நிறமறியா நோய் – 2

color wheel - 1

 

 

 

 

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 12

 

இந்த நிறமறியா நோய்க்கான பரிசோதனைகளை கண்டுபிடித்தவர் திரு ஷிநோபு இஷிஹரா (Shinobu Ishihara – 1879-1963) இவர் ஜப்பானிய கண் மருத்துவர். மிலிட்டரி மருத்துவப் பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கையில் ராணுவப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டார். வண்ண வண்ண புள்ளிகள் கொண்ட 32 தகடுகளை உருவாக்கினார் இஷிஹரா. இவற்றை அடிப்படையாக வைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டன. புள்ளிகள் வேறு வேறு வண்ணங்களிலும், அவற்றின் நடுவே வேறு வண்ணத்தில் ஒளிந்திருக்கும் ஓர் எண் அல்லது ஒரு உருவம் என்ற வகையில் இந்த தகடுகள் அமைக்கப்பட்டன.

நிறமறியா குறைபாடு உள்ளவர்களின் கனவுகள் எந்த நிறத்தில் இருக்கும்? நம் மனதில் இருப்பவை, நாம் அறிந்தவைதான் நம் கனவுகளில் வருகின்றன. பிறந்தபின் பார்வை பறிபோனவர்களுக்கு வண்ணங்களும், உருவங்களும் கனவில் தெரியும். பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களுக்கு உருவங்கள் தெரியாது ஆனால் ஒலி, தொடுகை, வாசனை ஆகிய புலன் உணர்வுகளுடனும், மன உணர்ச்சி வசப்படும் கனவுகள் வரும். நன்றாகப் பார்க்க முடிந்தவர்களுக்கு இதை உருவகம் செய்து கொள்வது சற்று கடினம் தான். ஒரு வியப்பான விஷயம் நல்ல பார்வை உள்ளவர்களில் சுமார் 12% பேருக்கு கனவுகள் கறுப்பு வெள்ளையில் தான் வரும்!

இவர்களால் 3D படங்களையும், ஸ்டீரியோஸ்கோபிக் படங்களையும் உணர முடியுமா?

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள் தளத்திற்குச் செல்லவும்.

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 11