சுயராஜ்யம் என்பது என்ன?

001

 

இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் ‘ஸ்வராஜ்’ என்ற தலைப்பில் திரு அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் ‘தன்னாட்சி’. மொழிபெயர்த்தவர் திரு கே.ஜி. ஜவர்லால் – இதயம் பேத்துகிறது வலைத்தளத்தின் சொந்தக்காரர். அதிலிருந்து சிலவரிகள் உங்களுக்காக:

 

இந்தப்புத்தகத்தின் முகவுரையில் திரு அண்ணா ஹசாரே கூறுவது:

‘நிஜமான ஜனநாயக அரசு என்பது தில்லியில் உட்கார்ந்திருக்கும் இருபது பேரால் நடத்தப்படுவது அல்ல. தில்லி, மும்பை, கல்கத்தா போன்ற முக்கிய நகரங்கள் அதிகார மையங்களாக இப்போது விளங்குகின்றன. இதை இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்க நான் விரும்புகிறேன்’. –  காந்திஜி

 

‘1950 –ல் நம்முடைய முதல் குடியரசு தினத்தைக் கொண்டாடும்போதே காந்தி சொன்ன இந்த வார்த்தைகளை மறந்துவிட்டோம். ஊழலும் விலைவாசி உயர்வும் சாமானியர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிக்கொண்டிருக்கின்றன. சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் பசியும், வேலையில்லாக் கொடுமையும் இன்னும் மறையவில்லை.

 

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பதுடன் ஜனநாயகத்தில் மக்களின் பங்கு முடிந்துவிடுவதில்லை. நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். அதிகார மையங்கள் தலைநகரங்களில் இருந்து வெளியேறி சமூகத்துக்கும் கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும்.

 

எந்தெந்த கிராமங்களில் மக்கள் தங்கள் நிலத்துக்கும், நீருக்கும் அரசாங்கத்தின் தலையீடின்றி திட்டமிட்டு உழத்தார்களோ அங்கெல்லாம் பசி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டன.வலுவான, தன்னிறைவு பெற்ற தேசத்தை உருவாக்க வேண்டுமானால் அரசியமைப்பில் மறுதலை உண்டாக்க வேண்டும். கிராம சபைகளுக்கும சமூக அமைப்புக்களுக்கும் அதிகாரம் இருப்பது மாதிரியான அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

 

 

திரு கெஜ்ரிவால் தனது புத்தகத்தில் கூறுவது:

இந்தியா ஜனநாயகத்தை எங்கே கற்றது? நிறையப்பேர் நாம் அமெரிக்காவைப்பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நாம் பிரிட்டனிலிருந்து கற்றுக் கொண்டோம் என்று சொல்லுகிறார்கள். புத்தர் காலத்திலிருந்தே ஜனநாயம் இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். உண்மையில் அந்தக் காலத்தில் இன்னமும் அழுத்தமாக, வலுவாக இருந்திருக்கிறது. வைஷாலி என்கிற பீகார் மாநிலத்தில் இருக்கும் புராதன நகரம் தான் உலகின் முதல் ஜனநாயகம்.

 

இந்த ஜனநாயகம் எப்போது மாறியது?

 

1830 –ல் அப்போதைய கவர்னர் ஜெனரல் மெட்கால்ஃப் கிராம சபைகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதை இங்கிலாந்துக்கு எழுதினர். கிராமங்களில் மக்கள் ஒன்று கூடித் தீர்மானங்கள் எடுப்பதை எழுதினார். இதை விட்டுவைப்பது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு 1860-ல் கிராம சபைகளைக் கலைக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பாசனம் கல்வி என்று எதையெல்லாம் கிராம சபைகள் சர்வ சாதாரணமாக நிர்வகித்துக்கொண்டு வந்தனவோ அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு துறை ஏற்படுத்தி ஒரு அதிகாரியும், உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

 

1947 – இல் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு வந்த போது துரதிர்ஷ்டவசமாக கிராம சபைகளிடம் அவர்களுடைய பொறுப்புகள் திருப்பித் தரப்படவில்லை. நாம் செய்ததெல்லாம் ஆங்கிலேய கலெக்டருக்கு பதில் இந்தியக் கலெக்டரை நியமித்ததுதான்! இதன் பெயர் சுயராஜ்யம் அல்ல.

*****************

இப்புத்தகம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று திரு அண்ணா ஹசாரே தமது முகவுரையில் குறிப்பிடுகிறார். எல்லோரும் படிக்க வேண்டிய விலையில் இருக்கவேண்டும் என்பதற்காக பதிப்பகத்தாரிடம் இப்புத்தகத்திற்கான ராயல்டி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார், திரு கெஜ்ரிவால்.

