2013 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 58,000 times in 2013. If it were a concert at Sydney Opera House, it would take about 21 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

எல்லாம் இன்ப மயம்

 

 four hundred

ஜோசியம் பார்ப்பதை அதிகம் விரும்பாதவள் நான். காரணம் என்ன என்பதற்கு இன்னொரு பதிவு போடவேண்டும். அதனால் இப்போது வேண்டாம். ஆனால் இரண்டுமுறை என் கணவருடன் (மிகுந்த நம்பிக்கை அவருக்கு) எங்கள் எதிர்காலம் பற்றி அறிய போயிருந்தபோது (எதற்கு என்பதற்கு இன்னும் இரண்டு பதிவுகள் போடலாம்!) நேர்ந்த அனுபவங்கள் இன்றைக்கும் எனக்கு வியப்பு அளிப்பவை.

 

முதலாம் முறை போயிருந்தபோது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், ‘குருபலன் நன்றாகயிருக்கிறது. ஆசிரியராவீர்கள். புத்தகங்கள் எழுதுவீர்கள்’ என்றவுடன், வாய்விட்டு சிரித்தேன். புத்தகங்கள் படிப்பதைத் தவிர எழுதுவதை நினைத்துக்கூடப் பார்க்காத நேரம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லவேண்டும். அனுராதா ரமணனின் கதைகள் படிக்கும்போது இவரைப் போல எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஜோசியர் சொன்ன இரண்டுமே வெகு விரைவில் நடந்தது. ஆங்கிலம் பேச சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆனேன். வகுப்புகளுக்கு வேண்டிய புத்தகங்கள் தயார் செய்தேன். மற்றவர்கள் உருவாக்கிய புத்தகங்களை மெருகூட்டும் பணியும் செய்தேன். ஜோசியர் இன்னொன்றும் சொன்னார்: ‘பள்ளிக்கூடம் தொடங்குங்கள். உங்கள் நேரம் நன்றாக இருப்பதால் மிகச் சிறப்பாக நடக்கும்’. அந்தத் தப்பை மட்டும் செய்யவில்லை!

 

அடுத்தபடியாக என் தோழி ஒருவர் சொன்னார் என்று ஒரு பெண்மணியைப் பார்க்கப் போனோம். அப்போது நான் ஆசிரியை ஆகவில்லை. ஆனால் நேர்முகத்தேர்வு முடிந்திருந்தது. அந்தப் பெண்மணி தன்னை Energy Specialist என்று சொல்லிக் கொண்டார். என்னைப் பார்த்தவுடன் கண்களை மூடிக் கொண்டார் (அவ்வளவு மோசமாக இருந்தேனா?) சில நிமிடங்கள் கழித்து சொன்னார்: நீங்கள் ஆசிரியப் பதவியில் மிகப்பெரிய வெற்றியடைவீர்கள்’ என்று. மூடிய கண்களில் என்ன தெரிந்தது என்று கேட்டேன். நாதஸ்வரம் இசை கெட்டிமேளத்துடன்  வந்தது என்றார். இரண்டாம் முறையும் சிரித்து இவரது கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில், இந்தமுறை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

 

இந்தப்பெண்மணி சொன்னதும் நடந்துவிடவே கொஞ்சம் ஜோசியத்தில் நம்பிக்கை வந்தது. தொடர்ந்து ஜோசியம் பார்க்காமல் நிறுத்திக் கொண்டேன்.

 

என் பெண்ணின் திருமணம் எனது முதல் கதையாக, மங்கையர் மலர் ஆண்டு இதழில் வந்தது. என் மகனின் திருமணம் எனது முதல் வலைப்பதிவாக மலர்ந்தது. எனது முதல் புத்தகம் வரும் ஆண்டு வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தச் செய்தியையும் கூடிய விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

2 two

எனது வலைபதிவிற்கு இரண்டு வயது நிரம்பியிருக்கிறது. இது எனது 400 வது வலைபதிவு.

 

இந்த இரண்டு சந்தோஷங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

 

 

கான்டாக்ட் லென்ஸ் பாதுகாப்பு

contact lens

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 27

கான்டாக்ட்  லென்ஸ்கள் எப்படி உபயோகத்துக்கு வந்தன என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

நீங்கள் பயன்படுத்துவது மென்மையான (soft) லென்ஸ்களா, அல்லது கெட்டியான(hard) லென்ஸ்களா என்பதைப் பொறுத்து சுத்தம் செய்வதும் அமைகிறது. மென்மையான லென்ஸ்கள் வெகு விரைவில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் மாசுகளை இழுத்துக்கொள்ளும். இவை மட்டுமல்ல; நம் கண்ணீரில் இருக்கும் புரதச்சத்து கூட இந்த லென்ஸ்களின் மேல் படியக் கூடும். தினமும் இவைகளை சுத்தம் செய்வதன் மூலம் இந்த வகைப் படிமங்களை நீக்கலாம். உங்கள் கண்களிலிருந்து இந்த லென்ஸ்களை வெளியில் எடுக்கும் ஒவ்வொருமுறையும் திரும்ப அணிவதற்கு முன் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கென்றே கிடைக்கும் சிறப்பு திரவங்களின் மூலம் சுத்தம் செய்யலாம்.

