Uncategorized

வல்லிமா……!

prayers

நேற்றைய முன் தினம் (13.11.2013) நமது பதிவுலகத் தோழி திருமதி வல்லி (நாச்சியார்) சிம்ஹன் அவர்களின் கணவர் திரு நரசிம்மன் ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தி இடி போல வந்து துக்கத்தில் ஆழ்த்தியது.

சென்ற ஆண்டு பதிவர் விழாவில்தான் வல்லிமாவை  முதன்முதலாக சந்தித்தேன். தனியாக உட்கார்ந்திருந்த என்னிடத்தில் வந்து நெடுநாட்கள் பழகியவரைப் போல சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார் வல்லிமா. மனம் முழுக்க வியப்புடன் பேசிக்கொண்டிருந்தேன். கையில் ஒரு காமிராவுடன் அங்கு இருப்பவர்களையும், நிகழ்ச்சிகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பை நிறைய மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு வந்து வந்திருந்த அத்தனை பெண் பதிவர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரை அறிமுகப்படுத்தி பேசிய திரு சுரேகா கூறினார்: ‘ஒரு புகைப்பட போட்டியில் ஆரஞ்சு வண்ணத்தை  மையப் பொருளாகக் கொடுத்தபோது தான் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பியவர் வல்லிமா’

தனது உடல் நலிவுகளையும் நல்லவிதமாக எடுத்துக்  கொள்ளும் அவருக்கு இந்த துக்கம் வந்திருக்க வேண்டாம். எப்படித் தாங்கிக் கொள்ளுவாரோ என்று மனசு பதைபதைக்கிறது. தமது பதிவுகளில் தன் கணவரை ‘சிங்கம்’ என்று குறிப்பிடுவார். அந்த வார்த்தையில் கணவரின் மேல் இருக்கும் அளவில்லா அன்பு அப்படியே தெரியும். வல்லிமாவின் எல்லாப் பதிவுகளின் முடிவிலும் ‘எல்லோரும் இனிதாக வாழவேண்டும்’ என்ற பிரார்த்தைனை இருக்கும்.

வல்லிமா…. நாங்களும் உங்கள் துக்கத்தில் பங்கு கொள்ளுகிறோம். ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகள் இந்த பிரிவைத் தாங்கக் கூடிய சக்தியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்கட்டும்; உங்கள் கணவரின் ஆத்மா சாந்தியடையவும்,  உங்களது வாழ்க்கைப் பயணம் உங்கள் ‘சிங்கத்தின்’ நினைவில் அமைதியாக கழியவும் பிரார்த்திக்கிறோம்.  

Advertisements

17 thoughts on “வல்லிமா……!

 1. எங்களது பிரார்த்தனைகளும்……

  எல்லாம் வல்லவன் அவருக்கு இந்த சமயத்தில் மனோபலத்தினையும் தைரியத்தினையும் தரட்டும்….

 2. மிகவும் வருத்தமான செய்தியாகத்தான் உள்ளது. வாழ்க்கைத்துணையைப் பிரிந்தவருக்கு நாம் என்னதான் ஆறுதல் சொல்ல ? ;(

  தாங்கக் கூடிய சக்தியை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆண்டவன் கொடுக்கட்டும்

 3. செய்து அதிர்ச்சியைத்தந்தது.இனிக்க இனிக்க இனிய முகம் காட்டும் வல்லிம்மாவின் துயரம் கண்டு மனம் வேதனை அடைகிறது.இந்த பிரிவைத் தாங்கக் கூடிய சக்தியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வல்ல இறைவன் கொடுக்கட்டும்;

 4. செய்து அதிர்ச்சியைத்தந்தது.இனிக்க இனிக்க இனிய முகம் காட்டும் வல்லிம்மாவின் துயரம் கண்டு மனம் வேதனை அடைகிறது.அன்பின் வல்லிம்மா இந்த பிரிவைத் தாங்கக் கூடிய சக்தியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வல்ல இறைவன் கொடுக்கட்டும்;

 5. வல்லியம்மாவின் கணவர் இறந்தமைக்காக என் மனமும் வேதனையடைகிறது.ஆழ்ந்த வருத்தங்களை பிரிவால் வாடும் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்

 6. தங்கள் பதிவின் மூலம் வல்லியம்மா அவர்களின் நல்ல குணம் தெரிகிறது, நல்லவர்களுக்கே சோதனை வருகிறது. கணவரை இழந்து வாடும் வல்லியம்மா அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 7. எதிர்பாராத சோகம். உங்கள் பதிவின் வழியே, நானும் சகோதரி நாச்சியார்’ வல்லி சிம்ஹனுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 8. வணக்கம்
  அம்மா

  உங்களின் வலைப்பூவில் அனுதாபச்செய்தியை பாரத்தபோது மனம் வலித்தது.
  வாழ்க்கைத் துணைவனை இழந்து வாடும் வள்ளியம்மாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 9. வாழ்க்கைத்துணையின் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு எதைச் சொல்லி எப்படி சொல்லி ஆறுதல் செய்ய முடியும். கடவுள் ஒருவர்தான் அவருக்கு மன ஆறுதலை கொடுக்கவேண்டுமென நாம் பிரார்த்திக்க முடியும் அவருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் வல்லிமாவின் மன திடத்திற்காக நாங்கள் கண்டிப்ப்பாக பிரார்த்தனை செய்வோம்

 10. உங்கள் பதிவர் ஸந்திப்பின் கட்டுரை மூலம்தான் அவரைத் தெரிந்து கொண்டேன். வல்லி அம்மாவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம்தான்
  அவருக்கு மனஆறுதலைக் கொடுக்க வேண்டும். அதுவே என் ப்ரார்த்தனையும். உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s