நோய்நாடி நோய்முதல் நாடி

உயிருடன் கண் தானம்

eye donation

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 26

 

இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் கண் தானம் செய்த பெண்மணி பற்றியது.

 

ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புட்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக்கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது கீழே விழுந்த தன்னுடைய கைபேசியை தேடி கிஷோர் அடுத்த நாள் அந்தப் பகுதிக்கு போயிருக்கிறார். அங்கிருந்த புதரில் தனது அம்மாவின் கண் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை மருத்துவ மனைக்கு எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அந்தக் கண் ‘உயிருடன்’ பழுதாகாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது எப்படி சாத்தியம்? மவுண்ட் அபுவில் அப்போது குளிர்காலம்.  அத்துடன், இரவு முழுவதும் பெய்த மழை இரண்டும் கண்ணை துளிக்கூட கெடாமல் பாதுகாத்துவிட்டன. மழையினால் கண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மவுண்ட் அபுவில் சுற்றுச்சூழல் மாசு மிகமிகக் குறைந்த அளவில் உள்ளதால் கண் அப்படியே இருந்திருக்கிறது.

 

சந்தோஷ் குடும்பத்தினர் அந்தக் கண்ணை ஒரு கண் வங்கிக்கு தானம் கொடுக்க முடிவு செய்தனர். என்னவொரு வியப்பான செய்தி, இல்லையா? உயிருடன் இருக்கும்போதே தன் கண்ணை தானமாகக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் ராஜ்புட்!

இன்னொரு செய்தி படிக்க: நான்குபெண்கள்

Advertisements

9 thoughts on “உயிருடன் கண் தானம்

 1. வியக்க வைக்கும் செய்தி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரஞ்சனி.கண் தானம் பற்றிய் செய்தி நல்ல விழிப்புணர்வு பதிவு. எல்லோருமே கண் தானம் செய்ய வேண்டும் .பார்வையற்றவர்கள் இல்லாத உலகமாக மாற ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
  உங்கள் நான்கு பெண்கள் தளத்திற்கு செல்கிறேன்.

 2. வணக்கம்
  அம்மா
  யாரும் இப்படியான செயலை செய்யமாட்டார்கள் அந்த பெண் மணி எப்போதும் ஒரு கண்மணிதான் போற்றப்பட வேண்டியவள்.பதிவு அருமை வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. மிக ஆச்சரியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!! கண்ணிழந்த ஒருத்தருக்கு எதிர்பாராத விதமாக கண் கிடைத்தது சந்தோஷம் என்றாலும் உடையவர் தன் கண்ணை இழந்த விதம் மிக சோகமானது!

 4. போற்றப்படவேண்டிய மானிட தெய்வங்கள் !! அருமையான பகிர்வு அம்மா .
  இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதனால் தான் பூமியில் மழையும்
  பொழிகிறது .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

 5. அருமையான பதிவு எத்தனை வித மனிதர்கள் உலகில் போற்றத் தக்கவர்களும் உள்ளார்கள் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  நன்றி தொடர வாழ்த்துக்கள்…!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s