சில அடிப்படையான சுத்தம் செய்யும் முறைகளைப் பார்க்கலாம்:

  • உங்கள் கைகளை முதலில் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அசுத்தமான கைகளுடன் லென்ஸ்களை தொட்டால் உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு அவைகளில் படியும்.
  • ஒரு கண்ணில் இருக்கும் லென்ஸை வெளியில் எடுத்து இன்னொரு உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
    சுத்தம் செய்ய உதவும் திரவத்தில் இரண்டு மூன்று சொட்டு லென்ஸின் வெளிபரப்பில் விடவும்.
  • ஆட்காட்டி விரலால் இந்த திரவத்தை லென்ஸ் முழுவதும் பரவுமாறு மென்மையாக ஒரு நிமிடம் தடவவும்.
    மறுபடியும் சுத்தம் செய்யும் திரவத்தாலேயே லென்ஸை கழுவி அதன் பெட்டியில் வைக்கவும்.
  • தண்ணீரால் ஒரு பொழுதும் மென்மையான லென்ஸ்களை கழுவாதீர்கள்.
  • லென்ஸ் வைக்கும் பெட்டியிலும் சுத்தம் செய்யும் திரவத்தை நிரப்பவும். அதற்குள் லென்ஸ் -ஐ வைக்கவும்.
  • ஒவ்வொரு முறையும் புதிதாக திரவத்தை நிரப்புங்கள்.
  • இன்னொரு லென்ஸையும் இதே போல சுத்த செய்யுங்கள்.

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

உயிருடன் கண்தானம் 

பதட்டம் வேண்டாம்

stress

செல்வ களஞ்சியமே 49

 

காது கேளாமை பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துரைகளில் ஒரு விஷயம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் கேட்கும் சக்தியை பரிசோதனை செய்து பார்க்கிறார்கள் என்பதுதான் அது. நம் நாட்டிலும் இவையெல்லாம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை நம் எல்லோருடைய வேண்டுகோளாகவும் மருத்துவத்துறையின் முன் வைப்போம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் இந்த மாதிரி பரிசோதனைகளை சரியான முறையில் வரவேற்பதில்லை. ‘எங்க வீட்டுல யாருக்கும் எந்தக் குறையும் இல்லை; அதனால இந்தப் பரிசோதனை எங்கள் குழந்தைக்கு வேண்டாம்’ என்று சொல்லுபவர்கள் நம்மில் அதிகம்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ‘குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போகவேகூடாது. ஏதாவது பேர் (வியாதியின் பேர்) சொல்லிடுவாங்க’ என்பார். ரொம்பவும் வியப்பாக இருக்கும். அவரது இரண்டாவது பெண் ‘போர்டில் டீச்சர் எழுதுவது தெரியவில்லை’ என்று சொன்னபோது ‘நல்லா உத்து பாரு, தெரியும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்தக் குழந்தை பாவம், ஒரு நாள் ஆசிரியரிடமே தன் குறையை சொல்லி அழுதிருக்கிறாள். அந்த ஆசிரியை சொன்னபிறகு கண் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துப் போயிருக்கிறார். கண் பரிசோதனை செய்து கண்ணாடியும் கொடுத்திருக்கிறார் மருத்துவர். அப்போது இந்த பெண்மணி என்ன சொன்னார் தெரியுமா? ‘இதுக்குத்தான் டாக்டர் கிட்ட போகவேகூடாது. இப்ப பாருங்க கண்ணாடி போட்டுக்கிட்டு, யார் இவளை கல்யாணம் செய்துப்பாங்க?’ நான் அசந்து போய் நின்றுவிட்டேன். இப்படியும் சிலர்!

நம்நாட்டில் குறைகளை வெளிப்படையாக பேசுவதை யாரும் விரும்புவதில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மனப்பான்மை நம்மிடையே அதிகம். முடிந்தவரை நம் குழந்தைகளின் குறைகளை மறைக்கப்பார்ப்போம். இது மிகப்பெரிய தவறு.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

குழந்தைகள் உலகம் 

உயிருடன் கண் தானம்

eye donation

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 26

 

இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் கண் தானம் செய்த பெண்மணி பற்றியது.

