கான்டாக்ட் லென்ஸ்

நோய்நாடி நோய்முதல் நாடி – 25

 contact lens

லியோனார்டோ டாவின்சி ஒரு இத்தாலிய மறுமலர்ச்சி பல்கலை வல்லுநர். ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, சங்கீதம், கணிதம், உடற்கூறு, பொறியியல், புவியியல், வரைபடங்கள், தாவரவியல் என்று பலதுறைகளிலும் அற்புதத் திறமைகளை கொண்டவர். இவரைப்பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுத வேண்டும். சட்டென்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் புகழ் பெற்ற மர்மப்புன்னகை பெண் ‘மோனாலிசா’ படத்தை வரைந்தவர்.

 

அவருக்கும், நமது மருத்துவக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இவர் வரைந்துள்ள ஓவியங்களில் பல மனித உடற்கூறு சம்பந்தமானவை. நாம் இந்த வாரம் தெரிந்துகொள்ள இருக்கும் தொடுவில்லைகள் (Contact lens) பற்றிய யோசனையை அந்தக் காலத்திலேயே இவர் தெரிவித்ததாக சரித்திரம் சொல்லுகிறது. 1508 ஆம் ஆண்டு டாவின்சி தனது Codex of the eye, Manual D, யில் கண்ணின் தன்மையைப் பற்றி சொல்லும்போது, ஒரு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி அதனுள் நமது தலையை அமிழ்த்தியோ அல்லது நீர் நிரம்பிய ஒரு கண்ணாடி அரைக்கோளத்ததை கண்ணின் மேல்புறத்தில் அணிந்து கொண்டோ விழிவெண்படலத்தின் ஒளிவிலகல் சக்தியை (Refractive power) நேரடியாக மாற்றி அமைக்கலாம் என்று தனது ஒரு ஓவியத்தில் காட்டியிருக்கிறார்.

 

1636 இல் ரீனே டிகார்ட்ஸ் என்பவர் திரவம் நிரம்பிய ஒரு கண்ணாடி உருளையை கண்ணின் விழிவெண்படலத்துடன் நேரடியான தொடர்பு இருக்கும்படி பொருத்தலாம் என்ற யோசனையை முன் வைத்தார். இதன் இறுதிப்பகுதி தெளிந்த, தூசுதும்பற்ற கண்ணாடியால் செய்யப்பட்டு பார்வையை சரிபடுத்தும்படி இருக்கும் என்றும் சொன்னார். ஆனால் இந்த இறுதிப்பகுதி சற்று வெளியே நீட்டிக் கொண்டு, கண் சிமிட்டுவதை தடுக்கும் என்பதால் இந்த யோசனை நடைமுறைப்படுத்த இயலாததாகிவிட்டது. 1801 இல் தாமஸ் யங் என்பவர், டிகார்ட்ஸ் – இன் யோசனைப்படியே ஒரு ஜோடி அடிப்படை தொடுவில்லைகளை வடிவமைத்தார். நீர் நிரப்பப்பட்ட இந்த வில்லைகளை தனது கண்களின் மேல் மெழுகைக் கொண்டு ஒட்டிக் கொண்டு தன் பார்வையை சரிபடுத்திக் கொண்டார்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

7 thoughts on “கான்டாக்ட் லென்ஸ்

  1. மோனாலிசா படம் அவ்வளவு அழகுங்களா? எனக்கென்னவோ நம்மூர்ல அதவிட மிகச்சிறந்த படைப்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. தர்க்கம் இருக்கட்டும். லென்சு பற்றிய பயனுள்ள பதிவு. நன்றி

    1. நீங்கள் கேட்பது ரொம்ப சரி. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேரில் பார்க்க சென்றவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகச் சொல்லுகிறார்கள்.
      இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? டாவின்சி தன்னையே ஒரு பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டு வரைந்த ஓவியம் இது என்று சொல்லுகிறார்கள். இதுதான் மோனாலிசாவின் மர்மப்புன்னகைக்கு காரணமோ?

  2. மிக அருமையான பதிவு ரஞ்சனி ஆனால் கண்ணாடியில் உள்ள சௌகர்யம் இதில் இருக்காது என்பதே என் எண்ணம்

  3. அறியாதன அறிந்தேன்
    அருமையான தகவலுடன் கூடிய
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

Leave a reply to ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் Cancel reply