General knowledge · India

ஆதார் அட்டை விவரம் – சென்னை வாசிகளுக்கு

adhar

 

 

Inline images 1

 

ஆதார் அட்டைக்கான விபரம் சேகரிக்கும் பணி தமிழகம் முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கியது.

இந்த முகாம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது.

சில மண்டலங்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவடைகிறது.

இந்நிலையில் வேலை காரணமாக சிலர் இம்முகாமில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விபரம் கொடுக்காதவர்களுக்காக அக்டோபர் மாதம் அந்தந்த மண்டல அலுவலகங்களில் நிரந்தர தகவல் சேகரிப்பு மையம் தொடங்கப்படும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவக இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாநகரில் செப்டம்பர் மாதத்திற்குள் 31 லட்சம் பேரிடம் தகவல் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் முதற்கட்ட முகாமில் பங்கேற்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

அவர்களுக்காக அந்தந்த மண்டல அலுவலகங்களில் தகவல் சேகரிப்பதற்கான நிரந்தர மையங்கள் தொடங்கப்படும்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கியவர்களும் தற்போது நடந்து வரும் முகாம்களில் கலந்து கொண்டு பதிவு செய்ய வேண்டும் என்கிறார்.

பணி நடைபெறும் இடங்கள்

உங்க ஏரியாவில் ஆதார் அடையாள அட்டை தகவல் சேகரிப்பு பணி நடைபெறும் இடம் மற்றும் முகாம் முடியும் தேதி விபரம்:

மண்டலம்                                    கடைசி தேதி                          இடம்

பழையவார்டு

* 139                                                     ஜூலை 31                    ரிச்சர்டு பார்க், தமிழ்நாடு திறந்த

வெளிப்பல்கலை கழகம் அருகில்,  சைதாப்பேட்டை.

 

* 149, 150                                           ஜூலை 31                      ராணி மெய்யம்மை பள்ளி, திருவேங்கடம் தெரு, ஆர்.ஏ.புரம்.

* 153                                                    ஜூலை 31                      வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி.

* 155                                                    ஜூலை 31                      பெசன்ட் பள்ளி, அன்னை வேளாங்கண்ணி சர்ச், பெசன்ட்நகர்.

* 155                                                    ஜூலை 31                       பாரதிதாசன் பள்ளி, திருவான்மியூர்.

* 155                                                     ஜூலை 31                      மாநகராட்சி சமூகநலக் கூடம், லட்சுமிபுரம்,

திருவான்மியூர்,  அண்ணாநகர்

* 64                                                       ஜூலை 31                     நடேசன் சமுதாயக் கூடம்

* 74                                                       ஜூலை 31                      சென்னை நடுநிலைப்பள்ளி, எம்.எம்.டி.ஏ காலனி.

* 68                                                        ஜூலை 29                      சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, புல்லா அவென்யூ.

* 70                                                         ஜூலை 29                     சென்னை தொடக்கப்பள்ளி, டெய்லர்ஸ் சாலை.

* 66                                                         ஜூலை 29                      மாநகராட்சி டிவிஷனல் அலுவலகம், சாந்தி காலனி.

* 75                                                         ஜூலை 29                       சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எம்.டி.ஏ.அயனாவரம்

* 39, 41                                                  ஆகஸ்ட் 15                      ஜெ.இ அலுவலகம், ஜி.3 காவல் நிலையம் அருகே, புளியந்தோப்பு.

* 40                                                         ஆகஸ்ட் 5                        சென்னை நடுநிலைப்பள்ளி, டிகாஸ்டர் சாலை, புளியந்தோப்பு.

* 43                                                         ஆகஸ்ட் 5                         சென்னை நடுநிலைப்பள்ளி,

*130,                                                                                                        அம்மன் கோயில் தெரு, மின்ட்.

* 52                                                              ஆகஸ்ட் 14                   சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூர்.

* 54                                                              ஆகஸ்ட் 31                  சென்னை துவக்கப்பள்ளி, 12வது தெரு, ஜே.கே.எம் காலனி.

தயவு செய்து நண்பர்களுடன் பகிரவும்.

 

நன்றி திரு அனந்தநாராயணன்

Advertisements

8 thoughts on “ஆதார் அட்டை விவரம் – சென்னை வாசிகளுக்கு

    1. வாங்க ஜவஹர்!
      உங்கள் ஏரியாவில் குறிப்பிட்டுள்ள இடத்திற்குப் போய் கேட்டால் அவர்களே சொல்வார்கள். அங்கேயே பதிவும் செய்துகொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் documents – ஒரிஜினல் + ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொண்டு போனால் ஒரு நாளில் பதிவு செய்து கொண்டு வந்துவிடலாம். அட்டை பிறகு உங்களுக்கு தபாலில் வரும். ஒருநாள் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

  1. நாங்கள் ஏற்கனவே போய் போட்டோ எடுத்து கை, கண் எல்லாம் அடையாளப் படுத்தி விட்டு அவர்கள் கொடுத்த ஒப்புகை சீட்டை வைத்திருக்கிறேன். ஆனால் அட்டை எப்பொழுது வரும் என்று தெரியவில்லை. இப்ப நாங்கள் ஊரில் வேறு இல்லை . உங்கள் பதிவைப் படித்ததும் அதைத் தான் பேசிக் கொண்டிருந்தோம். எப்படி அட்டை வாங்கிக் கொள்வதென்று.

    நல்ல நல்ல உபயோகமான பதிவுகளாக எழுதி தள்ளுகிறீர்கள். ரஞ்சனி.

    1. வாங்க ராஜி!
      உங்களுக்கு ஆதார் அட்டை ஸ்பீட் போஸ்ட்டில் வரும். நீங்கள் வந்தபின் உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம் ஒப்புகை சீட்டுடன். கவலை வேண்டாம்.

    1. வாருங்கள் உஷா!
      ஆதார் அட்டை ஒவ்வொருவரும் அவரவர்களே போய் வாங்கிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கணவர் இங்கிருப்பதால் அவர் மேற்குறிப்பிட்ட மையங்களில் போய் அவர்கள் கேட்கும் documents கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். (அங்கேயே எடுப்பார்கள்) இந்த procedures முடிந்தபிறகு அவர்கள் ஒரு acknowledgement கொடுப்பார்கள். அட்டை ஸ்பீட் போஸ்ட்டில் வீட்டுக்கே வந்துவிடும்.
      நீங்கள் இங்கே வந்தபின் உங்களுக்கு வாங்கிக் கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s