தீபாவளி

சாம்பார் ஊத்தும்மா……!

 

தீபாவளி என்றால் ஒரு சம்பவம் தவறாமல் எனக்கு நினைவுக்கு வரும்.

 

ஒருமுறை நானும் என் தோழியும் ‘கல்யாணப்பரிசு’ படம் பார்க்கப் போயிருந்தோம்.  என் தோழிக்கு ரொம்பவும் இளகிய மனது. சோகப் படம் என்றால் பிழியப் பிழிய அழுவாள். அழுது அழுது சினிமா அரங்கமே அவளது கண்ணீரில் மிதக்கும். எனக்கோ அவளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.

 

கல்யாணப்பரிசு படம் பாதிவரை நன்றாகவே இருந்தது. தங்கவேலு, சரோஜாவின் நகைச்சுவைக் காட்சிகளை ரொம்பவும் ரசித்துக் கொண்டிருந்தோம். அப்புறம் வந்தது படத்தில் ஒரு திடீர் திருப்பம்.

 

தான் விரும்பும் ஜெமினி கணேசனையே தன் அக்காவும் (விஜயகுமாரி) விரும்புவது தெரிந்து தங்கை சரோஜா தேவி தன காதலைத் தியாகம் செய்கிறார். (இந்த இடத்தில் என் தோழியின் அழுகையும் ஆரம்பித்தது.) ஜெமினியும் விஜயகுமாரியும் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தச் செல்லுகிறார்கள். ரயில் நிலையத்தில் இருவரையும் வழி அனுப்ப வரும் சரோஜாதேவி கண்ணீருடன் கையை அசைத்து அவர்களுக்கு விடை கொடுப்பார். பின்னணியில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ பாட்டு ஒலிக்கும்.

 

என் தோழியால் அழுகையை அடக்கவே முடியவில்லை. பொதுவிடம் என்பதையும் மறந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். என் சமாதானங்கள் அவளிடம் செல்லவேயில்லை. சொல்லப்போனால் அரங்கம் முழுவதுமே சோகமான சூழல் தான். பலரும் ‘ப்ச்…ப்ச்’…..’ என்று சரோஜாதேவியின் நிலைக்கு வருந்திக் கொண்டிருந்தார்கள்.

 

அடுத்த சீன். வெளியூரில் விஜயகுமாரியும், ஜெமினியும் குடித்தனம் நடத்துவதைக் காட்டினார்கள். ஜெமினி சோகமான முகத்துடன் சாப்பிட உட்காருவார். வி.குமாரி சாதம் போடுவார். திடீரென்று அரங்கத்தில் ஒரு குரல்: ‘சாம்பார் ஊத்தும்மா…!’ என்று.

 

அடுத்த கணம் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். என் தோழிக்கோ ஒரே கோவம். ‘ச்சே! என்ன மனிதன்! அங்க ஒருத்தி கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும்போது இப்பிடியா ஜோக் அடிக்கிறது!’ என்று பொரிந்து தள்ளினாள். நான் சிரிப்பது அவளது கோவத்தை இன்னும் அதிகமாக்கியது. ‘மனசாட்சி இருந்தால் நீ இப்படி சிரிக்க மாட்டே!’ என்று என்னை கோபித்துக் கொண்டாள்.

 

‘ஏய்! இது வெறும் சினிமா. இதற்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வரது?’ என்று நான் கேட்டவுடன் தான் அவள் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள்.

 

இந்தப் படத்தில் வரும் அழகான தீபாவளி பாட்டு இதோ உங்களுக்கு.

 

முதலில் சந்தோஷமாகப் பாடப்படும் இந்தப்  பாடல் பிறகு சோகமாகவும் பாடப்படும். நான் சந்தோஷத்தை மட்டுமே உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.

 

சில நாட்களாக இணையத்திற்கு வர முடியாத நிலை. இந்த நிலை இன்னும் பல நாட்கள் தொடரும் என்று தோன்றுகிறது. இதனால் பலருடைய பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் போட முடியவில்லை. எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

 

தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டாமா? அதனால் இந்தப் பதிவு.

 

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

 

Advertisements

25 thoughts on “சாம்பார் ஊத்தும்மா……!

