குழந்தை வளர்ப்பு

அப்பா செல்லமா? அம்மா செல்லமா?

அம்மாவோட போன்...அம்மா செல்லமா?
அம்மாவோட போன்…அம்மா செல்லமா?

 

‘அப்பாவ பிடிக்குமா? அம்மாவ பிடிக்குமா?’

‘நீ யார் செல்லம்? அப்பா செல்லமா? அம்மா செல்லமா?’

நம்மில் 99% பேர் ஒரு குழந்தையிடம் கேட்கும் கேட்கக்கூடாத பைத்தியக்காரத்தனமான கேள்விகள் இவை!

குழந்தையை உருவாக்குவதிலிருந்து அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி திருமணம் முடிக்கும் வரை இருவரின் கவனிப்பும் குழந்தைக்குத் தேவை. குழந்தையின் அறிவு, சாமார்த்தியம், ஆளுமை, உருவம், பேச்சு, நடவடிக்கை இவை எல்லாமே அப்பா, அம்மாவின் பாதிப்புடன்தான் இருக்கும்.  கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானம் செய்வது ஆணின் குரோமோசோம் என்றாலும், மற்ற விஷயங்களில் அப்பாவின் பங்கு நிச்சயம் ஐம்பது சதவிகிதம் இருக்கும். இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் சந்தோஷமே!

இன்றைய இளைய தலைமுறை அப்பாக்கள் உண்மையில் குழந்தையின் வளர்ப்பில் அதிகம் பங்கு பெறுகிறார்கள். நன்றி: அவர்களது அமெரிக்க வாசம். அங்கு ஒரு பெண் தாயாகும் போதே கணவனுக்கும் குழந்தைக்கு டயபர் மாற்றுவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பயிற்சி அளித்துவிடுகிறார்கள்.

டயபர் என்றவுடன் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது என் மாமா ஒருவர் தில்லியிலும், ஒருவர் கோட்டா (ராஜஸ்தான்) விலும் இருந்தார்கள். . என் முதல் குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் போது  நாங்கள் குழந்தையுடன் முதலில் கோட்டா போனோம். என் மாமாவிற்கும் கைக்குழந்தை. என் குழந்தையை விட சின்னவன். எனக்கு இங்கு ஒரு வியப்பான விஷயம் காத்திருந்தது. என் மாமி அவ்வப்போது அந்தச் சின்னக் குழந்தையை பாத்ரூமிற்கு எடுத்துக்கொண்டு போய் ‘உஸ்ஸ்ஸ்…..உஸ்ஸ்ஸ்…’ என்று வாயால் சத்தம் செய்வார். அது சமத்தாக மூச்சா போய்விடும். எனக்கு ரொம்பவும் வியப்பு. எப்படி குழந்தைக்கு பயிற்சி அளித்தீர்கள் என்று கேட்டேன். அவ்வப்போது இப்படி செய்து கொண்டிருந்தால் பழகிவிடும் என்றார் மாமி. நானும் அப்படி செய்ய ஆரம்பித்தேன். ஊஹும்….! நான் ஏதோ விளையாட்டு காட்டுகிறேன் என்று என் குழந்தை ‘கிளு கிளு’ வென்று சிரிக்கும். இந்தக் காலம் மாதிரி டயபர் இல்லாத காலம் அது.

இப்போது கவலையில்லை டயபர் போட்டுவிடுகிறார்கள்.

ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் குழந்தைகளுக்கு ஒன், மற்றும் டூ பாத்ரூம் போக பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

Advertisements

33 thoughts on “அப்பா செல்லமா? அம்மா செல்லமா?

  1. குழந்தை வளர்ப்புக் கலைகளில் நீங்கள் சொல்வது போல இப்போ நல்ல மாற்றம்.

    நான்கு பெண்கள் லிங்க் க்ளிக் செய்தால்
    Whoops!

    Your browser sent a request that we were unable to process, clearing the browser cache and cookies is a good first step to try to resolve the issue.
    Instructions for clearing cache and cookies are different for each browser and version. Google has outlined the steps for all major browsers:
    Clearing cache and cooki

    என்று வருகிறது. அதுவும் செய்து பார்த்தும் இந்த உங்கள் பக்கம் சில நாட்களாய் திறக்கவில்லை.

  2. உண்மை தான் அம்மா குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதே சிறந்தது.
    //ஊஹும்….! நான் ஏதோ விளையாட்டு காட்டுகிறேன் என்று என் குழந்தை ‘கிளு கிளு’ வென்று சிரிக்கும்// தங்கள் பாடு ரொம்ப கடினம் தான் அம்மா. நல்ல சிந்தனைக்கு நன்றீங்க அம்மா.

  3. குழந்தையை பெற்றால் மட்டும் போதாது குழந்தையை வளர்க்கும் முறையை பெற்றோர் அறியத்தரும் அருமையான பகிர்வு ரஞ்சனிம்மா.. ஆமாம் இந்தக்காலத்தில் தான் டயபர் போட்டு குழந்தைகளின் நடையில் கூட மாற்றத்தை காணலாம். டயபர் உபயோகிக்கும் முறை இருந்தாலும் அதை விடுத்து தூய்மையான வெள்ளைத்துணிகளை பயன்படுத்தினேன் என் இருக்குழந்தைகளுக்குமே. அது மட்டுமல்லாமல் உங்க பகிர்வில் சொன்னது போல இருவருக்குமே சிறுவயதிலேயே அடிக்கடி பாத்ரூம் தூக்கிக்கொண்டு போய் அப்படியே நீங்கள் பகிர்வில் சொன்னது போல தான் செய்தோம். டயபர் பிள்ளைகளை மட்டுமல்ல பெற்றோரையும் சோம்பலாக்கிவிடுகிறது. அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

    1. வாங்க மஞ்சு!
      எத்தனை நாளாயிற்று உங்களை என் வலைத்தளத்தில் பார்த்து!
      எனது பதிவை படித்ததற்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கும் நன்றி!

