நோய்நாடி நோய்முதல் நாடி

வெள்ளை ஊன்றுகோல்

220px-ID_cane

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 21

 

ஒருமுறை ஏற்காடு போயிருந்தோம். கிளிமூக்கு அருவிக்குப் போகிற வழி ஏற்ற இறக்கமாக, ரொம்பவும் செங்குத்தாக இருந்தது. நாங்கள் நடக்கத் தடுமாறுவதைப் பார்த்த ஒருவர் சொன்னார், ‘ஒரு மரக்கிளையை ஒடித்து அதை ஊன்றிக் கொண்டு நடங்கள். சமநிலை தவறாது’ என்று. ஊன்றுகோல் வைத்துக்கொள்ள அவர் சொன்ன காரணம் கொஞ்சம் வியப்பாக இருந்தது. கையில் ஆளுக்கு ஒரு கோல் வைத்துக் கொண்டு நடந்தபோது தான் அவர் சொன்னது ரொம்பவும் சரி என்று புரிந்தது.

 

நம்மைப் பொறுத்தவரை வயதானவர்கள் தான் ஊன்றுகோல் வைத்துக் கொண்டு நடப்பார்கள். சின்ன வயதில் வேண்டாம் என்று நினைக்கிறோம். தாத்தா தடி என்றே இவற்றைக் குறிப்பிடுகிறோம். வயதானவர்கள் மட்டுமல்ல; கண் பார்வை இழந்தவர்களும் கூட கையில் ஒரு வெள்ளைக் கோலுடன் நடப்பதைப் பார்க்கிறோம்.

 

வொயிட் கேன் (White Cane) என்று அழைக்கப்படும் வெள்ளைக் கோல் அல்லது பார்வையிழந்தவர்கள் பயன்படுத்தும் வழித்துணைக் கோல் பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

 

இந்தக் கோல் பார்வையிழந்தவர்கள் சுலபமாக இயங்குவதற்குப் பயன்பட்டாலும், முக்கியமாக அடுத்தவருக்கு தான் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்று தெரிவிக்கவும் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் கோல் முழுவதும் வெள்ளை நிறத்திலும்  நுனிப் பகுதி சிவப்பு வண்ணத்திலும் இருக்கும்.

 

பல நூற்றாண்டுகளாக பார்வையிழந்தவர்கள் தங்களின் இயக்கத்திற்காக கோல் பயன்படுத்தி வந்தாலும் முதல் உலகப் போருக்குப் பிறகு தான் இந்த வெள்ளை கோல் உபயோகத்திற்கு வந்தது. பிரிஸ்டல் – ஐ சேர்ந்தஜேம்ஸ் பிக்ஸ் (James Biggs) என்பவரால்  1921 ஆம் வருடம்  முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவர் ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு விபத்தில் பார்வையை இழந்த இவர், வெளியே போகும்போது நெரிசலான போக்குவரத்தை சமாளிப்பதற்காக தனது நடைகோலுக்கு வெள்ளை வண்ணம் அடித்து பயன்படுத்தத் தொடங்கினார். வெள்ளை வண்ணம் எல்லோருக்கும் ‘பளிச்’ சென்று தெரியும் என்பதும் ஒரு காரணம். சிவப்பு வண்ணம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் அபாயம் என்பதைக் குறிக்கும் வண்ணம். வண்டியோட்டிகளுக்கு சட்டென்று இந்த இரண்டு வண்ணங்களும் தெரியும். அதனாலேயே இந்தக் கோல்களை வெள்ளை மற்றும் நுனியில் சிவப்பு என்ற வண்ணங்களைப் பயன்படுத்தி அமைக்கிறார்கள்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

Advertisements

4 thoughts on “வெள்ளை ஊன்றுகோல்

  1. ஊன்றுகோல் பற்றி இத்தனை விபரமாக எனக்குத் தெரியாது. அறிந்து மகிழ்ந்தேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்மா!

  2. வணக்கம் அம்மா.
    ஊன்றுகளுக்கு பின்னாடி இருக்கும் வரலாற்றைத் தங்கள் மூலமே தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றிகள்.
    அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s