நிறமறியா நோய்க்கு சிகிச்சை

color chart - 1

 

 

 

 

 

 

 

நிறமறியா நோய்க்கு குணம் உண்டா? இதைத் திருத்த முடியுமா? என்ற கேள்விகளுக்கு போன வருடம் வரை இல்லை, முடியாது என்பதே பதிலாக இருந்தது. ஜீன் சிகிச்சை ஒன்றே வழி, அது நம் மருத்துவ சாமார்த்தியங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இதெல்லாமே கூடிய விரைவில் மாறும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது. அணில் குரங்கு (Squirrel Monkey) வகையைச் சேர்ந்த இரண்டு குரங்குகளுக்கு ஊசி மூலம் திசுக்கள் செலுத்தப்பட்டு முடிவும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது.

 

டால்டன், சாம் என்ற பெயருடைய இந்த இரண்டு குரங்குகளுக்கும் லாப்சின் (Lopsin) என்ற ஜீன் குறைபாடு இருந்தது. இந்த ஜீன் தான் கண்ணின் கருவிழியில் இருக்கும் கூம்புகளுக்கு பொருளின் அலைநீளம், மற்றும் சிவப்பு வண்ண உணர்வைக் கொடுப்பது. இதுதான் மனிதர்களின் சிவப்பு-பச்சை வண்ண நிறமறியாமைக்கும் காரணம்.

 

இந்த சிவப்பு பச்சை நிறமறியாமை தான் அதிக அளவில் மனிதர்களிடையே காணப்படுகிறது. இதுவே, குறைபாடுள்ள மரபணுக்கள் மூலம் X குரோமோசோமிற்கு அனுப்பப்படுகிறது. இந்தக் குறைபாடுள்ள கருவிழியில் கூம்பு வடிவ அமைப்புகள் மிகவும் குறைவாகவும், ஒன்று கூட இல்லாமலும் இருக்கும். நல்ல பார்வையுள்ளவர்களின் கருவிழியில் மூன்று விதமான கூம்பு வடிவ அமைப்புகள், போதுமான எண்ணிக்கையில் இருக்கும்.

மேலும் படிக்க: நான்குபெண்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 13