குழந்தை வளர்ப்பு

பொய்யைப் பற்றிய சில உண்மைகள்

செல்வ களஞ்சியமே – 56

‘பொய் சொல்லக்கூடாது காதலி – பொய் சொன்னாலும் நீ என் காதலி’

எனக்கு மிகவும் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும், இல்லையா? இந்தப் பாடலுக்கும், நமது தொடருக்கும் என்ன சம்மந்தம், என்கிறீர்களா? குழந்தைகள் மட்டும் தான் பொய் சொல்லுவார்கள் என்பதில்லை; காதலன் காதலியிடமும், காதலி காதலனிடமும் பொய் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லை; கவிதைக்குப் பொய் அழகு என்கிறார் கவிஞர் வைரமுத்து.

 

இதையெல்லாம் ரசிக்கும் நாம் நம் குழந்தைகள் பொய் சொல்லும்போது வருத்தப்படுகிறோம். வேதனைப் படுகிறோம். ஏன்? எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் புளுகுகிறோம். ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் பார்ப்பதற்குமுன் பொய்யைப் பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போமா?

 

வர்ஜினியா பல்கலைக்கழக உளவியலாளர் பெல்லா டீபாலோ (Bella dePaulo) தனது சகாக்களுடன் பொய் பற்றி ஒரு ஆராய்ச்சியில் இறங்கினார். 77 பள்ளி மாணவர்களையும், 70 உள்ளூர் ஆசாமிகளையும் தேர்ந்தெடுத்து, ஒரு வாரத்திற்கு எப்போதெல்லாம் அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று குறித்து வைக்கச் சொன்னார்.

 

மேலும் விவரங்கள் : நான்குபெண்கள்lies

Advertisements

5 thoughts on “பொய்யைப் பற்றிய சில உண்மைகள்

  1. பொய் இல்லாமல் வாழ்க்கையில்லை என்பது புரிகிறது. எல்லோரும் ஏதோ ஒரு
    சமயத்தில் போய் சொல்லிக் கொண்டுதானிருக்கிறோம். என்பது தெரிந்தாலும், நீங்கள் சொல்வது போல், குழந்தைகள் பொய் சொல்லும் போது . அது ஒரு கொலைக் குற்றம் என்கிற மனப்பான்மையை உருவாக்குகிறோம். ஆனாலும், பின்னாளில் பொய் ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது.
    அருமையான பதிவு பொய் பற்றிய ஆராய்ச்சிப பதிவு.

  2. ஒரு வாரத்திற்கு எப்போதெல்லாம் அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று குறித்து வைக்கச் சொன்னார். //
    —- பொய் சொல்லாமல் குறித்துவைத்தார்களா ?? மெய்யாலுமா…! டவுட்டுதான் ..!!!!??

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s