ஐந்தாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த (இப்போது இருக்கிறதா?) கனகவல்லி எலிமெண்டரி பள்ளியில் படித்தேன். என்னுடன் கூட ஒரு பிரபல குழந்தை நட்சத்திரமும் படித்தார் அதே பள்ளியில். ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ பாடிய குட்டி பத்மினி தான் அந்த குழந்தை நட்சத்திரம்!
இப்போது புரிகிறதா என் பாபுலாரிடிக்குக் காரணம்?
முதல் வகுப்பு ஆசிரியை தர்மு என்கிற தர்மாம்பாள். வாரத்திற்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்து, ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து வீட்டை ‘பளிச்’சென்று வைத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் வகுப்பிலேயே எங்கள் பிஞ்சு மனதில் ஏற்றியவர்.
ஆறு, ஏழாம் வகுப்புகள் அங்கிருந்த ஒரு அரசு நடுநிலை பள்ளியில் படித்தேன். இந்தப் பள்ளியில் இருந்த பாட்டு ஆசிரியையும், (பெயர் மறந்து விட்டது. மன்னித்துவிடுங்கள் டீச்சர்) ஆங்கில ஆசிரியையும் (திருமதி கனகவல்லி) என்னால் மறக்க முடியாதவர்கள்.
‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்கொரு குணம் உண்டு’,
‘சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே?’
‘மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான்.
அவரே எங்கள் பள்ளியின் ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ் படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.
எனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:
bits of paper, bits of paper
lying on the floor, lying on the floor
make the place untidy, make the place untidy
pick them up, pick them up!
தமிழ் வடிவம்:
காகித துண்டுகள், காகித துண்டுகள்
தரையிலே பார், தரையிலே பார்,
அசுத்தபடுத்துதே, அசுத்தபடுத்துதே,
பொறுக்கி எடு, பொறுக்கி எடு.
இன்னொரு பாடல்
கரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி
கரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது?
அது என்ன பார்த்தது? அது என்ன பார்த்தது?
மலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்
மலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது
அது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது
திரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி
திரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது!
இதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே.
அவரே நடன ஆசிரியையும் கூட. பாரத நாட்டின் தவப்புதல்வா என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.
லீலாவதி டீச்சர்
ஏழாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணியில் படித்துக் கொண்டிருந்த நான் எட்டாம் வகுப்பிற்கு புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சமூக பாட ஆசிரியை குமாரி லீலாவதி. வரைபடம் இல்லாமல் பாடம் நடத்தவே மாட்டார். என்னுடைய மேப் ரீடிங் ஆசைக்கு விதை ஊன்றியவரே இவர் தான். பாடம் சொல்லிக் கொடுப்பதென்றால் இவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் தலைக்குள் பாடத்தை ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.
அசாத்திய கோபம் வரும். பத்தாம் வகுப்பிற்கு போனவுடன், இவரே எங்கள் ஆங்கில ஆசிரியை. இன்று ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அடித்தளம் போட்டது இவர்தான். ஒருமுறை பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி: தலைப்பு ஆங்கிலக் கல்வி அவசியமா? எல்லோருமே அவசியம் என்று பேசவே தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் நான் ஒரு மாறுதலுக்கு வேண்டாம் என்று பேசினேன். வந்தது பாருங்கள் ஒரு கோபம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என்னுடன் பேசவே இல்லை. என்னுடைய சமாதானங்கள் எதுவுமே அவர் காதில் விழவில்லை.
சாந்தா டீச்சர்
பதினொன்றாம் வகுப்பு (SSLC) ஆங்கில இலக்கணம் மற்றும் துணைப் பாட (non-detailed) ஆசிரியை. வெகு எளிமையாக ஆங்கில இலக்கணத்தை சுவாரஸ்யமாக சொல்லித் தருவார். எனது வகுப்பில் ஒரு ஆங்கில ஆசிரியை வந்து சேர்ந்தார். ஒருநாள் வகுப்பு முடிந்தவுடன் சொன்னார்: ‘Present Perfect Tense இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நன்றி’. நான் ‘என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தாவிற்கு இந்த நன்றிகள் சேரட்டும்’ என்றேன்.
கேதாரேஸ்வர சர்மா என்னும் சர்மா ஸார்
எனது தமிழ் வாத்தியார். இன்று நான் ஒரு தமிழ் வலைப்பதிவாளர் ஆக பெயர் எடுத்திருப்பதற்கு இவரே காரண கர்த்தா. இவர் சொல்லிக் கொடுத்த ‘தேமா, புளிமா’ இன்னும் நினைவில் இருக்கிறது. இவர் வருடந்தோறும் செய்யும் ஆண்டாள் கல்யாணமும் மறக்க முடியாத ஒன்று.
