குழந்தை வளர்ப்பு

இரட்டை குழந்தை

twins

செல்வ களஞ்சியமே – 50

 

‘சலசல ரெட்டைக்கிளவி, தகதக ரெட்டைகிளவி 
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ 
பிரித்து வைப்பது நியாயம் இல்லை, பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ’

தமிழ் படங்களுக்கு கதைகளை வாரி வழங்கும் வள்ளல்கள் இவர்கள். எத்தனை எத்தனை படங்கள்! ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எல்லோருக்கும் நினைவு இருக்கும். இரண்டு எம்ஜிஆர்கள். ஒருவர் பரமசாது; ஒருவர் முரடர். உத்தமபுத்திரன் சிவாஜி? ஒருவர் ஆட்டம்பாட்டம் என்றிருக்க, ஒருவர் இழந்த நாட்டை மீட்க (நடுவில் பத்மினியுடன் ‘முல்லை மலர் மேலே’ என்று பாடிக்கொண்டு) வீரமாக வில்லன்களுடன் போரிட்டுக் கொண்டிருப்பார். எங்கவீட்டுப் பிள்ளை எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய படம். Baby’s Day out படத்தை யாராலும் அவ்வளவு சுலபத்தில் மறக்கமுடியாது. இந்தக் கதையில் ஒரு குழந்தையைத்தான் கடத்துவார்கள். ஆனால் நடித்தது இரட்டையர். எப்போதும் சிரிக்கும் ஒரு பாப்பா; அவ்வப்போது ‘மூடி’ ஆகும் இன்னொரு பாப்பா!

இவ்வளவு முன்னுரை போதுமென்று நினைக்கிறேன். இதற்குள் நான் எதைப்பற்றி பேச விரும்புகிறேன் என்று புரிந்திருக்கும். இரட்டைக் குழந்தைகள் பற்றி இந்த வாரம் பேசலாம்.

இரட்டைக் குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்?

ஒரு சினைமுட்டை கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள் இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் (identical twins) என்று இருக்கும். அல்லது இரண்டு முட்டைகள் தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து இரண்டும் சினைமுட்டையாக மாறலாம். இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் (fraternal twins) தோன்றுவது உண்டு. சில சமயம் ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியும்போது முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டிக்கொண்டு அப்படியே கர்ப்பப்பையில் வளர்ந்து குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறப்பார்கள் (conjoined twins). இப்படிப் பிறக்கும் குழந்தைகளை சியாமிஸ் இரட்டையர் என்றும் சொல்லுவது உண்டு.

இரட்டையர் பிறப்பதற்கு காரணங்கள் என்ன?

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

Advertisements

3 thoughts on “இரட்டை குழந்தை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s