நோய்நாடி நோய்முதல் நாடி – 18
சோம்பேறி கண் எனப்படும் பார்வை தெளிவின்மை (amblyopia)
ஒருநாள் பக்கத்துவீட்டிற்கு சென்றபோது அவர்கள் குழந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. ஒரு கண்ணிற்கு மட்டும் ஒரு பிளாஸ்டர் போட்டு மறைத்திருந்தது. ‘என்ன ஆச்சு? கண்ணில் அடிபட்டு விட்டதா?’ என்றேன் கொஞ்சம் படபடப்புடன். 6 வயதுப் பிள்ளை. கொஞ்சம் வால் என்றாலும் கண் ஆயிற்றே!
குழந்தையின் அம்மா சொன்னார்: ‘இல்ல மாமி. லேசி ஐஸ் (lazy eyes). ஒரு கண்ணால் மட்டும் அதிகமாகப் பார்க்கிறான். இன்னொரு கண்ணில் சரியான பார்வை இல்லை. ஒரு கண் நார்மலாகவும், இன்னொரு கண் பலவீனமாகவும் இருக்கிறதாம். அதனால் தினமும் அரைமணி நேரம் நார்மலாக இருக்கும் கண்ணை பிளாஸ்டர் போட்டு மறைத்து இன்னொரு கண்ணால் பார்க்க சொல்லியிருக்கிறார் கண் மருத்துவர்’.
மனிதர்கள் மொத்தமாக சோம்பேறிகளாக இருப்பார்கள், கண் மட்டும் சோம்பேறியாக இருக்குமா? இதென்ன புதிதாக இருக்கிறதே என்று இணையத்தில் தேட ஆரம்பித்தேன். நான் படித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த பார்வை தெளிவின்மையில் ஒரு கண்ணில் மட்டும் பார்வை (பிம்பங்கள்) சரியாக உருவாவதில்லை. அதாவது ஒரு கண்ணில் தெளிவான பார்வையும் இன்னொரு கண்ணில் ‘மசமச’ வென்று (குறைவான) பார்வையும் இருக்கும். இப்படிப்பட்ட நிலை இருக்கும் ஒரு குழந்தையின் மூளை, சரியாக பார்வை இல்லாத கண்ணில் விழும் தெளிவற்ற பிம்பத்தை அலட்சியப்படுத்திவிடுகிறது. மூளையின் பார்க்கும் சக்தியும் அந்த கண்ணில் வளராமல் போகிறது. இந்த ஆம்ப்ளியோபியா-வை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு நேருகிறது. இந்த நிலையை கண்ணாடிகள் மூலமாகவோ, காண்டாக்ட் லென்ஸ் மூலமாகவோ சரி செய்ய முடியாது. இது மூளையில் ஏற்படும் நரம்புக் கோளாறு.
இந்த நிலை எப்படி ஏற்படுகிறது?
தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்
ஏற்கனவே ரொம்ப தூங்குறதா என்னை நானே திட்டிக்குவேன்.. இப்படி வேறேயா?
நான்குபெண்கள் தளத்தில் தொடர்கிறேன்….
வணக்கம்
அம்மா
அழகான விளக்கம் எல்லோரும் எளிதில் விளங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது 4பெண்கள் தளத்தில் தொடருகிறேன் அம்மா…. பதிவுசுப்பர்
வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயனுள்ள பதிவு
இன்றுதான் வந்தேன் இந்த பக்கம்
இனி தொடர்ந்து வருகிறேன்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.