காது கேளாமைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை

 

செல்வ களஞ்சியமே – 47

stemcell

 

சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய்  இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல் தானம் என்பது இரத்த தானம் போலத்தான். இரத்த தானம் கொடுப்பதற்கு முன் நமது இரத்தம் எந்தவகை, அதை பெறுபவர்களுக்கு நம் இரத்தம் ஒத்துப்போகுமா என்று பார்க்கிறார்கள் இல்லையா, அது போல ஸ்டெம்செல் தானத்திற்கு முன்பும் பல பரிசோதனைகள் உண்டு. இரத்த தானம் செய்ய பதிவு செய்துகொள்வது போலவே இந்த ஸ்டெம்செல் தானத்திற்கும் விருப்பமிருக்கிறவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

 

ஸ்டெம்செல் என்பது என்ன?

ஸ்டெம்செல் என்பது உயிரணுக்கள். இந்த உயிரணுக்கள் நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். இந்த ஸ்டெம்செல்கள் இரண்டு வகைப்படும். முதல்வகை embryonic stem cells (கரு உயிரணுக்கள்) இரண்டாவது வகை adult stemcells (வளர்ந்தவர்களின் உயிரணுக்கள்).

 

கரு உயிரணுக்கள்:  

குழந்தை தாயின் கருவிலிருக்கும்போது குழந்தையையும், தாயையும் இணைப்பது தொப்புள் கொடி. தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருக்கும் இரத்தம்.  கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று தூர எறியப்படும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். தொப்புள்கொடியில் இருக்கும் இரத்தம், கொடியின் கெட்டியான பகுதிகள் இவை இரண்டிலும் இருக்கும் உயிரணுக்களே கரு உயிரணுக்கள் என்று சொல்லப்படுகின்றன.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

4 thoughts on “காது கேளாமைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை

  1. ஸ்டெம் செல் பற்றிய செய்தி மிக மிக அருமை. ஆனால் உந்த ஸ்டெம்செல் முறைக்கு மிக அதிகமாக செலவாகும் என்று கேள்வி. அதுவுமில்லாமல் தடையில்லா மின்சாரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சங்கடங்கள் தீர்ந்தால் மிகவும் அருமையான மருத்துவ முறை தான்.
    நன்றி ரஞ்சனி உங்கள் பகிர்விற்கு.

  2. நிறைய விஷயங்களை உங்கள் பக்கம் வந்தால் தெரிந்து கொள்ள முடிகிறது,அப்படித்தான் இந்த ஸ்டெம்செல் சிகிச்சையும்.வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனி அக்கா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s