நோய்நாடி நோய்முதல் நாடி

சர்க்கரை நோயும் கண்களும்

நோய்நாடி நோய்முதல் நாடி – 23

diabetes image 

சர்க்கரை நோய்க்கு நம் நாடு தலைநகரமாக இருக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட முடியாது. இது பரம்பரை நோய். உங்களுக்கு இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள் ஆனால் நிச்சயம் சர்க்கரை நோயை விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ளுவதை வழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு சர்க்கரை கண்களை பாதிக்கும். 20 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளவர்களுக்கு கண்பார்வை இழப்பிற்கு சர்க்கரை நோய் முதல் மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது. சிறிய அளவில் ஆரம்பிக்கும் கண் குறைபாடுகள் சர்க்கரை நோயினால் அதிகரிக்கக்கூடும். அதனால் கண் பார்வையில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும் கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

இரத்தத்தில் இருக்கும் உயர்ந்த அளவு சர்க்கரை கண்களின் லென்ஸ்களை வீங்கச் செய்கிறது. இதனால் தான் பார்வை குறை ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கண்பார்வை மங்குவதே கண் கோளாறுகளின் ஆரம்பமாகவும் இருக்கக்கூடும்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் கண் கோளாறுகள்:

 • காடராக்ட் எனப்படும் கண்புரை நோய்
 • க்ளகோமா
 • ரெடினோபதி
 •  

காடராக்ட் என்பது கண் லென்ஸ்கள் மங்கலாகிப் போவது. கண் லென்ஸ்கள் தாம் நாம் பார்க்க உதவுவது. யாருக்கு வேண்டும்னாலும் இந்த நோய் வரலாம். ஆனாலும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே வரும் அபாயம் இருக்கிறது. இவர்களுக்கு சீக்கிரம் புரை வளரவும் செய்யும். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

க்ளகோமா

தொடர்ந்து படிக்க – நான்குபெண்கள்

Advertisements

7 thoughts on “சர்க்கரை நோயும் கண்களும்

 1. வணக்கம் அம்மா.
  அனைவருக்கும் பயன் தரக்கூடிய கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு கட்டுரை. நோய்நாடி நோய்முதல் நாடி தொடரே முற்றிலும் வித்தியாசமான சிந்தனை. தொடர்க. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா..

 2. வணக்கம்
  அம்மா

  கருத்து நிறைந்த அனைவருக்கும் பயன் பெறும் விழிப்புணர்வுக் கட்டுரை மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s