்று கோபிக்கிறார்களே தவிர, அவன் அந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்க என்ன காரணம் என்று கேட்பதேயில்லை. ரவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

 

 

Advertisements

4 thoughts on “குழந்தைகள் பொய் சொல்லுவதில் பெற்றோரின் பங்கு?

  1. வகுப்பிலுள்ள அத்தனை மாணவரும் அதிக புள்ளி எடுக்க முடியுமா? எனும் உண்மையை நாம் உணரும் வரை இவ்வவலங்கள் தொடரும்.

  2. ஆசிரியஐயே இருந்ததினால் இந்த மாணவர்கள் படும் பாடு நன்றாகவே புரியும்.
    இரண்டு பக்கமும் இடி வாங்குபவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஆசிரியரிடமும் திட்டு வாங்கி பெற்றோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டு பரிதாபமாக இருக்கும் போது கை கொடுத்து உதவுவது பொய் தானே! அதனாலேயே பொய் பேச துணிகிறார்கள். ஆசிரியர், பெற்றோர், இருவரும் குழந்தைகளுக்கு ரோல் மாடல். . இருவருமே அந்தப் போருப்பயுனர்ந்து நடந்து கொண்டால் நல்லதொரு சமுதாயம் உருவாக உதவும்.

    மிக அருமையாக கதைகளைக் கொண்டு சுவாரஸ்யமாய் விளக்கி விட்டீர்கள். ரஞ்சனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s