Uncategorized

துரத்தும் பதவி!

write a poem

 

எனக்குத் திருமணம் ஆன புதிதில் ஒரு நாள் என் மாமியார் சொன்னார்: ‘நாராயணன் ஜட்ஜ் ஆக வருவான்’. எனக்கு கொஞ்சம் வியப்பு நிறைய சிரிப்பு. ஏனெனில் என் கணவர் படித்தது மெக்கானிகல் இன்ஜினியரிங். எப்படி ஜட்ஜ் ஆக முடியும்? அட்லீஸ்ட் உயர் நீதிமன்றம் அருகில், எதிரில், பக்கத்தில் அலுவலகம் என்றால் கூட நீதிமன்றக் காற்றாவது அடிக்கும். இவரது அலுவலகமோ பாடியில். ஆனால் என் மாமியார் ‘அவனது ஜாதகப்படி அவன் ஜட்ஜாக வருவான்’ என்று கடைசிவரை (அவரது கடைசி காலம் வரை) சொல்லிக்கொண்டிருந்தார்.

 

ஆனால் ஒரு விஷயம் மனிதர்களை சரியாகக் கணிப்பார். அதனால் என் மாமியாரின் கூற்று பாதி பலித்தது என்று சொல்லலாம்.

 

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு தொலைபேசி வந்தது. ‘மேடம், KSIT கல்லூரியிலிருந்து பேசுகிறோம். எங்களுடைய கல்லூரி fest – இல் ஒரு போட்டிக்கு ஜட்ஜ் ஆக வரமுடியுமா?’ என்று. சுமார் நான்கு வருடங்கள் தொடர்ந்து நடுவராக இருந்தேன்.

 

என் மாமியார் என் ஜாதகத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஒருவேளை என் கணவரின் ஜாதகத்தில் மனைவி ஜட்ஜ் ஆக இருப்பார் என்று இருந்ததோ, என்னவோ!

 

இந்த வருடம் மறுபடி இந்தக் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தபோது வெளியூரில் இருந்ததால் போக முடியவில்லை. ‘வட போச்சே’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திரு சீனு தயவில் மறுபடி ஒரு ஜட்ஜ் பதவி! என் கணவருக்கு வந்திருக்க வேண்டிய பதவி என்னைத் துரத்தி துரத்தி பிடிக்கிறது!

 

இப்போது எதற்கு இதைச் சொல்லுகிறீர்கள், என்கிறீர்களா?

 

இன்னொரு போட்டி. மறுபடி நடுவர் பதவி. ‘ரூபனின் எழுத்துப்படைப்பு’ என்ற வலைபதிவில் தனது கவிதை, கதை என்று பல படைப்புகளையும் படைத்துவரும் திரு ரூபன் இன்னொரு போட்டியை அறிவித்து இருக்கிறார்.

 

இதோ விவரங்கள்:

போட்டிக்கான தலைப்பு

1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்

2. ஒளி காட்டும் வழி

3. நாம் சிரித்தால் தீபாவளி

போட்டிக்கு கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 31.10.2013.

மேலும் விவரங்களுக்கு

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி

இந்த  இணைப்பிற்கு சென்று பார்க்கவும்.

திடங்கொண்டு போராடு சீனுவைத் தொடர்ந்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஏராளமான பரிசுகளை அறிவித்து கவிதைப்  போட்டியினை நடத்தும் ரூபனுக்கு, கவிஞர்களே உங்கள் அழகான படைப்புகளை அனுப்பி ஆதரவு வழங்குங்கள்.

 

பங்குபெறும் அத்தனை பெரும் வெற்றிபெற வாழ்த்துகள்!

 

 

 

Advertisements

32 thoughts on “துரத்தும் பதவி!

 1. //என் மாமியார் என் ஜாதகத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது.//

  அவர்கள் உங்களிடமிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். நீங்களும் அவர்களிடமிருந்து தப்பித்து விட்டீர்கள். அதனால் வருத்தப்படாதீங்கோ. 😉

  //ஒருவேளை என் கணவரின் ஜாதகத்தில் மனைவி ஜட்ஜ் ஆக இருப்பார் என்று இருந்ததோ, என்னவோ!//

  இருக்கலாம். இருக்கலாம்,. அதே அதே சபாபதே !!

 2. எல்லோரும் துரத்தி துரத்தி பதவியைப் பிடிக்கும் இந்த நாளீல் பதவி உங்களைத் துரத்துவது பற்றி பெருமை படுங்கள் ரஞ்சனி பதவி கிடைப்பது அதுவும் ஜட்ஜ் பதவி என்ன எல்லோருக்கும் கிடைத்து விடுமா? ஜமாயிங்கள் கவிதைகளையெல்லாம் படித்து படித்து நீங்களே ஒரு கவிஞராகிவிடுங்கள் பார்க்கலாம் நடுவர் பதவிக்கு பாராட்டுக்கள் நடுனிலமையாக இருக்க வாழ்த்துக்கள்

