நோய்நாடி நோய்முதல் நாடி

நல்ல உணவுப் பழக்கம் அவசியம்

 

overweight children

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 6

நான்குபெண்கள் தளத்தில் நான் எழுதும் தொடர் கட்டுரை.

‘நமது மருத்துவக் கட்டுரைத் தொடரில் அடுத்த உறுப்பைப் பற்றிப் பார்க்கும் முன், நேற்று நான் படித்த இரண்டு செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இரண்டு செய்திகளுமே நாம் நமது ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கவனம் கொடுப்பதில்லை என்பதை சொல்லுகின்றன.’

முதல் செய்தி:

11 வயது சிறுமிக்கு அதிக உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திக்கென்றது இதை படித்தவுடனே. இவள் தான் மிகக் குறைந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவள் என்று வேறு போட்டிருந்தார்கள்.

 

 

சஞ்சிதா போஸ் என்கிற இந்த சிறுமியின் உடல் பருமன் முழுக்க முழுக்க தவறான வாழ்க்கை முறையால் – உடற்பயிற்சி எதுவும் இல்லாமல், ஜங்க் உணவுகளை சாப்பிட்டு வந்ததால் உண்டான வினை. பெற்றோர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்களுக்குப் பின் பிறந்தவள் இந்த பெண். செல்லமோ செல்லம். பொதுவாக இந்த அறுவை சிகிச்சை – Bariatric surgery – இதைபோல சின்ன வயதுக்காரர்களுக்கு செய்வதில்லை. மரபணு சம்பந்தமான மருத்துவ சிக்கல்கள், ஹார்மோன்களின் ஒழுங்கின்மை இவற்றால் ஏற்படும் அதிகப் பருமனுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிச்சை செய்யப் படும்.

 

இந்த சிறுமிக்கு இது மாதிரியான தொந்திரவுகள் எதுவுமில்லை. பிறக்கும்போது நல்ல வசதியான குடும்பத்தில் ஆரோக்கியமான குழந்தையாகவே பிறந்திருக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கும் சஞ்சிதாவின் அப்பா சொல்கிறார்: ‘அவளை ரொம்பவும் செல்லமாகவும், அதிக கலோரிகள் கொண்ட உணவை ஊட்டியும் வளர்த்தோம்’ என்று. அவளுக்கு ஆறு வயதான போதுதான் அவள் வயதுக்கு மீறின பருமனுடன் இருக்கிறாள் என்று அவளது பெற்றோர்களுக்குப் புரிந்தது.

 

அறுவை சிகிச்சைக்கு முன் இச்சிறுமியின் எடை 93 கிலோ. அவள் வயதுக் குழந்தைகளின் எடையை விட மும்மடங்கு எடை! காரிலேயே பள்ளிக்கு செல்வதும், பள்ளியில் எந்தவிதமான விளையாட்டுகளிலும் பங்கு கொள்ளாமலும், வீட்டிலும் எந்தவிதமான விளையாட்டும் விளையாடாமல் இருந்திருக்கிறாள் சஞ்சிதா. இதன் விளைவு 50 மீட்டர் கூட நடக்க முடியாமல் போனது அவளுக்கு. உடற்பயிற்சி, ஓட்டம் இவை அவளது முழங்கால்களை பாதிக்கும் (அதிக எடை காரணமாக) என்பதால் அதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

 

அதுமட்டுமல்ல,  கூட படிக்கும் சிறுவர் சிறுமியரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அவர்களிடமிருந்து ஒதுக்கப் பட்டிருக்கிறாள். இது போதாதென்று உடல்நலக் கோளாறுகளும் வர ஆரம்பித்தது. தினமும் இன்சுலின் போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோயாளியாக ஆனாள். உயர் இரத்த அழுத்தம் ‘வரட்டுமா?’ என்று கேட்கும் நிலையிலும் இருந்தது.

 

இந்தக் கட்டுரையை தொடர்ந்து படிக்க : குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கம் அவசியம் 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 5

தொடர்புடைய பதிவுகள்

சிறுவர் சிறுமியரைத் தாக்கும் சர்க்கரை நோய் 

பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் 

Advertisements

2 thoughts on “நல்ல உணவுப் பழக்கம் அவசியம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s