bloggers · Tamil bloggers

பதிவுலகத் தோழி!

friends

 

இப்போதெல்லாம் சென்னை போனால் நிறைய பேர்கள் எனது வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். (பதிவுலகத் தோழி என்று போட்டுவிட்டு உன்னை பற்றி ‘டாம், டாம்’ பண்ணுகிறாயே என்று அடிக்க வராதீர்கள்.) எனது ஓர்ப்படி சொன்னாள்: உங்கள் ‘முப்பதும் தப்பாமே’ படித்ததிலிருந்து தினமும் திருப்பாவை சேவிக்கிறேன்’ என்று. எத்தனை நல்ல விஷயம்!

 

அதேபோல எனது இன்னொரு ஓர்ப்படியின் அக்கா – அதிகம் யாரிடமும் பேசாதவர் – என்னிடம் சொன்னார்: ‘நல்ல பொழுதுபோக்கை பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். என் மனதில் சில விஷயங்கள் உறுத்திக் கொண்டே இருக்கின்றன. உங்களிடம் சொல்லுகிறேன். நீங்கள் எழுதுங்கள்’ என்றார்.

 

அவர் அன்று என்னிடம் சொன்னதை நான் இன்னும் எழுதவில்லை. அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் கனமானவை. நிதானமாக யோசித்து எழுதவேண்டும். நிச்சயம் ஒரு நாள் எழுதுவேன்.

 

எனது மகளின் நாத்தனாருக்கும் கன்னட மொழியில் பதிவுகள் எழுத வேண்டுமென்று ஆசை. அவருக்கும் எப்படி வலைத்தளம் ஆரம்பிப்பது, எப்படி கன்னட மொழியில் எழுதுவது என்று சொல்லிக் கொடுத்தேன். (என் பிள்ளை சிரிப்பது காதில் விழுகிறதா?)

 

எல்லோரும் என் பதிவுகளைப் பற்றிப் பேசும் போது நான் அவர்களிடம் நீங்களும் எழுதலாம் என்று தவறாமல் சொல்லுகிறேன். எழுதுவதால் என்ன நன்மை என்றும் சொல்லுகிறேன். நான் சொல்வதை  மிகவும் ‘லைட்’ டாக எடுத்துக் கொண்டு ‘அதெல்லாம் எங்களுக்கு வராது; நீ எழுது, படிக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள்.

 

எனது பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு வாசகியிடமிருந்து  ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘நான் ஆசிரியை ஆகி இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவள். எனக்கும் உங்களைப் போல எழுத வேண்டும். எப்படி வலைத்தளம் ஆரம்பிப்பது, எப்படி தமிழில் எழுதுவது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு எழுதியிருந்தார்.

 

பலருக்கும் சொல்லி யாரும்  எழுத முன் வராத நிலையில் இந்தக் கடிதம் எனக்கு ரொம்பவும் உற்சாகம் கொடுத்தது. வேர்ட்ப்ரஸ் தளத்தில் எப்படி ஆரம்பிப்பது என்று நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ண்ட கடிதம் எழுதினேன்.

 

அந்த சமயத்தில் தொழிற்களம் வலைத் தளத்திலும் இதே விஷயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரைகளையும் படிக்கச் சொல்லி எனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன்.

 

எல்லோரையும்போல இவரும் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தில் மண் விழுந்தது. நிஜமாகவே வலைத்தளம் ஆரம்பித்து எழுதவும் தொடங்கி விட்டார்! தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுத ஆரம்பித்தார். இரடிற்கும் தனித்தனியாக வேறு வேறு வலைத்தளம் ஆரம்பிக்கச் சொன்னேன்.

 

சின்னுஆதித்யா என்று தனது பேரனின் பெயரில் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து இப்போது 200 பதிவுகளை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டார் எனது பதிவுலகத் தோழி விஜயா.

 

இவரை எனது வலைச்சர வாரத்திலும் அறிமுகப் படுத்தினேன்.

 

நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவர். அதனால் தினமும் புது புது தகவல்கள் தனது பதிவில் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

 

பெங்களூருக்கு அவரது தோழியைப் பார்க்க வந்தவர் எனது வீட்டிற்கும் வந்தார். முதல்முறை சந்திப்புப் போலவே இல்லை. சாயங்காலம் மறுபடி வீட்டின் அருகில் உள்ள பார்க்கில் சந்தித்தோம். இரவு டின்னர் இவரது பிள்ளையின் செலவில்!

 

‘அம்மா, ரொம்ப காரம் சாப்பிடாதே; ஐஸ்க்ரீம் வேண்டாம் சுகர் அதிகமாயிடும்’ என்று பார்த்து பார்த்து சொல்லி அம்மாவை பார்த்துக் கொள்ளும் பிள்ளை.