 3. கணவரின் எல்லா நல்விஶயங்களிலும் மனைவிக்கு பங்கு உண்டு. ஜட்ஜ் பதவியெல்லாம் அவர் உங்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டார். மாமியாரை நினைக்காத நாட்களில்லை. அந்த அளவிற்கு நீக்கமற இருந்திருக்கிரார்.
  என் பிள்ளைக்குச் சொன்னதெல்லாம் இந்தப் பெண் வாங்கிக்கொண்டு விட்டது.
  என்று சொல்லிக்கொண்டு இருப்பார் போலும்.!!
  ஜட்ஜம்மா இனி அப்படிக் கூப்பிடுகிறேன். நல்ல தீர்ப்பை வழங்குங்கள். பாராட்டத் தவராதீர்கள். வாழ்த்து உங்களுக்கு. அன்புடன்

  1. வாங்க காமாக்ஷிமா!
   உண்மையில் மாமியாரை நினைக்காத நாளே இல்லை தான்.
   நிச்சயம் பாராட்டுக்களுடன், நல்ல தீர்ப்பையும் வழங்குகிறேன்.
   வாழ்த்துக்களுக்கு நன்றி!

  1. வாங்க சீனு!
   உங்கள் கைராசிதான்!
   நீங்களும் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள் கூடிய சீக்கிரம்.
   ரயில் பயணத்தைக் கவித்துவமாக எழுதிய உங்களால் தீபாவளியையும் கவிதையில் கொண்டு வர முடியும். முயற்சி செய்யுங்கள்.

 4. தன் மகன் ஜாதகத்தின்படி அவன் ஜட்ஜ் ஆக வருவான் என்ற நம்பிக்கை. உங்கள் மாமியார் வாக்கு எப்படியோ பலித்துவிட்டது.
  நாட்டாமை என்றாலும் நடுவர் என்றாலும் செய்யும் தொழில் ஜ்ட்ஜ் செய்யும் தொழில்தானே.
  திரு VGK அவர்கள் இன்று ஒரு சேனல் ஒளிபரப்பிய் “ ஜம்பு லிங்கமே ஜடா ஜடா “ என்ற தேங்காய் சீனிவாசன் பாடும் பாடலை ( காசேதான் கடவுடளடா ) கேட்டு இருப்பார் போலிருக்கிறது அதுதான் அவர் தந்த கருத்துரையில் அந்த பாடலில் வரும் “அதே அதே சபாபதே !!” என்ற வரிகள் எதிரொலித்து இருக்கிறது. (நான் கேட்டேன்)

  1. வாங்க இளங்கோ!
   உங்கள் கருத்துரையை ரொம்பவும் ரசித்தேன்.
   VGK அவர்களின் கருத்துரையைப் படித்ததும் எனக்கும் இதேபோலத்தான் தோன்றியது!
   நன்றி!

 5. வாழ்த்துக்கள் ஜட்ஜ் மேடம்.
  எனக்கும் கவிதைக்கும் மிக அதிக தூரம். அதனால் தூரத்திலிருந்தே கவிதைகளை ரசிக்கப் போகிறேன்.
  ஆவலுடன் கவிதைகளை படிக்கக் காத்திருக்கிறேன்……

  1. வாங்க ராஜி!
   கிட்டக்க வாங்க, காதோடு ஒரு ரகசியம். எனக்கும் கவிதை எழுத வராது! யார்கிட்டயும் சொல்லிடாதீங்க!
   வாழ்த்துக்களுக்கு நன்றி!

 6. ஒருவேளை பெயரின் முதல் பாதி (ரஞ்ஜனி நாராயணன்) உங்கள் காதில் விழாமல் இருந்திருக்குமோ !

  போட்டியை நல்லவிதமாக நடத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகள்.

 7. வணக்கம்
  அம்மா

  கவிதைப் போட்டிக்கான பதிவை அழகான கற்பனை கலந்த முகவுரையுடன் பதிவு அமைந்துள்ளது பதிவுஉங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் அம்மா……

  இனிப்பு இங்கு இருங்கோ அங்குதான் எறும்பு தன் பயணத்தை தொடரும் ….. அது போல எங்கு நல்ல எழுத்தாளன் இருக்கோ அங்குதான் வருகை அதிகரிக்கும்…. அதனால்தான் உங்களை பதவி துரத்தி துரத்தி வருகிறது.அம்மா……. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 8. ஏதோ சூப்பர் கதை சொல்லி வாய் விட்டு சிரிக்க வைக்க பொறீங்க என்று ஆரம்பத்தில் நினைத்தேன் அம்மா 🙂 போட்டி நல்ல படியாக நடக்க என் வாழ்த்துக்கள் 🙂

 9. இந்த பதவி காசு கொடுத்து வந்த பதவி இல்லை அம்மா. தானா வந்த பதவி. இதை நினைத்து தாராளமாய் பெருமை கொள்ளலாம். பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது ஏதும் ரஞ்சனி அம்மாவுக்கு (மன்னிக்கவும்) சீட் கொடுத்துட்டாங்களோ னு தலைப்பு பார்த்து ஓடி வந்தால் கவிதைப் போட்டியை ஞாபகப்படுத்துகிறது. போட்டி நன்றாக அமைய நல்வாழ்த்துக்கள் அம்மா. பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s