நோய்நாடி நோய்முதல் நாடி – 24
அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி. மூக்குப் பாலத்தின் மீது உட்காருவதால் இந்தப் பெயரோ என்னமோ. யார் இந்த மூக்குக் கண்ணாடியை கண்டுபிடித்தவர்?
முதன்முதலாக இதைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ரோமானிய நடிகர் செனேகா (4BC – 65AD) என்பவர் ரோமிலிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிப்பதற்காக நீர் நிறைந்த கண்ணாடி கோளத்தை பூதக்கண்ணாடியாக பயன்படுத்தினார் என்று சரித்திரம் சொல்லுகிறது. பார்வையை மேம்படுத்தும் அல்லது நன்றாகப் பார்ப்பதற்கு உதவும் கண்ணாடிகள் கி.பி. 1000 மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ரீடிங் ஸ்டோன்ஸ் என்று அழைக்கப்பட்டன.
இடைக்காலத்தில் சில துறவிகள் கண்ணாடி கோளங்களை பூதக்கண்ணாடியாக பயன்படுத்தியதாகத் தெரிகிறது. 13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் நாட்டிலிருந்த கண்ணாடி தயாரிப்பாளர்கள் கெட்டியான கண்ணாடியால் ஆன ரீடிங் ஸ்டோன்களை தயாரித்தனர். இவற்றை மாட்டின் கொம்புகளாலோ, மரத்தாலோ ஆன சட்டத்தில் பொருத்தி ஒரே ஒரு லென்ஸ் ஆக பயன்படுத்தினார்கள். இவை நாம் பயன்படுத்தும் பூதக்கண்ணாடிகள் போன்று இருந்தன. சால்வினோ டி’யார்மேட் என்பவர் இதனைக் கண்டுபிடிப்பிடித்தார் என்று நம்பப்படுகிறது.
தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்
அதுவும் இதுவ்ம் ஒண்ணா?
ஹெஹெ சினிமா பார்த்துண்டே எழுதினதிலே தப்பு வந்துடுச்சு! :))) இதுவும் னு படிச்சுக்குங்க.
இணைப்பிற்கு செல்கிறேன் அம்மா…
கண்ணாடியின் வரலாறு அறிந்தேன். சுவாரசியமான தகவல்கள்
கண்ணாடி பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள இதோ இப்போதே போறேன்..:)
கண்ணாடி பின்னாடி இருக்கும் கதை மிக மிக சுவாரஸ்யம்.
அதை உங்களுக்கே உரிய நடையில் சுவாரஸ்யமா கொண்டு போயிருக்கிறீர்கள். நன்றி பகிர்விற்கு.