சுதந்திர தினம்

சுதந்திரம் எதிலிருந்து?

 

 

அந்நியனிடமிருந்து நம் நாட்டிற்கு விடுதலை கிடைத்து விட்டது. நமக்கு?

 

எப்போது பார்த்தாலும் நம் நாட்டை குறை கூறிக் கொண்டே இருக்கிறோமே, அந்த மனப்பான்மையிலிருந்து விடுதலை பெறுவோம். நம் எல்லோருக்கும் இது ஒரு மன நோய் போல ஆகிவிட்டது.

 

இன்று ஒரு பட்டிமன்றம் பார்த்தேன். இன்றைய நிலைக்கு இளைஞர்களே காரணம் என்று ஒரு சாரார், இல்லை முதியோர்களே என்று ஒரு  சாரார் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டனர். நடுவர் கடைசியில் நமது இளைய தலைமுறைக்கு நாம் சரியாக எதையும் கற்றுக் கொடுக்கவில்லை அதுவே இன்றைய நிலைக்குக் காரணம் என்று முடித்துவிட்டார்.  ஒருவிதத்தில் இதுவும் சரியே. நமக்கு நம் பெற்றோர்கள் சொல்லித் தந்த பல விஷயங்களை நாம் நம் இளைய தலைமுறைக்கு சொல்லித் தந்தோமா? நம்மை நாமே கேட்டுக் கொள்ளுவோம். 

 

விடுதலை கொடுத்துவிட்டு போன மகானுபாவன் அதை எப்படிக் காப்பது என்று சொல்லித் தரவில்லையே! 

 

விடுதலைப் போராட்டம் என்னும் மிகப்பெரிய போர் முடிந்து எல்லோரும் ஓய்வு எடுத்துக் கொள்ள போய்விட்டனர். நீண்டகால ஓய்வு. ஓய்வு முடிந்து திரும்பி வந்தால்…அவரவர் அவரவர் பாணியில் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

 

சாலைகளில் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஒட்டினார்கள். கேட்டால் நான் சுதந்திர இந்தியாவின் சுதந்திர குடிமகன்.  எப்படி வேண்டுமானாலும் வாகனம் ஓட்ட எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்கிறார்கள். 

 

சுதந்திர நாட்டில்  தேர்தலில் வாக்குப் பதிவு செய்வது உங்கள் கடமை என்றால் ‘எனக்கு இன்று விடுமுறை . வெளியில் போகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக வீட்டில் இருக்கவே விரும்புகிறேன்’ என்கிறார்கள். விடுமுறை கொடுத்ததே வாக்கு சாவடிக்குப் போகத்தான்! நம்மில் எத்தனை பேர் தவறாமல் வாக்களிக்கிறோம்?

 

எல்லோரும் தங்கள் கடமையைச் செய்தால்தான் ஒரு அலுவலகமோ, வீடோ தொடர்ந்து இயங்க முடியும். நாடு என்பதும் இவைப் போன்றதே. நான் வாக்குப் பதிவு செய்யமாட்டேன் என்கிறவர்களுக்கு ஆள்பவர் சரியில்லை என்று சொல்லவும் உரிமை இல்லை.

 

வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் இந்தியாவைக் குறை சொல்லும் குட்டை புத்தி வேண்டாம். அங்கு மிகவும் நல்ல குடிமகனாக இருப்பவர் இங்கு வந்தவுடன், வரிசையில் நிற்க மறுப்பதும், கண்ட இடங்களில் குப்பையைப் போடுவதும் ஏன்? 

 

வெளிநாட்டில் இருக்குவரை எந்த மொழி பேசினாலும் இந்தியர். இந்தியாவில் காலை வைத்தவுடன் என்ன ஜாதி என்று கேட்பது ஏன்?

 

வெளிநாட்டு குடியுரிமை வாங்க அந்த நாட்டு சரித்திரம் படித்து பரீட்சை எழுதும் இந்தியர்கள் எத்தனை பேருக்கும் நம் வரலாறு தெரியும்? முதலில் நம் நாட்டின் நல்ல குடிமக்களாக மாறுவோம். 

 

 

நம்மிடம் இருக்கும் இந்த மனநோயிலிருந்து சுதந்திரம் பெறுவோம். அப்போதுதான் நாம் சொல்லும் சுதந்திரதின வாழ்த்துக்களுக்கு அர்த்தம் இருக்கும். மேலோட்டமான சுதந்திர தின வாழ்த்துகள் வேண்டாமே!

 

நம் கடமையை நாம் செய்வோம். நாடும் முன்னேறும். நாமும் முன்னேறுவோம். 

 

independance day

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

46 thoughts on “சுதந்திரம் எதிலிருந்து?