 

புத்தகத்தின் பெயர்: தன்னாட்சி

மூலம் ஆங்கிலம் ஆசிரியர்  திரு அர்விந்த் கெஜ்ரிவால்

மொழிபெயர்த்தவர்: திரு கே. ஜி. ஜவர்லால்

கிடைக்குமிடம்: கிழக்குப்பதிப்பகம்

விலை: ரூ. 80

எல்லோரும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதுடன் நமது ஜனநாயகக் கடமையைச் செய்ய மறக்க வேண்டாம். ப்ளீஸ்! உங்கள் வாக்குரிமைகளை பயன்படுத்துங்கள்! இந்தியாவிற்கு நல்ல காலம் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வோட்டுப் போடுவது ஒன்றே வழி!

 

குடியரசு தின வாழ்த்துக்கள்!

10 thoughts on “சுயராஜ்யம் என்பது என்ன?

 1. வணக்கம்
  அம்மா.

  உண்மையை சொல்லப் போனால் மகாத்மா காந்தி இல்லை அவர் இருந்திருந்தால் இப்படியான சம்பவங்களை பார்த்து கண்ணீர் சிந்திருப்பார்..அம்மா.படித்ததை மிக அழகாக எழுதியுள்ளிர்கள்… இந்த புத்தகம் எல்லோரிடமும் சென்றடையட்டும்…வாழ்த்துக்கள் அம்மா…
  (நீங்கள் நன்றாக ஓய்வு எடுங்கள்…..தேகத்துக்கு நல்லது) விவேகானந்தர் பற்றிய புத்தகம் எழுதி அதுவும் நிறைவு பெற்றது.. மிக்க மகிழ்ச்சிஅம்மா

  -நனறி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. இப்போ டெல்லி முதல்வரே அரசியல் சட்டத்தை மீறி உள்ளார்…
  அவரது மந்திரி சபை சாக…வரம்பு மீறி நடந்து உள்ளார்..டெ.மு.
  மீது தேர்தல் கமிஷன் கண்டனம் என்று எல்லாம் செய்திகள் வந்த வண்ணம்
  உள்ளது…இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்…யாருக்கு ஓட்டு போடுவது?
  2 மாநில கட்சிகள்…தங்கள் பக்கம் யார் யாரை இழுத்து போடுகிறார்களோ
  அவர்கள் தான் ஜெயிக்க போகிறார்கள்…போகின்ற எம்பீ-யை இயக்க போவது
  இந்த 2 கட்சி தலமைகள்தான்…இதில் யார் வந்தால் என்ன? காவிரி,கேரள நதி
  நீர் பிரச்சனையோ ,மீனவர் பிரச்சனையோ,நிரந்தரமாக தீரப்போகிறதா?
  சொல்லுங்கள்….

 3. இப்போ டெல்லி முதல்வரே அரசியல் சட்டத்தை மீறி உள்ளார்…
  அவரது மந்திரி சபை சாக…வரம்பு மீறி நடந்து உள்ளார்..டெ.மு.
  மீது தேர்தல் கமிஷன் கண்டனம் என்று எல்லாம் செய்திகள் வந்த வண்ணம்
  உள்ளது…இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்…யாருக்கு ஓட்டு போடுவது?
  2 மாநில கட்சிகள்…தங்கள் பக்கம் யார் யாரை இழுத்து போடுகிறார்களோ
  அவர்கள் தான் ஜெயிக்க போகிறார்கள்…போகின்ற எம்பீ-யை இயக்க போவது
  இந்த 2 கட்சி தலமைகள்தான்…இதில் யார் வந்தால் என்ன? காவிரி,கேரள நதி
  நீர் பிரச்சனையோ ,மீனவர் பிரச்சனையோ,நிரந்தரமாக தீரப்போகிறதா?
  சொல்லுங்கள்….

 4. நீங்கள் படித்து எழுதினதிலிருந்தே புத்தகம் எப்படி என்று புரிந்து கொண்டேன்.
  நல்ல கருத்துகள். கருத்துகளைத் தெரிந்து கொண்டாலே போதும். நடைமுறை ஆட்சி
  எப்படி என்று பார்க்கத்தான் போறோம். புத்தகம்,ஸ்வாரஸ்யமாக இருக்கும் போல
  இருக்கிறது.அன்புடன்

 5. குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி டெல்லியில் நடக்கும் காமெடி பஜார்தான் இப்போது ரேட்டிங்கில் முதலிடமாக இருக்கிறது. நம் நாட்டை எல்லாம் வல்ல இறைவன் ஒருவனால்தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறேன்

 6. ஆம் ஆத்மியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது போகப்போகத்தான் தெரியும். அவர்கள் ஆட்களைச் சேர்ப்பது, வசூல் செய்வது என்பனவற்றில் வேறு கருத்துக்கள் இருந்தாலும், அவர்கள் நல்லபடியாக செயல்பட்டு வெற்றிபெற வேண்டும் என்றே நினைப்பேன். அப்படி இல்லையென்றால் எதிர்காலத்தில் வரும் இத்தகு முயற்சிகளும் எள்ளி நகையாடப்படும் வாய்ப்புகள் அதிகம்.

  நல்ல மதிப்புரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s