லில்லி கான்ஸ்டன்டைன் டீச்சர்
எனக்குப் புரியாத கணிதத்தை என் தலையில் ஏற்றப் பார்த்து முடியாமல் போனவர். மன்னித்துக் கொள்ளுங்கள் டீச்சர். இன்றுவரை கணிதம் எனக்கு எட்டாக்கனிதான்.
இன்னும் பல பல ஆசிரியர்கள். நேரம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். நிச்சயம் எழுதுகிறேன்.
நானும் ஒரு ஆசிரியை ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் தாமதமாக எனக்கு ஆசிரியை ஆக ஒரு வாய்ப்புக் கிடைத்து, அதில் நான் வெற்றியும் பெற்றேன் என்றால் இந்த அத்தனை ஆசிரியர்களின் பங்களிப்புதான். இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒருவிதத்தில் மெருகேற்றி இருக்கிறார்கள்.
எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்கள். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
மிகவும் அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.
வாருங்கள் கோபு ஸார்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
வாவ்!
நீங்களும் ஒரு ஆசிரியர் என்பதால் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
உங்கள் பள்ளி நினைவுகளை அழகாக எழுதியுள்ளீர்கள். சற்று முன்புதான் நானும் ஒரு பதிவு எழுதினேன். அதில் உங்கள் அளவு என்னால் எழுத இப்போது இயலவில்லை. என்னளவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.
வேறென்ன சொல்ல?
அன்பன்,
தமிழ்
வாருங்கள் தமிழ்!
என்னளவுக்கு இல்லை, என்னைவிட நன்றாக எழுதக் கூடியவர் நீங்கள். உங்கள் பதிவு படித்து பின்னூட்டமும் கொடுத்துவிட்டேன்.
வருகைக்கும் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் நன்றி!
அது இன்றைய பதிவு. நான் சொன்னது நாளைய (sep-05) பதிவு! உங்கள் தன்னடக்கத்தை என்னிடம் காட்டாதீர்கள். 🙂 உங்கள் அனுபவம் பதிவுலகில் கூட என்னைவிட பெரிதுதான். உண்மைதானே? 🙂 🙂 இருப்பினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
மாமி, செம ‘அடி’த்தளம் போல, அதான் நீங்கள் ஆங்கிலத்தில் ஆசிரியையாக கலக்கியதன் காரணம் போலும் 😉 வாழ்த்துக்கள் டீச்சர் !
வாருங்கள் ஓஜஸ்!
எங்கே ரொம்ப நாளாகக் காணுமே என்று பார்த்தேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
மலரும் நினைவுகள் அருமை! ஒரு சில வருஷங்கள் (உங்களுக்கு அலர்ஜியான :)) கணக்கை மாணவர்கள் மூளையில் வெற்றிகரமாக ஏற்றியிருக்கிறேன் என்ற நினைவுடன், ஆசிரியர் தின வாழ்த்துக்கள்ளுக்கு நன்றி, உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! 🙂 🙂
வாருங்கள் மகி!
அட! நீங்கள் கணக்கு டீச்சரா? உங்களையும் இன்றைக்குப் பல மாணவர்கள் நெகிழ்வுடன் நினைத்துப் பார்த்திருப்பார்கள், இல்லையா?
கணக்கு டீச்சர் மகிக்கு ஒரு ஓ!
வருகைக்கும், ஆசிரியர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி!
உங்கள் பள்ளி நினைவுகளுடன் எங்கள் ஆசிரியர்களையும் நினைத்துப்பார்க்க செய்துவிட்டீர்கள். ஆசிரியர்தின வாழ்த்துகள்.
வாருங்கள் சித்ரா!
நீங்களும் உங்கள் ஆசிரியர்களை நினைத்துப் பார்த்தீர்களா?
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வணக்கம்
அம்மா
பள்ளிக்கால நினைவுகளையாரும் மறக்கமுடியாது……… அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
எழெட்டு மாதமாக தொடர் துரத்தலில் சில நாட்களுக்கு முன் தான் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூலம் என் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் இன்னும் காரைக்குடியில் தான் இருக்கின்றார் என்பதை கண்டு கொள்ள முடிந்தது. வயது 80. இப்போது எப்படி இருப்பார் என்று யோசித்துப் பார்த்துக் கொள்வதுண்டு. இதே போல பல ஆசிரியர்களை நினைக்க வைத்த பதிவு இது.
வாருங்கள் ஜோதிஜி!
நல்ல நல்ல ஆசிரியர்களால் உருவானவர்கள் நாம். அவர்களை இன்று சிறப்பாக நினைத்து நன்றி கூறுவோம். சீக்கிரம் உங்கள் ஆசிரியரை பார்த்துவிட்டு வாருங்கள். குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போய் காட்டுங்கள். நமது அடுத்த தலைமுறைக்கும் ஒரு நல்ல ஆசிரியர் அறிமுகம் ஆகட்டும்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Happy TEachers Day. Naanum oru teacher yenbadal ungaludaya malarum palli ninaivugal
Migavum rasikkumbadi irundhadhu. Indrum ungal asiriyargalai ninaivil vaithu iruppadarku parattugal.