 

ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புட்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக்கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது கீழே விழுந்த தன்னுடைய கைபேசியை தேடி கிஷோர் அடுத்த நாள் அந்தப் பகுதிக்கு போயிருக்கிறார். அங்கிருந்த புதரில் தனது அம்மாவின் கண் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை மருத்துவ மனைக்கு எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அந்தக் கண் ‘உயிருடன்’ பழுதாகாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது எப்படி சாத்தியம்? மவுண்ட் அபுவில் அப்போது குளிர்காலம்.  அத்துடன், இரவு முழுவதும் பெய்த மழை இரண்டும் கண்ணை துளிக்கூட கெடாமல் பாதுகாத்துவிட்டன. மழையினால் கண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மவுண்ட் அபுவில் சுற்றுச்சூழல் மாசு மிகமிகக் குறைந்த அளவில் உள்ளதால் கண் அப்படியே இருந்திருக்கிறது.

 

சந்தோஷ் குடும்பத்தினர் அந்தக் கண்ணை ஒரு கண் வங்கிக்கு தானம் கொடுக்க முடிவு செய்தனர். என்னவொரு வியப்பான செய்தி, இல்லையா? உயிருடன் இருக்கும்போதே தன் கண்ணை தானமாகக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் ராஜ்புட்!

இன்னொரு செய்தி படிக்க: நான்குபெண்கள்

ATM – இல் பணம் வரவில்லையா?

 

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.?

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது.

ATM

 

இதுவரை அதிகாரவர்க்கத்தினரின் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கப்படுவது குறைந்து கொண்டே வரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI  (இந்தியன் நடுவண் வங்கி) யின் ஒம்பியூட்ஸ்மன் { Ombudsman }  என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்தும் சிறப்பாக செயலாற்றுகிறது என்பது இன்னொரு பெரும் மகிழ்ச்சியளிக்கும் உண்மை.

 

இதை நிரூபிக்கும் சென்னையில் நடந்த சுவாரசியமான செய்தி

Xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுப்பதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் ‘உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது’ என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

 

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியில் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

 

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார். அவர்தான் முதன் முதலில் ஒம்பியூட்ஸ்மன் { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்விபட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

இதன் விளைவாக மே 29 அன்று ரூபாய் 3000/-  xxxxxx – இன் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.  பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்தபட்ட வங்கி xxxxxx – ஐ பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல்  ஒம்பியூட்ஸ்மன்   “https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html  சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செய்யுங்கள்.  நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு ஒம்பியூட்ஸ்மன் க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு ஒம்பியூட்ஸ்மன் அதிகாரம் வாய்ந்தது.

இதை பார்க்கையில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு துறைக்கும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

CLICK THIS LINK TO LODGE YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

 

தகவல்: நன்றி திரு அனந்தநாராயணன்

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.

 anigif

 போட்டிக்கான தலைப்பு :

 1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.

 2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.

 3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.

4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?

 5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்

போட்டியின் விதிமுறைகள் :

1.  இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.

 2.  ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம்.  பதிவர்கள் அல்லாதவர்கள் அனுப்பலாம்.  ஆனால் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே ஏற்கப்படும்.

 3. கட்டுரையை தங்கள் தளத்தில் 10/01/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.

 4. பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தை தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளை படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் யுனிகோடு தமிழ் லதா (Unicode Tamil Font)  எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.

 5. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்

 6. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : svramani08@gmail.com, rupanvani@yahoo.com, dindiguldhanabalan@yahoo.com, pandi29k@gmail.com

 நடுவர்கள் விபரம்

Untitled-42copy

பரிசுகள்

 முதல் மூன்று பேர்களுக்கு : பதக்கம் + சான்றிதழ்

ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு : சான்றிதழ்

 புத்தகப் பரிசு : நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத்…

View original post 82 more words

(தி)சின்ன (தி)சின்ன ஆசை!

