பதட்டம் வேண்டாம்

stress

செல்வ களஞ்சியமே 49

 

காது கேளாமை பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துரைகளில் ஒரு விஷயம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் கேட்கும் சக்தியை பரிசோதனை செய்து பார்க்கிறார்கள் என்பதுதான் அது. நம் நாட்டிலும் இவையெல்லாம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை நம் எல்லோருடைய வேண்டுகோளாகவும் மருத்துவத்துறையின் முன் வைப்போம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் இந்த மாதிரி பரிசோதனைகளை சரியான முறையில் வரவேற்பதில்லை. ‘எங்க வீட்டுல யாருக்கும் எந்தக் குறையும் இல்லை; அதனால இந்தப் பரிசோதனை எங்கள் குழந்தைக்கு வேண்டாம்’ என்று சொல்லுபவர்கள் நம்மில் அதிகம்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ‘குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போகவேகூடாது. ஏதாவது பேர் (வியாதியின் பேர்) சொல்லிடுவாங்க’ என்பார். ரொம்பவும் வியப்பாக இருக்கும். அவரது இரண்டாவது பெண் ‘போர்டில் டீச்சர் எழுதுவது தெரியவில்லை’ என்று சொன்னபோது ‘நல்லா உத்து பாரு, தெரியும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்தக் குழந்தை பாவம், ஒரு நாள் ஆசிரியரிடமே தன் குறையை சொல்லி அழுதிருக்கிறாள். அந்த ஆசிரியை சொன்னபிறகு கண் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துப் போயிருக்கிறார். கண் பரிசோதனை செய்து கண்ணாடியும் கொடுத்திருக்கிறார் மருத்துவர். அப்போது இந்த பெண்மணி என்ன சொன்னார் தெரியுமா? ‘இதுக்குத்தான் டாக்டர் கிட்ட போகவேகூடாது. இப்ப பாருங்க கண்ணாடி போட்டுக்கிட்டு, யார் இவளை கல்யாணம் செய்துப்பாங்க?’ நான் அசந்து போய் நின்றுவிட்டேன். இப்படியும் சிலர்!

நம்நாட்டில் குறைகளை வெளிப்படையாக பேசுவதை யாரும் விரும்புவதில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மனப்பான்மை நம்மிடையே அதிகம். முடிந்தவரை நம் குழந்தைகளின் குறைகளை மறைக்கப்பார்ப்போம். இது மிகப்பெரிய தவறு.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

குழந்தைகள் உலகம் 

12 thoughts on “பதட்டம் வேண்டாம்

  1. உண்மைதான். குழந்தைகளுக்குக் கண் பரிசோதனை செய்வது தடுப்பூசி போடுவது போன்று முக்கியம். இது என் குடுமபத்தினர் நம்பும் மருத்துவமனையில் உள்ள வாசகம். ஊர் ஊராய் கிளை பரப்பியிருக்கும் கண் மரித்துவமனையில் பார்க்காமல் இருப்பது நல்லது என்பது என் சொந்த அனுபவம்.

    1. வாருங்கள் பாண்டியன்!
      நம் நாட்டில் இன்னும் நோய் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக வரவில்லை என்றே சொல்லவேண்டும். நமக்குத் தெரிந்தவர்களை நாம் எச்சரிக்கை செய்யலாம். அவ்வளவுதான்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  2. பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    1. வாருங்கள் தனபாலன்!
      இணைப்பை சரிசெய்து விட்டேன்.
      தகவலுக்கு நன்றி!

    1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  3. வலைச்சர பாராட்டிற்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி!

Leave a comment