Uncategorized

ஆஹா…. முடிவு வந்தாச்சு!

 

 

crackers

 

 

 

 

 

                                b'day gift

 

 

காதல் கடிதம் போட்டி முடிவுகள்

வெற்றிகரமாக மற்ற நடுவர்களுடன், ‘கனம்’ நீதிபதியாக இருந்து காதல் கடிதங்களைப் படித்து முடிவையும் வெளியிட்டாகி விட்டது.

திகட்டத் திகட்ட காதல் கடிதங்களைப் படித்தாயிற்று. முதல் 5 வாரங்கள் ஐந்து அல்லது ஆறு கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடைசி வாரத்தில் மட்டும் 22 கடிதங்கள்!

திரு சீனு அவர்கள் தனது தளத்தில் இந்த போட்டி முடிவுகளை வெளியிட்டிருக்கிறார். முடிவுகளைத் தவிர இன்னொரு செய்தியையும் தனது தளத்தில் சொல்லியிருக்கிறார் திரு சீனு. அவர் சொல்லியிருக்கும் அந்தச் செய்தி:

puratchi FM

புரட்சி F.M நடத்தி வரும் நிரூபன் அவர்கள் தனது பண்பலையில் நமது கடிதப் போட்டியில் இடம்பெற்ற கடிதங்களை தனது நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியில் பங்குகொண்ட கடிதங்களின் ஒலி வடிவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுவும் நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். மேலும் தானாக முன்வந்து பதிவர்களின் படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் நிருபன் அவர்களுக்கும் அவர் நடத்தும் புரட்சி F.M -மிற்கும் மனமார்ந்த  நன்றிகள்.’

சரி இப்போது போட்டி முடிவுகள்:

முதல் பரிசு

சுபத்ரா – வார்த்தைகள் தேவையா   கடிதம் படிக்க     crackers 2

       இரண்டாம் பரிசு

கோவை மு சரளா – என் உள்ளம் கவர் கள்வனுக்கு  கடிதம் படிக்க

      மூன்றாம் பரிசு (இருவர் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள்)

ஜீவன் சுப்பு – கலவரக்காரனின் காதல் கடிதம் கடிதம் படிக்க

கண்மணி – உறங்கும் கடிதம் கடிதம் படிக்க

 

 pot marigold

 

 

 

 

 

 

 

 

ஆறுதல் பரிசுகள்

முரளிதரன் – கவுத்துட்டியே சரோ கடிதம் படிக்க

ஹிஷாலி – எழுத நினைத்த காதல் கடிதம் கடிதம் படிக்க

தமிழ்செல்வி – என் எழுத்தின் உயிர்ப்பானவனுக்கு கடிதம் படிக்க

சசிகலா – என்னைப் புதுப்பித்த புதியவனுக்கு கடிதம் படிக்க

ரேவதி சதீஷ்  – உன் காதலே அன்றி கடிதம் படிக்க

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்களும் அவர்களுக்கு வாழ்த்துச் செல்ல வசதியாக இணைப்பு கொடுத்திருக்கிறேன். வாழ்த்துங்கள், ப்ளீஸ்!

முடிவுகள் சொன்னபடி ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகின. என்னால் தான் உடனே பதிவு எழுத முடியவில்லை. தாமதத்திற்கு மாப்பு!

போட்டிக்கு வந்த எல்லா கடிதங்களையும் படிக்க : இங்கே

 

இந்த அருமையான வாய்ப்பைக் கொடுத்த திரு சீனுவிற்கும், எல்லா கடிதங்களையும் படித்து பரிசுகளை முடிவு செய்ய உதவிய  திரு அப்பாதுரை, திரு ஸ்ரீராம், திரு பாலகணேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

 

thank you 1

Advertisements

25 thoughts on “ஆஹா…. முடிவு வந்தாச்சு!

  1. “கனம்” ;))))) நீதிபதி அவர்களே, பங்கு கொண்ட + பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தேர்வுக்குழுவுக்கும் பாராட்டுக்க்ள் + வாழ்த்துகள்.

    குறிப்பாக, உண்மையான “கனம்” + ஒரே பெண் நீதிபதியாகிய உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

  2. வணக்கம்
    அம்மா
    காதல் கடிதம் பரிசுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியடைந்த யாவருக்கும் எனது வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாருங்கள் தமிழ்ச்செல்வி!
      ரொம்பவும் சுவாரஸ்யமான ஒரு கடிதத்தை எழுதி பரிசு வாங்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
      என் தளத்திற்கும் வந்து நன்றி சொல்லியதற்கு ஒரு சிறப்பு நன்றி!

    1. வாருங்கள் ராஜி!
      ஆஹா! நீங்கள் மட்டுமே நீதிபதியை சரியாக கௌரவப் படுத்தியிருக்கிறீர்கள்!
      வருகைக்கும், நீங்கள் கொடுத்த கௌரவத்திற்கும் நன்றி!

  3. மிகச் சிறப்பாய் நடுவர் பணி ஆற்றியமைக்கு மிக்க நன்றி ரஞ்சனி அம்மா :-))))

    நீங்கள் நால்வரும் இல்லாவிட்டால் சிறப்பான இந்தப் போட்டியும் இல்லை

    1. வாருங்கள் சீனு!
      நீங்கள் உங்கள் தளத்தில் எழுதி இருப்பதைப்போல எங்கேயோ உட்கார்ந்து கொண்டு நால்வருமாக மின்னஞ்சல் மூலமே பேசி….ஒரு புதிய அனுபவம்.
      நன்றி சீனு. பதிவர் திருவிழாவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

  4. ம்..ம்ம்..அடுத்தவங்க காதல் கடிதங்களைப் படிச்சதுமில்லாம‌,பரிசை பங்குவேறு பிரிச்சு கொடுத்துட்டு, பட்டாசு வெடிச்சா கொண்டாடறீங்க!!

    படிக்க ஜாலியாத்தான் இருக்கும், நேரம் கிடைக்கும்போது போய் எல்லா கடிதங்களையும் படித்துவிட்டு வருகிறேன்.

    ‘கனம்’ நீதிபதி அவர்களுக்கும், பரிசு பெற்றவர்கள், பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    1. வாருங்கள் சித்ரா!
      அவங்களாகவே மனமுவந்து கொண்டு வந்து காட்டி, பரிசு கொடுங்க என்று கேட்கும்போது என்ன செய்வது?

      உண்மையிலேயே நல்ல அனுபவம்.

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  5. மற்றக் கடிதங்களைப் படிக்கலை. ஆனால் தமிழ்ச் செல்விக்கு இரண்டாம் பரிசாவது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆறுதல் பரிசு தான் என்பதில் கொஞ்சம் ஏமாற்றமே! :)))

    பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    1. வாருங்கள் கீதா!
      ஒவ்வொரு கடிதத்தைப் படிக்கும்போது இதுதான் முதல் பரிசுக்குத் தகுதி வாய்ந்தது என்று தோன்றும். அடுத்தவாரம் இன்னொரு கடிதம் அந்த இடத்தைப் பிடிக்கும். கடைசி வாரம் 22 கடிதங்கள். படித்து முடிப்பதற்குள் ….. ஒரு நாளைக்கு 5 கடிதங்கள் என்று படித்து மதிப்பெண்கள் கொடுத்து…. பல கடிதங்கள் முதல் மூன்று பரிசுக்குப் போட்டி இட்டன.

      எல்லோருமாக சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் இவை.

      ஒரு பத்து பதிவு போடலாம். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன.

      வருகைக்கும், மிகவும் open ஆகப் போட்ட கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s