குழந்தை வளர்ப்பு

குழந்தையின் விளையாட்டு

playing with car

செல்வ களஞ்சியமே – 41

 

குழந்தையின் விளையாட்டு வெறும் விளையாட்டு அல்ல என்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது ஏதோ பொழுது போக்க, அல்லது மனமகிழ்விற்காக விளையாடுவதாகத் தோன்றும். நாம் அதை பெரியவர்கள் பார்வையில் பார்க்கும்போது அதற்கு அத்தனை முக்கியத்துவம் இருக்காது. ஒரு சின்ன பொம்மையை வைத்துக் கொண்டு அம்மா, அப்பா என்றெல்லாம் சொல்லும்போது நாம் அதை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் குழந்தையின் விளையாட்டுக்கள் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளவே என்கிறார் டாக்டர் ஸ்பாக். பிற்காலத்தில் தாம் வாழப் போகும் வாழ்க்கைக்குத் தம்மை தயார் செய்துகொள்ளவே குழந்தைகள் விளையாடுகிறார்கள். குழந்தைகள் எளிதாக விளையாடுவதாக நாம் நினைக்கிறோம்; ஆனால் அவர்களுக்கு விளையாட்டு பிடிப்பதற்குக் காரணம் அது ‘கஷ்டம்’ ஆக இருப்பதனால்தான். ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவன் எத்தனை கஷ்டப்பட்டு ‘ஜியோமெட்ரி’ யைக் கற்றுக் கொள்ளுகிறானோ அதே தீவிரத்துடன் குழந்தைகள் விளையாட்டினை திரும்பத்திரும்ப விளையாடி அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

என் பிள்ளை சின்ன வயதில் கையில் எது கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு கார் ஓட்ட ஆரம்பித்துவிடுவான். பென்சில், அழிப்பான், ஸ்கேல் என்று எல்லாமே அவன் கையில் கார் ஆக மாறும். விளயாடுவதற்குமுன் தனது விளையாட்டு சாமான்களில் சிலவற்றை அங்கங்கே வைப்பான். இவனது கார் அந்த சாமான்களைச் சுற்றி, அவற்றின் மேல் மோதாமல் ஓடும். சிலசமயம் அவற்றின் அருகே போகும்போது ‘கீய்ங்……’  என்று சடன் ப்ரேக் போடுவான். தூரத்தில் வரும்போது ஹார்ன் அடிப்பான். அவன் விளையாடுவதை வியப்புடன் அன்று நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

அவன் கார் சிலசமயம் என் கால் அருகிலும் வரும். ஹார்ன் சத்தம் அல்லது ‘கீய்ங்க்‘ என்ற சடன் ப்ரேக் ஏதாவது ஒன்றை செய்வான். ‘எப்போ பார்த்தாலும் என்னடா கார் விளையாட்டு?’ என்று கோபித்துக் கொள்வேன். அவன் இன்று மிகவும் லாவகமாக இரண்டு சக்கர வண்டியோ,  நான்கு சக்கர வண்டியோ  ஓட்டும்போது டாக்டர் ஸ்பாக் நினைவுக்கு வருகிறார். அவனது திறமைக்கு இந்த சின்ன வயது விளையாட்டும் காரணம் என்று டாக்டர் ஸ்பாக் சொல்வது புரிகிறது.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே – 40

Advertisements

7 thoughts on “குழந்தையின் விளையாட்டு

 1. இணைப்பிற்கு செல்கிறேன் அம்மா… இதுவரை வந்த (ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி) கவிதைகளை ஒரு தொகுப்பாக தங்களுக்கு அனுப்பி உள்ளேன் அம்மா… பார்க்கவும்… நன்றி…

 2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  எத்தனைப் பெரியோர் இந்த ரகசியம்
  தெரிந்து குழந்தைகளை அரவணைக்கிறோம்
  பயனுள்ள அருமையான பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

 3. நமக்கு நம் குழந்தைகளூடன் விளையாடவும் அவர்களின் விளையாட்டை ரசிக்கவும் நிறைய நேரம் இருந்தது ரஞ்சனி ஆனால் இப்போது பெற்றோர்களும் பிஸி குழந்தைகளும் நிறைய கணினியில் தான் விளையாடுகிறார்கள் அவர்களுக்கு விளையாட நாம் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் அதனை உடனிருந்து ரசிக்கவும் வேண்டும் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

 4. நீங்கள் சொல்வது உண்மையே நாம் வேடிக்கை தான் பார்க்கிறோம், சந்தோசப் படுகிறோம். குழந்தையில் கை கால்களை அடிப்பதும் உடற்பயிற்சி தானாம். உண்மையில் வருங்காலத்தில் சாதனைகள் செய்ய தயார் செய்து கொண்டிருகிறார்கள் போலும். நல்லவிடயங்கள் இனிமேல் கோபப்படாமல் ரசிக்கவும் வேண்டும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

  அருமையான பகிர்வு, தொடர வாழ்த்துக்கள்….!

 5. மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அம்மா. குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்ப்பதோடு நின்று விடாமல் அப்படி விளையாடாதே, இப்படி விளையாடாதே என அவரகளை கட்டுபடுத்துகிறோம். முட்டிக்காலில் ரத்தம் வராமல் எந்த குழந்தை வெற்றி பெறும்? அப்படி விழுந்து ரத்தம் வந்தால் மகிழ்வோடு துடைத்து விடுங்கள் அவன் வெற்றி பாதையைத் தேர்ந்தெடுத்து வேகமாய் ஓடிக் கொள்வான். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அம்மா. தங்களது பின் தொடர இன்று தான் வழி தெரிந்து கொண்டேன். மின்னஞ்சல் மூலம் பின் தொடர்ந்தும் விட்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s