Uncategorized

நிறமறியா நோய்!

color chart

 

நோய்நாடி நோய்முதல் நாடி 12

ஒரு முறை என் உறவினருடன் இங்குள்ள ஆயுர்வேத கண் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு சோதனையாக செய்துகொண்டு வந்த மருத்துவர் ஒரு அட்டையை அவரிடம் கொடுத்தார். அதில் பல நிறங்கள் கொண்ட ஒரு வட்டம் இருந்தது. ஒவ்வொரு நிறமாக பெயர் சொல்லச் சொன்னார் மருத்துவர். ரொம்பவும் யோசித்து யோசித்து சொன்னார். சில நிறங்களை அவரால் சரியாக சொல்லவும் முடியவில்லை. அதுவும் சிவப்பு, பச்சை ஆகியவற்றின் வேறு வேறு நிற மாற்றங்களை சொல்ல தெரியவில்லை. எனக்கு ரொம்பவும் வியப்பு. ரொம்பவும் தெளிவாக நிறங்கள் தெரிகின்றனவே என்று.

பெண்கள் நிறங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச்  சொல்வதில் ரொம்பவும் சமர்த்து. வெளிர் பச்சை, கறுத்த பச்சை, ஆலிவ் பச்சை, மருதாணி பச்சை, கிளி பச்சை, ராமர் பச்சை – (இதிலேயே நீலம் அதிகமிருந்தால் அது ராமர் நீலம்!) மயில் கழுத்துப் பச்சை/ நீலம், ஆர்மி பச்சை என்பதெல்லாம் பெண்களுக்கே உண்டான நிறங்களை பிரித்துச் சொல்லும் திறமையை காண்பிக்கும் சொற்கள்.

ஒரு சில நிறங்களைப் பிரித்துப் அறிய முடியாததால் இக்குறை இருப்பவர்களை நிறக்குருடு என்று சொல்வது அத்தனை சரியில்லை. இதற்காக இப்போது பயன்படுத்தப்படும் ஒரு சொல் Color Visiion Deficiency எனப்படும் CVD. நிறக்குருடு என்றால் இவர்களால் நிறங்களையே பார்க்க முடியாது என்ற  பொருளைக் கொடுக்கும். சில சில நிறங்களின் பல்வேறு வகைகளை இனம் பிரித்துக் காண முடியாது என்பதுதான் இவர்களின் குறைபாடு. இதனால் இவர்களின் பார்வையில் எந்தக் குறைபாடும் இருக்காது. இந்த CVD பரம்பரையாக வருவது. 99% நபர்களுக்கு சிவப்பு, பச்சை நிறங்களின் வேறு வேறு வகைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கும். அதேபோல நீலம், மஞ்சள் கலர்களைக் கண்டறிவதிலும் சிலருக்கு சிரமம் இருக்கும். ஆனால் இந்த வகைக் குறைபாடு மிக மிக அரிது. இந்த வகைக் குறைபாடுகளைக் கண்டறிய சோதனைகள் எதுவுமில்லை.

இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் என்ன?

தொடர்ந்து படிக்க 

Advertisements

6 thoughts on “நிறமறியா நோய்!

  1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த நோய் நமக்கு இருப்பதே தெரியாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று தோன்றுகிறது..அதனால் நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் போய் டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். ஓகே என்று வந்துவிட்டது .நிம்மதியாச்சு.

  2. நமக்கு கஷ்டம் வரும்போது ,”கடவுளே உனக்கு கண் இருக்கா?”என கேட்கிறோம்..ஆனால் அவர் கொடுத்த உடலில் உள்ள சிறிய கண்கள் இத்தனை வேலை செய்கிறதா??நினைச்சு பாத்தால் பயமாயிருக்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s