 

அவ்வப்போது பண்டிகைகளுக்கு, என் பிறந்த நாளுக்கு தவறாமல் தொலைபேசி விடுவார். நான் தான் இந்த தவறாமையை இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 

குரு பூர்ணிமா அன்று எழுதிய பதிவில் ‘நீங்கள் தான் என் பதிவுலக குரு. உங்களுக்கு என் நன்றியை செலுத்தவே தொலைபேசினேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

சிலசமயம் இருவருமே ஒரே விஷயத்தைப் பற்றி எழுதுவோம். எங்கள் இருவரின் அம்மாக்களின் பெயரும் கமலம். இருவரும் (அம்மாக்கள்) பிறந்தது திருவாரூர். இதுபோல இன்னும் நிறைய ஒற்றுமைகள்.

 

எனது பதிவுலகத் தோழி விஜயா தனது குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழவும், பதிவுலகம் தாண்டிய எங்கள் நட்பு இப்படியே நீடித்து நிலைக்கவும்  இறைவனிடம் வேண்டுகிறேன்.

 

Happy blogging Vijaya!

 

 

 

 

 

 

Advertisements

39 thoughts on “பதிவுலகத் தோழி!

 1. தினமும் குறைந்தது இரண்டு பதிவுகளை பகிர்ந்து அசத்துகிறார்கள்… நீங்கள் சொன்னது போல் அறியாத பல தகவல்களுடன்… அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்… நன்றிகள்…

  1. வாங்க தனபாலன்!
   நான் அவரை அறிமுகப் படுத்திய நாளிலிருந்து நீங்கள் அவருக்கு பின்னூட்டம் கொடுத்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 2. நான் இன்று வரை இவரைக் குறித்து அறியவில்லை. போய்ப் பார்க்கணும். உங்களுக்கும் உங்கள் அருமைத் தோழிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நட்பு சிறப்பாகத் தொடரவும் வாழ்த்துகள்.

  1. வாங்க கீதா!
   பதிவுலகத்திற்கு வந்த பின் இது போல நட்புகள் (உங்கள் நட்பையும் சேர்த்து) மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றன. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை. இதையெல்லாம் அறிந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு ஏது?
   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

 3. மின் அஞ்சல் வழியே முழுமையாக வந்துள்ளது. அமைப்பை மாற்றியதற்கு நன்றி.

  மின் அஞ்சல் வழியே படிக்கும் நிதானமாக பொறுமையாக படிக்க முடிகின்றது.

  கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு அறிமுகமானவர்கள்அத்தனை பேர்களும் பணி ஓய்வு பெற்றவர்கள். ஒருவரிடம் மின் அஞ்சல் வழியே அழைத்து எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். அவர் அதை பெரிய அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு தற்போது தினந்தோறும் இரண்டு மூன்று பதிவுகளை போட்டு தாக்கிக் கொண்டு இருக்கின்றார்.

  உங்கள் உற்சாகம் மற்றவர்களுக்கு பரவட்டும்.

  1. வாருங்கள் ஜோதிஜி!
   உண்மையில் பதிவு எழுதுவது மனதை எத்தனை சுறுசுறுப்பாக வைக்கிறது என்று நம்மைப் போன்ற பதிவர்களுக்குத்தான் தெரியும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. இதுவரை இவரது தளத்திற்கு சென்றதில்லை. இனிமேல் தொடர்து செல்ல முயற்சிக்கிறேன்…

  உங்கள் பதிவுலகத் தோழி பற்றி இங்கே எழுதியமைக்கு நன்றி.

 5. உங்கள் தோழியின் வலை தளமும், உங்களுடையது போலவே மிகவும் அருமையான ஒரு வலைதளம்!! நீடூழி வாழட்டும் உங்கள் இருவரின் நட்பு! வாழ்த்துக்கள் 🙂

 6. எனது பதிவுலகத் தோழி விஜயா தனது குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழவும், பதிவுலகம் தாண்டிய எங்கள் நட்பு இப்படியே நீடித்து நிலைக்கவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

  இனிய வாழ்த்துகள்..

 7. பதிவுலகத்தோழியை பற்றி சுவாரஸ்யமாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி! அவரது பதிவுகளை வாசித்து பார்க்கிறேன்! நன்றி!

 8. வாருங்கள் சுரேஷ்!
  வருகைக்கும் எனது தோழியின் பதிவுகளை வாசித்துப் பார்ப்பதாகச் சொன்னதற்கும் நன்றி! இதற்குள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s