 

jilebi

 

எங்கள் தெருவில் நாங்கள் தவறாமல் பார்க்கும் ஒரு ‘ஒன் மேன் ஷோ’ இது:  எண்ணெய் நிறைந்த பெரிய வாணலி; ஒருவர் நின்று கொண்டு விடாமல் ஜிலேபிகளை அதில் பிழிந்து பிழிந்து வெந்தவுடன் எடுத்து பக்கத்தில் பெரிய தட்டையான பாத்திரத்தில் இருக்கும் சர்க்கரை பாகில் முக்கி முக்கி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார். அவர் இப்படி எடுத்து வைப்பதற்குள் அப்படி காணாமல் போய்விடும் இந்த ஜிலேபிகள். பொன்னிறத்தில் – இல்லையில்லை – ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் இந்த ஜிலேபிகளை பார்க்கும்போதே ‘ஜொள்ளு’ – ஸாரி, வாயில் நீர் ஊறும். எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு முறையாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னவர் ரொம்ப கோபித்துக் கொள்வார். ‘தெருவில் போற வர வண்டியெல்லாம் அந்த ஜிலேபி மேல புழுதியை வாரி அடித்துவிட்டு போகிறது. அத வாங்கி சாப்பிடணுமா? உனக்கு வேணும்னா சொல்லு, அகர்வால் பவன், இல்ல பாம்பே மிட்டாய்வாலா லேருந்து வாங்கிண்டு வரேன்….’ வாங்கி வந்து சாப்பிட்டும் இருக்கிறேன். ஆனாலும் புழுதி அடித்த ஜிலேபி ருசி எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

bajji

அதேபோல தெரு திரும்பியவுடன் ஒரு சின்ன உணவகம். கையேந்திபவன் தான். அதன் வாசலில் ஒருவர் ட்கார்ந்து கொண்டு பஜ்ஜி செய்வார். ஆஹா! அந்த வாசனை! ஊரையே தூக்கும். ஒரு நாள் என்னவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இங்கிருந்து பஜ்ஜி(கள்) வாங்கி வந்தேன். நன்றாகவே இருந்தது. சாப்பிட்ட பிறகும் ஒன்றும் ஆகவில்லை என்று நான் மகிழ்ந்திருந்த வேளை. மாடியில் இருக்கும் இவரது நண்பர் வந்தார். ‘நாராயணன், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’, எனக்கு வலது கண் துடித்தது. ஆ! ஏதோ கெட்டசெய்தி எங்கிருந்து வரப்போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர் தொடர்ந்தார்: ‘ரெண்டு நாள் முன்னால உங்க வைஃப் தெருக்கோடில இருக்கற பஜ்ஜி கடையில பஜ்ஜி வாங்குறத பாத்தேன். அதெல்லாம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு நல்லதல்ல; என்ன மாவோ, எத்தனை நாள எண்ணையோ, யாருக்கு தெரியும்?…..சொல்லுங்க….’

 

வலது கண் துடித்ததன் அர்த்தம் புரிந்தது.

 

குழந்தைகள் உலகம்

செல்வ களஞ்சியமே 48

cup and saucer

போன சனிக்கிழமை வழக்கம்போல திரு சுகி சிவம் அவர்களின் பேச்சைக் கேட்க உட்கார்ந்தேன். ‘எழுத்தாளர் கு. அழகிரிசாமி பற்றி இன்றைக்குப் பேசலாம்’, என்று ஆரம்பித்தார் சுகி சிவம்.

‘மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது எழுத்துக்கு ஒரு உதாரணம்: ‘சீதை நடந்தாள்; அழகாயிருந்தது. சூர்பனகை அழகாக நடந்தாள். கம்பன் இந்த இரண்டு இடத்திலும் ஒரே வார்த்தையை பயன்படுத்துகிறார். சீதை நடப்பதற்கும், சூர்பனகை நடப்பதற்கும் எப்படி ஒற்றுமை சொல்லமுடியும்? கு. அழகிரிசாமி சொல்லுகிறார்: சீதை நடப்பதே அழகு; ஆனால் சூர்பனகை அழகாக நடக்க வேண்டும் என்று நினைத்து நடந்தாள். சீதைக்கு அழகாக நடக்க வேண்டுமென்பதில்லை; அவள் நடப்பதே அழகு. பாசாங்கு தேவையில்லை. ஆனால் சூர்பனகையோ தன் மேல் நல்ல அபிப்பிராயம் வர வேண்டும் என்று அழகாக நடந்தாள். அதில் பாசாங்கு, நாடகம் இருந்தது’ இதைச் சொல்லிவிட்டு சுகி சிவம் ஒரு மிக அழகான உதாரணம் சொன்னார். குழந்தைகள் நம்மிடம் மழலையில் பேசும். நாமும், ‘தச்சி மம்மு சாப்பிடறயா?’ என்று குழந்தையைப்போலவே கேட்போம். எத்தனைதான் முயன்றாலும் நம்மால் குழந்தையைப் போல பேச முடியாது. அவர்களுக்கென்று தனி உலகம். அதில் நாம் நுழைய வேண்டுமானால் அவர்களாகவே மாற வேண்டும்.

 

இங்கு கப் சாசருக்கு என்ன வேலை என்று அறிய : நான்குபெண்கள்