 1. நீங்களும் ‘சாம்பார்’னுதான் சொல்லுவீங்களா!! என்னுடைய சகோதர சகோதரிகள் அப்படித்தான் சொல்லுவார்கள். தீபாவளியன்று நம்ம ஊர் டிவியில் இந்த பாட்டு கட்டாயம் ஒளிபரப்பாகும். உங்களால் மீண்டும் பார்க்கிறேன் பழைய நினைவுகளுடன்.உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

 2. சூழ்நிலையை ‘சட்’டென எளிதாக்கிய அந்த மனிதர் வாழ்க! எனக்கும் சிரிப்பு வந்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

 3. வணக்கம்
  அம்மா

  உங்களின் தோழி பற்றி கூறிய விதம் நன்று பதிவு அருமை வாழ்த்துக்கள் அம்மா…
  பலவேலைகளுக்கு மத்தியில் உங்களின் எழுத்தை படித்து இரசிக்கும் ஒரு வாசகன்நான் என்னைப்போன்று எத்தனை நெஞ்சங்கள் உள்ளது…நீண்ட நாட்களு பின்பு ஒரு தீபாவளி விருந்தாக உள்ளது …இந்தப் பதிவு
  மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 4. தியேட்டரில் படம் பார்க்கும் பெண்கள் கண்களை கசக்க வேண்டும் என்பதற்காகவே அந்நாளைய படங்களில் கதை, காட்சிகளை அமைத்தார்கள். சின்ன வயதில், நான் என் அம்மாவுடன் அடம் பிடித்து தியேட்டரில் படம் பார்த்தபோது, சிவாஜி, ஜெமினி நடித்த படங்களில் படம் பார்த்த பல பெண்கள் கதையோடு ஒன்றி அழுததைப் பார்த்து இருக்கிறேன். பாசமலர், கல்யாணப் பரிசு – இந்த ரகப் படங்கள். அது என்னவோ? ஜெமினி வந்தாலே தியேட்டரில் “ சாம்பார் சாம்பார் “ என்று சிலர் கத்துவார்கள். தீபாவளியை முன்னிட்டு மலரும் நினைவுகளோடு ஒரு சுவையான பதிவு. கல்யாணப் பர்சில் அழுத உங்களது தோழி இப்போது அதைப் பற்றி என்ன சொல்லுகிறார்?

  நானும் தீபாவளி பற்றிய எனது பதிவில் இந்த பாடலை சொல்லி இருக்கிறேன்.
  எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

 5. / என் தோழியால் அழுகையை அடக்கவே முடியவில்லை. பொதுவிடம் என்பதையும் மறந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். என் சமாதானங்கள் அவளிடம் செல்லவேயில்லை//

  உண்மையைச் சொல்லப்போனால் நானும் தியேட்டரில் அழுதேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த கல் நெஞ்சுக்காரியோ
  அது என்ன ? சினிமா காட்சி இது… யாருனாச்சும் உங்களைப் பாத்தா சிரிப்பாங்க… என்றாள்.

  உனக்கு இது மாதிரி நடந்தா அழுவியா சிரிப்பியா ? என்று வெகுளி நான் கேட்டுவிட்டேன்.

  அப்பாடா… தொல்லை விட்டது என்று நினைச்சுப்பேன் என்று சொல்லிவிட்டு, நறுக் என்று கிள்ளியது
  இன்னும் வலிக்கிறது.

  சுப்பு தாத்தா.

 6. அது சரி…
  சரோஜா தேவி கையிலே கொஞ்சிக்கிட்டு இருக்கிற
  குழந்தை இன்னிக்கு எங்கே எப்படி இருக்கான் ?

  யாருக்காவது தெரியுமா ?

  அவனுக்கும் தாத்தாவின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும்
  சொல்லுங்கள் ரஞ்சனி அம்மா.

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  அது சரி…
  சரோஜா தேவி கையிலே கொஞ்சிக்கிட்டு இருக்கிற
  குழந்தை இன்னிக்கு எங்கே எப்படி இருக்கான் ?

  யாருக்காவது தெரியுமா ?

  அவனுக்கும் தாத்தாவின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும்
  சொல்லுங்கள் ரஞ்சனி அம்மா.

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

 7. ஹாஹாஹா, நீங்களும் என் கட்சி தான் போல! கெளரவம் படத்தில் சோகமான காட்சியிலும், ராமன் எத்தனை ராமனடி படத்தின் சோகக் காட்சியிலும், சிரித்துக் கொண்டிருந்த ஒரே ஆள் நானாய்த்தான் இருக்கும். :)))) அழறவங்களைப் பார்த்துச் சிரிப்பு இன்னும் ஜாஸ்தி ஆகும். :))))

  என் மன்னி தொலைக்காட்சித் தொடர்களில் கூட வில்லியையும், வில்லனையும் கோவிச்சுப் பேசுகையில் சிரிப்புத் தாங்காது. :))))