 1. வணக்கம் ,
  இனிய சுதந்திர நல்வாழ்த்துகள் 🙂
  நீங்கள் கொண்ட இது போன்ற கேள்விகள் எனக்கும் எழுந்ததுண்டு என்ன செய்ய முடியும்?! நாம் பேச,இல்ல சொல்லத்தான் முடியும் எதையும் மாற்ற முடிகிறதில்லையே.நாம் மாறினாலும் நம்மை சுற்றியுள்ள சமுதாயம் நம்மை மாற்றி விடுகிறது.மேலும் நம் கொள்கைகளுடன் இருப்பினும்,நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காக நாம் சற்றே சில நொடிகள் கொள்கைகளை தவிர்க்க நேரிடுகிறது.பெற்றோர்கள், பெரியவர்கள் கொண்டு நம் நாட்டின் பாரம்பரியம் அறிய வேண்டிய வயதில் அதை தவற விட செய்வது சற்று கவலைபட வைக்கிற விடயம் தான் . பெரும்பாலான இளைய தலைமுறையினர் தங்கள் status ,பெரோர்களின் statusக்காகவே வெளிநாடு சென்கின்றனர். நல்ல குடிமகனாகலாகவே இருக்கின்றனர்..இங்கே வந்தவுடன் “நம் நாடு தானே” என்ற இளக்காரம் ஏன் வருது என்று தான் புரியவில்லை,அப்படி நினைத்தல் கூடாதுஎன்று சொல்லிகுடுக்கவும் முடியாது தாமாக உணர வேண்டும் அதுவே நம் மனம் காணும் சுதந்திர எண்ணமாகும்.

  நாம் நம் கடமையில் தவறாமல் இருந்தாலே நிறையா சுதந்திரம் நமக்கும் நம் சார்ந்தவருக்கும் கிட்டும் (என் கருத்து )

  நன்றி 🙂

 2. மிகச் சரியான கருத்து
  சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
  சீர்திருத்தங்களை நம்மிலிருந்தும்
  புரட்சிகளை நம் வீட்டிலிருந்தும்
  துவக்குதலே நாட்டின் மாறுதலுக்கு வழிவகுக்கும்
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  1. வாருங்கள் ரமணி ஸார்!
   //சீர்திருத்தங்களை நம்மிலிருந்தும்
   புரட்சிகளை நம் வீட்டிலிருந்தும்
   துவக்குதலே நாட்டின் மாறுதலுக்கு வழிவகுக்கும்//
   மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. அன்பின் ரஞ்சனி நாராயணன் – ஆதங்கம் புரிகிறது – ஆலோசனைகள் எல்லாம் சொல்லித் தெரிவதில்லை – தானாக உணர வேண்டும் – உணரும் காலம் வரும் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. வெளிநாட்டு குடியுரிமை வாங்க அந்த நாட்டு சரித்திரம் படித்து பரீட்சை எழுதும் இந்தியர்கள் எத்தனை பேருக்கும் நம் வரலாறு தெரியும்? முதலில் நம் நாட்டின் நல்ல குடிமக்களாக மாறுவோம்.

  இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..!

 5. // வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் இந்தியாவைக் குறை சொல்லும் குட்டை புத்தி வேண்டாம். அங்கு மிகவும் நல்ல குடிமகனாக இருப்பவர் இங்கு வந்தவுடன், வரிசையில் நிற்க மறுப்பதும், கண்ட இடங்களில் குப்பையைப் போடுவதும் ஏன்? //

  வெளிநாட்டில் இருக்கும் போது அவர்களுக்கு இருந்த சட்டம் ஒழுங்கு பயம் இங்கு வந்தால் இருப்பதில்லை.

  // வெளிநாட்டில் இருக்குவரை எந்த மொழி பேசினாலும் இந்தியர். இந்தியாவில் காலை வைத்தவுடன் என்ன ஜாதி என்று கேட்பது ஏன்? //

  நன்றாகவே கேட்டு விட்டீர்கள்.
  சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

 6. ஆம் நம் கடமையாக நாம் என்ன செய்தோம் என்று நம்மை முதலில் சுய சோதனை செய்து விட்டு அப்புறம் மற்றவரை குறை சொல்வோம்.அருமையான பதிவு