  4. “..நீ யார் செல்லம்? அப்பா செல்லமா? அம்மா செல்லமா?’

    நம்மில் 99% பேர் ஒரு குழந்தையிடம் கேட்கும் கேட்கக்கூடாத பைத்தியக்காரத்தனமான கேள்விகள் இவை!..” உண்மையைச் சொன்னீர்கள்.

  5. “இன்றைய இளைய தலைமுறை அப்பாக்கள் உண்மையில் குழந்தையின் வளர்ப்பில் அதிகம் பங்கு பெறுகிறார்கள்”________ உண்மைதாங்க!

    “நான் ஏதோ விளையாட்டு காட்டுகிறேன் என்று என் குழந்தை ‘கிளு கிளு’ வென்று சிரிக்கும்”____ நல்ல காமெடி.திடீர்னு இப்படியெல்லாம் பண்ணினா, ‘பரவாயில்லையே, இந்த விளையாட்டு நல்லா இருக்கேன்னு நினைச்சிருக்கும்.

    கதை நன்றாக இருக்கிறது.பதிவும் சூப்பரா இருக்கு.

    1. வாங்க சித்ரா!
      என் இரண்டு குழந்தைகளுக்கும் அவர்களாகவே ஒன், டூ போகக் கற்றுக் கொண்டதுதான். என்னால் அவர்களைப் பழக்கவே முடியவில்லை! ):
      பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். தோல்வி தான்! சில நாட்களுக்கு நான் விளையாட்டுக் காட்டுவதாக நினைத்த என் பெண் பிறகு பாத்ரூம் பக்கம் போனாலே ‘உஸ்ஸ்…உஸ்ஸ்….’ என்று அவள் சத்தம் போட ஆரம்பித்துவிட்டாள்! ஹா…ஹா…!
      அத்துடன் நான் என் முயற்சியை மூட்டை கட்டி மேலே போட்டுவிட்டேன். 🙂 🙂

  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்… நன்றி அம்மா…

  7. வணக்கம் சகோதரி!…

    இன்றைய வலைச்சரத்தில்
    உங்கள் அறிமுகம் கண்டேன்..
    என் தளத்திலும் உங்கள் வாழ்த்தும்.. ஓடோடி வந்துவிட்டேன்…
    வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

    உங்கள் தளத்தில் அருமையான பதிவுகள் தொடருகின்றன..காண்கிறேன்… பொறுமையாய்ப் படிக்க எனக்குக் கொடுப்பனை இல்லை..:(

    ஆனாலும் அவ்வப்போது எட்டிப்பார்த்துட்டு ஓடிவிடுகிறேன் மா… தப்புதான்.. வருவேன்.. தொடருவேன்…

    வாழ்த்துக்கள் சகோதரி!

  8. “‘அப்பாவ பிடிக்குமா? அம்மாவ பிடிக்குமா?’
    ‘நீ யார் செல்லம்? அப்பா செல்லமா? அம்மா செல்லமா?’
    நம்மில் 99% பேர் ஒரு குழந்தையிடம் கேட்கும் கேட்கக்கூடாத பைத்தியக்காரத்தனமான கேள்விகள் இவை!”

    உண்மை.
    அழகாய் சொன்னீர்கள்.

    1. வாங்க பழனிவேல்!
      எங்கே நீண்ட நாட்களாகக் காணவில்லையே!
      தீபாவளி கவிதைப்போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.
      இணைப்பு: http://wp.me/p1kCrm-q4
      இந்த மாதம் 31 கடைசி நாள். மிகுந்த ஆவலுடன் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறேன்.
      வாழ்த்துக்கள்!

  9. வணக்கம் சகோதரி…!
    நல்ல விடயம் தான் நானும் இப்படி தான் என் மகனை சின்ன வயசிலேயே கேட்டேன். ஆனால் மகன் எதுவும் பேசாமல் இது என்ன முட்டாள் கேள்வி என்பது போல் விலகி சென்று விடுவார். உண்மையில்தவறு தான்.

    அதேபோல் குழந்தைகளை இரண்டு, மூன்று மாதத்திலேயே பழக்கி எடுக்கலாம். டயப்பர் பாதுகாப்புக்காக மட்டும் பாவிக்கலாம். வளர்ந்த பின்னும் குழந்தை என்று சொல்லி விட்டு விடுவார்கள். நேரம் பார்த்து தினமும் ஒரே நேரத்திற்கு பழக்கி எடுக்கலாம். இது என் சொந்த அனுபவம். எனக்கு அது வெற்றி தான். இப்பொழுது சிறியவர்களுக்கு என்று சின்னதாக இருக்குமே அதை வாங்கிக் கொள்ளலாம். ஒன்று இரண்டு வயது என்றால் பழக்குவது கஷ்டம் தான் என்று நினைக்கிறன்.

    இப்படி நல்ல விடயங்களை இளையவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் தான்
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s