 8. நானும் உங்கள் தோழி ரகம் தான் . நான் சினிமா பார்க்க சென்றால் கண்டிப்பாக ” டவல் ” எடுத்து செல்ல எனக்கு குடும்பத்தினர் அறிவுரை செய்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
  ஆனாலும் சூழ்நிலையை ஜாலியாக்கிய அந்த மனிதர் பாராட்டப்பட வேண்டியவரே!
  நீங்கள் உங்கள் வசதிப் போல் இணையம் பக்கம் வாருங்கள். நீங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். காத்திருப்போம்.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 9. ரஸித்தேன்.ஸாம்பாரை ஊற்றினால் சாப்பிடும்போது சோகம் குறையுமென்று கத்தியிருப்பார் இல்லையா ய இப்பவும் ஸீரியல் பார்த்து மாமியாரைத் திட்டுபவர்களும்,சோகத்தைப் பார்த்து அழுபவர்களும் உண்டு. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டது போகட்டும். நிகழ்ச்சியை ஸ்வாரஶ்யமாகத் தொடுத்துக்
  கொடுத்தது இருக்கே, அதற்குப்பாராட்டுகள். உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களும்,ஆசிகளும். அன்புடன்

 10. உணர்வுகளை ரசித்து படம் பார்ப்பவர்களை உங்களுக்குப் பிடிக்காதோ? நானும் சின்னவளாக இருக்கும்போது இப்படித்தான் ஒன்றித்தான் பார்ப்பேன் ” அக்கா பாவம் குளத்தில் விழுந்து விட்டாளே அண்ணா என் இப்படி சண்டை போடுகிறான் “என தொணதொணத்து கொண்டேதான் இருப்பேனாம் என் அம்மா சொல்வார். எனக்கு பிடித்த அருமையான பாடல்களில் ஒன்றை தீபாவளி பரிசாகக் கொடுத்தமைக்கு நன்றி ரஞ்சனி நீதிபதி பதவியில் உட்கார்ந்ததில் களைத்து விட்டீர்களா? தீபாலளி பட்சணங்கள் சாப்பிட்டு தென்பு கொண்டு எழுந்து வாருங்கள் உங்களூக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 11. சின்ன வயசுல நானும் உங்க தோழி மாதிரிதான் இருந்தேன். அப்புறம் பல சோதனைகளைச் சந்திச்சும், நிறைய சினிமாக்களைப் பார்த்தும் கொஞ்சம் தேறி, பக்குவமாயிட்டேன். சரியான சமயத்துல ‘விட்’ அடிச்ச அந்த நபரோட கமெண்ட் ரசிக்க வைத்தது. நீங்கள் பகிர்ந்துள்ள பாடல் காட்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும் & சரோஜா தேவியம்மாவையும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்மா!

 12. வணக்கம் அம்மா.
  உங்கள் சின்ன வயது அனுபவம் உண்மையில் எங்களையும் சிரிக்க வைக்கிறது. இது போன்ற சம்பவங்களை நானும் நண்பர்களிடமிருந்து பார்த்திருக்கிறேன். தங்களின் நகைச்சுவையான பதிவிற்கு நன்றி.
  அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

 13. இனிய தீப ஒளி நல்வாழ்த்துகள் ..ஜெமினி கணேசனை சாம்பார் என்று சொல்வார்கள் ..அதுதான் அந்த சிரிப்பு …சின்ன வயசுல நடந்த சின்ன நிகழ்வுகளை கூட இத்தனை வருசம் கழிச்சு ஆஹா இன்ட்ரஸ்டிங் …

 14. வணக்கம்
  அம்மா
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.-http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_11.html?showComment=1386724732568#c7005872673239012691

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 15. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன்!..
  தங்களின் நேர்முக வர்ணனை அற்புதம். கல்யாணப்பரிசு படக்காட்சி அப்படியே கண் முன் விரிந்தது.
  இப்படிப்பட்ட இளகிய நெஞ்சங்களால் தான் உறவுகள் இறுகுகின்றன என்பது என் கருத்து.

 16. madam do you know that gemini sir was deliberately addressed as sambar by the fanatic fans of sivaji/mgr. a real hadsome hero… always good at acting. well read man…. he was the darling of cultured cinema fans in those days. he had also undergone agony when he was addressed as sambar in public functions… remember his children are highly educated and serve the country. alas the children of his counterparts…….. you know well.

 17. தென்காசி வாஹினி திரையரங்கத்திற்கு ஒரு முறை ஜெமினி வந்திருந்தார். என்ன படம் என்று நினைவில்லை. தற்போது அந்த திரையரங்கமும் இல்லை. இடைவேளையின் போது பால்கனியில் தோன்றினார். கீழேயிருந்த தரை டிக்கெட் ரசிகன் ஒருவன் “டேய் சாம்பார்-ல” என்று கத்தினான். அவ்வளவுதான் அதன் பின் அவரை காணவேயில்லை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s