 7. நாம் நம் குழந்தைகளுக்கு முதலில் சக மனிதர்களை மரியாதையாக மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
  சினிமா, மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டும் பலிவாங்கும் காட்சிகள், மனிதனை மனிதன் தரக்குறைவாக பேசுவது , போட்டி, பொறாமை, வஞ்சம் முதலியவற்றை நீக்கி, மனிதனுக்கு மனிதன் உதவும் காட்சி, விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மை, ஒற்றுமை இவற்றை சொல்லும் காட்சிகளை அமைத்தால் அதைப் பார்க்கும் இளம் தலைமுறை நல்ல வழி நடப்பர்.
  சுதந்திரம் எதையும் பேசுவது இல்லை, நல்லதை பேசுவதே என்பதை அழகாய் சொன்னீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  1. வாருங்கள் கோமதி!
   மிக அருமையான யோசனைகளை முன் வைத்துள்ளீர்கள். பெரியவர்கள் இளைய தலைமுறையை வழி நடத்தணும்.
   வருகைக்கும் மிகச் சிறப்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 8. இது எல்லாம் போகட்டும் இந்த தளித்தின் வலது பக்கம் கடைசியில் சுதந்திரமாக கொடியிடன் நடையோ நட என நடக்கும் கொடியிடை அழகி யார் ?? நீங்களா ?

  மீ டூ Everything under the sun with a touch of humor! 😉

  1. வாருங்கள் ஓஜஸ்!
   நான் மட்டும் இப்படி நடையாய் நடந்தேன் என்றால் ….ஆஹா…. கற்பனையிலேயே இளைத்துவிட்டேன்!
   கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டதோ?
   வருகைக்கும் பதிவின் seriousness ஐ மாற்றியதற்கும் நன்றி!:)

 9. திரு சேதுராமன் அனந்தகிருஷ்ணன் அவர்கள் மின்மடலில் அனுப்பியது:
  गो रस गली गली बिकै,मदिरा बिकी बैठ. கபீர் .நாம் நம் நாட்டு இலக்கியங்களில் கூறப்பட்ட மேற்கோள்களை விட்டுவிடுகிறோம்.
  அந்த அளவுக்கு வெளிநாட்டு மோகம்.கர்ம மார்க்கம் என்பது கீதை.ஐ கேன் டூ என்றால் ஒபாமா நகல்.சரி .கபீர் என்ன சொல்கிறார். பால் காரன் தெரு-தெருவாக சென்று பால் விற்கிறான். சாராய வியாபாரி உட்கார்ந்த இசத்திலேயே விற்கிறான். இந்த இருவரில் லக்ஷ்மி தேவி அதிகம் கருணை காட்டுவது யாருக்கு.? இது தான் உலகம்.நாட்டின் இன்றைய நிலை இப்படி. குறை சொல்லவேண்டாம். நிகழ்வுகளைக் கூறினாலே குறையாகிவிடுகிறது.பட்டிமன்றம் .
  ஆன முதலில் அதிகம் சிலவானால்…அவ்வை சொன்னது. இன்று இளைஞர்கள் வேலை கிடைத்ததுமே கட அட்டை.
  மீண்டும் மீண்டும் நினைவு படுத்த முழு பாடல்.
  ஆன முதலில் அதிகம் சிலவானால்.மானமிழந்து ,மதிகெட்டு போன திசை எல்லோருக்கும் கள்வனாய்.
  ஏழ் பிறப்பும் தீயோனாய், நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. இப்பொழுது கடன்…வட்டிகட்ட அதிக உழைப்பு.நமது நல்லுரை .மூதுரை,தீரிகடும் போதும் நேர்மை,ஒழுக்கத்திற்கு. இதை மறந்துவிட்டோம்.அரசு தமிழ் புத்தகத்தில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வரியை விடுத்து தமிழ் பாடநூல் கருணை ஆட்சியில் வெளியிட்டது.

  தங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களால் எழுந்த சுதந்திர எண்ணங்கள். தங்களால் மனதில் எழுந்தவை. நன்றி.

 10. உங்களுக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

  என்ன ஆச்சு, எங்கும் கோபக்கனல் வீசுகிறது! உங்கள் ஆதங்கத்திற்கெல்லாம் பதில் எழுதினேன். ஆனால் நீளம் கருதி போடவில்லை. மாற்றம் வர வேண்டும், வந்தால் நன்றாக இருக்கும்.

  1. வாங்க சித்ரா!
   சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் காரணம். நீங்கள் எழுதியதை தனிமடலில் அனுப்பிவிடுங்களேன்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 11. வெளிநாட்டில் இருக்குவரை எந்த மொழி பேசினாலும் இந்தியர். இந்தியாவில் காலை வைத்தவுடன் என்ன ஜாதி என்று கேட்பது ஏன்?

  சும்மா நச்சுனு கேட்டு விட்டீர்கள் அம்மா!!

 12. உண்மையிலேயே நம் தாய்நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள ஆதங்கத்தைத் தாங்கள் பதிவிலே வடித்துள்ளீர்கள்.என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாடினான் முண்டாசு கவி. இன்றோ என்று தணியும் இந்த அவல நிலை என்று பாடவேண்டிய நிலையில் உள்ளோம்.காலம் மாறக் காத்திருப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s