குழந்தை வளர்ப்பு

இரட்டை குழந்தைகள் பிறப்பதின் ரகசியம்!

செல்வ களஞ்சியமே – 52

twins 1

சென்ற வருடம் (2013) ஜனவரி 11 ஆம் தேதி இந்தத் தொடர் ஆரம்பித்தேன். இந்தவாரத்துடன் ஒரு வருடம் ஆகிறது. எனக்கே ஆச்சரியமான விஷயம் இது. இதை எழுத எனக்கு உறுதுணையாக இருந்து, உற்சாகமூட்டி, முழு சுதந்திரம் கொடுக்கும் ‘நான்குபெண்கள்’ தளத்திற்கு எனது வணக்கமும், நன்றியும். இந்தத் தொடரை தொடர்ந்து படித்து கருத்துரை தந்து ஊக்கமளிக்கும் வாசக அன்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இரட்டைக் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 70% அதிகரித்திருக்கிறதாம். 2009 ஆம் ஆண்டில் 30 குழந்தைகளுக்கு ஒரு இரட்டையர் இருந்தனர்; 1980 இல் இது 53 குழந்தைகளுக்கு ஓர் இரட்டையர் என்ற கணக்கில் இருந்ததாம். இது எதனால்?

குழந்தை பெற்றுக் கொள்ளும் தாயின் வயது ஒரு காரணம் என்கிறது ஒரு ஆய்வு. தங்களது 30 வது வயதில் தாயாகும் பெண்ணிற்கு இரட்டையர் பிறக்கிறது. இயற்கையாக கருவுறும் பெண்களை விட கருவுறுதலுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிகம்.

நம்மை வியக்க வைக்கும் இன்னொரு செய்தி:

இரட்டையர் என்றால் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகள் என்பதுதான் நமக்குத் தெரியும். அப்படியில்லை என்கிறது இந்தச் செய்தி. இயற்கைமுறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் ஒரு தம்பதி செயற்கைமுறை கருத்தரிப்பு செய்துகொள்ள முடிவு செய்தனர். பெண்ணின் முட்டையும் விந்துவும் வெளியில் சோதனைச்சாலையில் இணைக்கப்பட்டு பிறகு பெண்ணின் கருப்பையில் இரண்டு சினைமுட்டைகள் வைக்கப்பட்டன. ஒன்று ஆண் குழந்தையாக உருவானது. இவர்களுடைய மற்ற மூன்று சினைமுட்டைகள் பதப்படுத்தி பத்திரமாக வைக்கப்பட்டன. சில வருடங்கள் கழித்து இந்த முட்டைகளில் ஒன்றை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து இந்த முறை ஒரு பெண் குழந்தை உருவானது.  என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே நேரத்தில் உருவான சினைமுட்டையிலிருந்து பிறந்ததால் இவர்களும் இரட்டையர் என்று சொல்லலாம்  என்கிறார்கள் மருத்துவர்கள்.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே – 51

Advertisements

6 thoughts on “இரட்டை குழந்தைகள் பிறப்பதின் ரகசியம்!

  1. விட்டுப் பிறந்தால் இரட்டையர் என முடியாது என்றே நம்புகிறேன். இரட்டை என்பதற்கு அர்த்தமே ஒரே நேரத்தில் இரண்டு என்பது. (or triplets, quadruplets,… எல்லாமே அப்படி ஒரே நேரத்தில் பல என்ற பொருளில் வருபவை). ஒரே பிரசவத்தில் சில நிமிடங்கள் விட்டுப் பிறந்தால் பரவாயில்லை. வேறு பிரசவத்தில் பிறப்பதை எப்படி இரட்டையர் என்பது?

  2. அப்த பூர்த்திக்கு வாழ்த்துக்கள் என் தம்பிக்கும் இரட்டை குழந்தைகள் தான் ஹரிஷ் விக்னேஷ் ஹரிஷ் அம்மா மாதிரி விக்னேஷ் அப்பா மாதிரி உருவம் குணங்கள் எல்லாம் அப்படியே உரித்துக்கொண்டு வந்துள்ளார்கள் ஒருவன் வேலை பார்க்கிறான் ஒரவன் எம் டெக் படிக்கிறான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s