நோய்நாடி நோய்முதல் நாடி

மனநல முதலீடு

 

be happy

போனவாரம் காப்பீடு முதலீடு பற்றிப் பார்த்தோம். நேர முதலீடு பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் நாம் மனநல முதலீடு பற்றிப் பேசலாம்.

 

மன நலம்!

நமக்கு வரும் நோய்கள் பலவும் மனதைச் சார்ந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளான பலர் தங்கள் மனோபலத்தால் அதை ஜெயித்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம். அக்கம்பக்கத்திலும் கேள்விப்படுகிறோம். மனம் என்பது மிக வலிமையான ஆயுதம். நம்மில் எத்தனை பேர் மனநல முதலீடு செய்கிறோம்?

 

அதென்ன மனநல முதலீடு? உடல் ஆரோக்கியம் போலவே மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி; மனதிற்கு? மனதிற்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவைதான் யோகா, தியானம் ஆகியவை. மனம் அமைதி இல்லாமல் தவிக்கும் போது இவை நம்மை அமைதிப் படுத்துகின்றன. இவற்றிக்கென இருக்கும் மையங்களில் சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். தவறாமல் வீட்டிலும் பயிற்சி செய்யுங்கள்.

 

நான் நீண்ட நாட்களாக (வருடங்களாக என்று கூடச் சொல்லலாம்) இளைக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். ஊஹும்…ஒன்றும் நடக்கவில்லை. ஒரு சொலவடை உண்டு ஆங்கிலத்தில் : Absence of disease doesn’t mean you are healthy என்று. நோய்கள் எதுவும் இல்லை என்பதாலேயே நாம் ஆரோக்கியசாலிகள் இல்லை. அதிக எடை இருப்பதே ஆரோக்கியக் குறைவு தான். என்ன செய்வது? மருத்துவரிடம் போனேன்.

 

எல்லா பரிசோதனைகளும் செய்தார். எல்லாம் நார்மல். எடை ஒன்றைத்தவிர. என்ன செய்யலாம்? மருத்துவர் சொன்னார்: ‘நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள் போலிருக்கிறது. பீ ஹேப்பி!’

 

‘என்ன ஸார், இது? எடை கூடுதலாக இருக்கிறதே என்று நான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் பீ ஹேப்பி என்கிறீர்களே?’

 

‘கொஞ்சம் மாத்தி யோசியுங்களேன். எடை கூடுதல், ஆனால் அதிகப்படியான தொந்திரவுகள் எதுவும் இல்லை. தினமும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லையே. தினமும் இரத்த அழுத்தம் பார்க்க வேண்டாம். தினமும் சர்க்கரை அளவு பார்க்க வேண்டாம், இதெல்லாம் சந்தோஷம் தானே!’

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

Advertisements

5 thoughts on “மனநல முதலீடு

  1. வணக்கம் அம்மா…
    நோய் இல்லாதவர்கள் ஆரோக்கியமானவர்கள் இல்லை என்பது முற்றிலும் அம்மா. உடல் பருமன் உள்ளவர்களுக்கு தங்கள் பதிவு நிச்சயம் ஆறுதல் அளிக்கும். பகிர்வுக்கு நன்றி.

  2. “அதென்ன மனநல முதலீடு? உடல் ஆரோக்கியம் போலவே மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி; மனதிற்கு? மனதிற்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவைதான் யோகா, தியானம் ஆகியவை. மனம் அமைதி இல்லாமல் தவிக்கும் போது இவை நம்மை அமைதிப் படுத்துகின்றன. இவற்றிக்கென இருக்கும் மையங்களில் சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். தவறாமல் வீட்டிலும் பயிற்சி செய்யுங்கள்.” என்ற வழிகாட்டலை பெரிதும் வரவேற்கிறேன்.

  3. மன நல முதலீடு எத்தனை முக்கியமானது என்பது விளங்குகிறது.
    ஆனால் நீங்கள் சொல்வது போல்நிறைய பேர் பழைய துன்பங்களைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை.அவர்களும் பாசிடிவ் என்னகளுடன் வாழப் பழகலாம்.
    வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s