குழந்தை வளர்ப்பு · Uncategorized

பிரசவத்திற்கு நேரம் பார்க்கலாமா?

 செல்வ களஞ்சியமே – 51

mother n baby

நான் சொல்லும் இந்த விஷயம் நடந்தது 1979 ஆம் வருடம். எனது உறவினர் ஒருவரை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த அழுத்தம் எகிறிப் போயிருந்தது. அவரது இரத்தவகை நெகடிவ் ஆகவும் கணவரது இரத்தவகை பாசிடிவ் ஆகவும் இருந்தது. அதனால் வேறு பிறக்கும் குழந்தையை வெகு பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று அவரை மருத்துவமனையில் பேறுகாலத்திற்கு முன்பே சேர்த்திருந்தார்கள். மருத்துவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்தார் அந்தப் பெண்மணி.

இரண்டு மாதங்கள் கழிந்தன. எப்படியும் சிசேரியன் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள். அதனால் மருத்துவர் எங்களிடம் நாளை சிசேரியன் செய்துவிடலாம் என்றவர், ‘நாளைக்கு நாள் நன்றாகத்தானே இருக்கிறது?’ என்று போகிற போக்கில் ஒரு கேள்வியையும் வீசிவிட்டுச் சென்றார்.  அவ்வளவு தான், எங்கள் இன்னொரு உறவினர், உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு நாள் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நாளைக்கு காலை 3.33 லிருந்து 3.45 க்குள் நல்ல நேரம், நட்சத்திரமும் நன்றாகயிருக்கிறது, அப்போது சிசேரியன் செய்யுங்கள் என்று மருத்துவர் திரும்ப வந்தபோது சொல்ல, அந்த மருத்துவருக்கு வந்ததே கோபம். ‘போனால் போகிறது என்று ஏதோ சொன்னால், நேரமெல்லாம் குறித்துத்தராதீர்கள். நீங்கள் சொல்லும் நேரம் வரும்வரை நான் கத்தியை வைத்துக் கொண்டு நிற்கவா?’ என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.

இப்போதும் காலம் ரொம்ப மாறவில்லை என்பதை சமீபத்தில் நான் பார்த்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி நிரூபித்தது.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

செல்வ களஞ்சியமே – 50

Advertisements

4 thoughts on “பிரசவத்திற்கு நேரம் பார்க்கலாமா?

  1. அந்த மருத்துவர் கத்தினாலும் வேலையைச் சரியாகச் செய்துவிட்டார். ஆனால் இன்றும் இந்தக்கூத்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்காலத்தில் ஜாதகம் காரணமாக எந்த சிசேரியன் குழந்தைக்கும் திருமணம் நடக்கமல் போகாதல்லவா.

  2. மகப் பிறப்பும் மழைப் பிறப்பும் மகேசனுக்கே தெரியாது என்று என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் கலியுகத்தில் எல்லாவற்றையும் மனிதர்களே தீர்மானிப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. என்ன காலமடா சாமி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s