வாருங்கள் உஷா!
ஓ! உங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
என் தனிமடல் கிடைத்ததா?
அருமை… அருமை… இனிய நினைவுகளை நினைக்க வைத்தது…
வாருங்கள் தனபாலன்!
வருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் நன்றி!
Happy Teacher’s Day Amma!
Thanks for teaching me,
How to Blog??
-MahalakshmiVijayan
வாருங்கள் மஹா!
நான் சும்மா கோடு போடச் சொல்லித் தந்தேன். நீங்க ஹைவே போடுறீங்களே!
நன்றி மஹா!
அருமையான பதிவு ரஞ்சனி உங்கள் ஆசிரியைகளுக்கு நன்றி சொல்லி எங்களுக்கு ஒரு அருமையான பதிவை தந்துவிட்டீர்கள் நன்றி பாராட்டுக்கள் உங்களுக்கு எட்டாக்கனியான கணிதம் எனக்குப் பிடித்த கனி என்றும் இனிக்கும் கனி அதையே சுமார் 25 வருடங்கள் பல மண்டைகளுக்குள் ஏற்றி புரியவைத்து வாழ்ந்து முடித்தேன் என்பதை பெருமையுடனும் கர்வத்துடனும் சொல்லிக் கொள்கிறேன். எனது மாணவர்கள் எத்தனை பேர் இதுபோல் வர்ணித்து பதிவுகள் எழுதினார்களோ தெரியாது இன்று என்னுடன் வேலைபார்த்த பல ஆசிரிய ஆசிரியைகள் வாழ்த்து அனுப்பினார்கள் போனில் வாழ்த்து தெரிவித்தார்கள் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு சந்தோஷப்படுகிறேன் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்
வாருங்கள் விஜயா!
நிச்சயம் பல மாணவர்கள் உங்களை இன்று உளமார நினைத்து நன்றி கூறியிருப்பார்கள். அன்பான கணித ஆசிரியை என்றால் சும்மாவா?
உங்களுடன் தொலைபேசியில் பேசியதும் – காலையில் அழைத்து வாழ்த்துக்கள் சொன்னது – எல்லாமே சந்தோஷமான நிகழ்வுகள்.
நன்றி!
அருமையான நினைவலைகள். இன்னிக்கு ஆசிரியர் தின அஞ்சலியைச் சிறப்பாகச் செலுத்திட்டீங்க.
நீங்க எழுதின பாடல் பாடிப் பார்த்துட்டேன். எங்களுக்கும் இந்தப் பாடல் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதோட இல்லை இன்னொரு பாடலும் உண்டு.
இடி இடிக்குது இடி இடிக்குது னு ஒரு பாட்டு வரும். கருவேல மரத்திலே னு ஒரு பாட்டு. எல்லாம் அரைகுறை நினைவா இருக்கு. :)))))
வாருங்கள் கீதா!
பாடல்களை g+ இல் பாதி நினைவிற்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அன்பின் ரஞ்சனை நாராயணன் – அருமையான பதிவு- ஆசிரியர் தினத்தன்று பதிவு நன்றேஉ – அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
வாருங்கள் சீனா ஐயா!
இந்தமுறை பதிவர் திருவிழாவில் நீங்கள் இல்லாத குறையை ரொம்பவும் உணர்ந்தேன்.
வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அன்பின் ரஞ்சனி நாராயணன் – அருமையான பதிவி – அத்தனை ஆசிரியர்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அருமை – நினைவாற்றல் பாராட்டுக்குரியது – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
நன்றி ஐயா!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மா..
எந்த ஆசிரியர் பெயரும் விடுபாடது .. நினைவில் கொண்டு வாழ்த்திய விதம் சிறப்பு.
வாருங்கள் சசி!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
நர்சரியிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை உங்களுடன் பயணித்த சில ஆசிரியர்களை நினைவில் வைத்து எழுதிய பதிவு மனம் கவர்ந்தது.
அவர்களை வாழ்த்திய விதம் அருமை.
உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
உங்களின் ஆசிரியர்களை நானும் அறிந்து கொண்டேன்..ஆசிரியையான உங்களுக்கும் அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
வாருங்கள் எழில்!
வருகைக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி!
உங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களின் சிறப்புகளை மறக்காமல் சொல்லி அவர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்
வாருங்கள் முரளிதரன்!
மறக்க முடியாத ஆசிர்யர்கள் ஆயிற்றே!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
தாமத்திற்கு மன்னிக்கவும்.
அழகான நினைவலைகள்.
அருமையான ஆக்கம்.