இரட்டை குழந்தைகள் பிறப்பதின் ரகசியம்!

செல்வ களஞ்சியமே – 52

twins 1

சென்ற வருடம் (2013) ஜனவரி 11 ஆம் தேதி இந்தத் தொடர் ஆரம்பித்தேன். இந்தவாரத்துடன் ஒரு வருடம் ஆகிறது. எனக்கே ஆச்சரியமான விஷயம் இது. இதை எழுத எனக்கு உறுதுணையாக இருந்து, உற்சாகமூட்டி, முழு சுதந்திரம் கொடுக்கும் ‘நான்குபெண்கள்’ தளத்திற்கு எனது வணக்கமும், நன்றியும். இந்தத் தொடரை தொடர்ந்து படித்து கருத்துரை தந்து ஊக்கமளிக்கும் வாசக அன்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இரட்டைக் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 70% அதிகரித்திருக்கிறதாம். 2009 ஆம் ஆண்டில் 30 குழந்தைகளுக்கு ஒரு இரட்டையர் இருந்தனர்; 1980 இல் இது 53 குழந்தைகளுக்கு ஓர் இரட்டையர் என்ற கணக்கில் இருந்ததாம். இது எதனால்?

குழந்தை பெற்றுக் கொள்ளும் தாயின் வயது ஒரு காரணம் என்கிறது ஒரு ஆய்வு. தங்களது 30 வது வயதில் தாயாகும் பெண்ணிற்கு இரட்டையர் பிறக்கிறது. இயற்கையாக கருவுறும் பெண்களை விட கருவுறுதலுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிகம்.

நம்மை வியக்க வைக்கும் இன்னொரு செய்தி:

இரட்டையர் என்றால் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகள் என்பதுதான் நமக்குத் தெரியும். அப்படியில்லை என்கிறது இந்தச் செய்தி. இயற்கைமுறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் ஒரு தம்பதி செயற்கைமுறை கருத்தரிப்பு செய்துகொள்ள முடிவு செய்தனர். பெண்ணின் முட்டையும் விந்துவும் வெளியில் சோதனைச்சாலையில் இணைக்கப்பட்டு பிறகு பெண்ணின் கருப்பையில் இரண்டு சினைமுட்டைகள் வைக்கப்பட்டன. ஒன்று ஆண் குழந்தையாக உருவானது. இவர்களுடைய மற்ற மூன்று சினைமுட்டைகள் பதப்படுத்தி பத்திரமாக வைக்கப்பட்டன. சில வருடங்கள் கழித்து இந்த முட்டைகளில் ஒன்றை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து இந்த முறை ஒரு பெண் குழந்தை உருவானது.  என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே நேரத்தில் உருவான சினைமுட்டையிலிருந்து பிறந்ததால் இவர்களும் இரட்டையர் என்று சொல்லலாம்  என்கிறார்கள் மருத்துவர்கள்.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே – 51

பிரசவத்திற்கு நேரம் பார்க்கலாமா?

 செல்வ களஞ்சியமே – 51

mother n baby

நான் சொல்லும் இந்த விஷயம் நடந்தது 1979 ஆம் வருடம். எனது உறவினர் ஒருவரை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த அழுத்தம் எகிறிப் போயிருந்தது. அவரது இரத்தவகை நெகடிவ் ஆகவும் கணவரது இரத்தவகை பாசிடிவ் ஆகவும் இருந்தது. அதனால் வேறு பிறக்கும் குழந்தையை வெகு பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று அவரை மருத்துவமனையில் பேறுகாலத்திற்கு முன்பே சேர்த்திருந்தார்கள். மருத்துவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்தார் அந்தப் பெண்மணி.

இரண்டு மாதங்கள் கழிந்தன. எப்படியும் சிசேரியன் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள். அதனால் மருத்துவர் எங்களிடம் நாளை சிசேரியன் செய்துவிடலாம் என்றவர், ‘நாளைக்கு நாள் நன்றாகத்தானே இருக்கிறது?’ என்று போகிற போக்கில் ஒரு கேள்வியையும் வீசிவிட்டுச் சென்றார்.  அவ்வளவு தான், எங்கள் இன்னொரு உறவினர், உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு நாள் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நாளைக்கு காலை 3.33 லிருந்து 3.45 க்குள் நல்ல நேரம், நட்சத்திரமும் நன்றாகயிருக்கிறது, அப்போது சிசேரியன் செய்யுங்கள் என்று மருத்துவர் திரும்ப வந்தபோது சொல்ல, அந்த மருத்துவருக்கு வந்ததே கோபம். ‘போனால் போகிறது என்று ஏதோ சொன்னால், நேரமெல்லாம் குறித்துத்தராதீர்கள். நீங்கள் சொல்லும் நேரம் வரும்வரை நான் கத்தியை வைத்துக் கொண்டு நிற்கவா?’ என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.

இப்போதும் காலம் ரொம்ப மாறவில்லை என்பதை சமீபத்தில் நான் பார்த்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி நிரூபித்தது.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

செல்வ களஞ்சியமே – 50