வருமான வரி

வருமான வரி சம்பந்தமான செய்தி

Inline images 1

 

 

இனி மாத சம்பளக்காரர்கள் எல்லோரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமலானது!

 

5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வதை வருமான வரித்துறை கடந்த மே மாதம் கட்டாயம் ஆக்கிய நிலையில் தற்போது ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

 

மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், அவர்களும் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

 

ஆனால், தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்கு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

 

அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் முறை, எளிதானது, பாதுகாப்பானது. அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும் ”என்று தெரிவித்துள்ளது.

 

நன்றி: திரு அனந்தநாராயணன்

Advertisements

17 thoughts on “வருமான வரி சம்பந்தமான செய்தி

 1. மிகவும் பயனுள்ள தக்வல் தான்.

  ஆனான் ‘ஆண் லைன்’ வசதியில்லாதவ்ர்கள் ‘பெண் லைனில்” பதிவு செய்ய்லாமா?

  இங்கு ‘பெண் லைன்’ என்று நன் சொல்ல் வருவது என்னவென்றால் ………..

  அதாவது வழக்கம்போல பென்னால் [பேனாவால்] படிவத்தில் எழுதி கையெழுத்துப்போட்டு ரிடர்ன் சப்மிட் செய்யலாமா?

 2. மிகவும் பயனுள்ள தக்வல் தான்.

  ஆ னா ல்

  ‘ஆண் லைன்’ வசதியில்லாதவ்ர்கள் ‘பெண் லைனில்” பதிவு செய்ய்லாமா?

  இங்கு ‘பெண் லைன்’ என்று நா ன் சொல்ல் வருவது என்னவென்றால் ………..

  அதாவது வழக்கம்போல பென்னால் [பேனாவால்] படிவத்தில் எழுதி கையெழுத்துப்போட்டு ரிடர்ன் சப்மிட் செய்யலாமா? என்பதே. ;)))))

  1. ஹா…ஹா… வாங்க கோபு ஸார்!
   வரும்போதே ஒரு ஜோக்குடன் வந்திருக்கிறீர்கள்.
   நிச்சயம் செய்யலாம்.
   வருகைக்கும் நகைச்சுவையான கருத்துரைக்கும் நன்றி!

 3. வணக்கம்
  அம்மா

  அனைவரும் அறியும் படி அருமையான தகவல் சொல்லியமைக்கு மிக நன்றியம்மா அருமையான பதிவு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாங்க ஸ்ரீராம்!
   இப்போதுதான் தெரியுமா? வியப்பாக இருக்கிறதே!
   வருகைக்கும் தகவல் தெரிந்து கொண்டதற்கும் நன்றி!

   1. //ranjani135 says:
    10:52 பிப இல் ஜூலை 24, 2013
    வாங்க தனபாலன்!
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    அவர் வந்தாலே கலக்கல் தான்!//

    நான் வந்தாலே உங்களுக்கு வயிற்றைக் கலக்குகிறதோ????????

    அதனால்தான் நான் முன்புபோல அதிகமான பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவது இல்லை. சிலர் நான் அளிக்கும் பல பின்னூடங்களில் சிலவற்றை மட்டும் ஏனோ வெளியிடாமல் உள்ளனர். சில பின்னூட்டங்கள் நான் அனுப்பும் போதே “காக்கா ஊஷ்” ஆகிவிடுகின்றன. இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கே ஒரே கலக்கலாகத்தான் உள்ளது.

  1. //திண்டுக்கல் தனபாலன் says:
   6:38 முப இல் ஜூலை 24, 2013
   நல்லதொரு தகவல்… நன்றி… வைகோ ஐயா கருத்து கலக்கல்…//

   மிக்க நன்றி ….. திண்டுக்கல் திரு. தனபாலன் சார்.

   1. வாங்கோ கோபு ஸார்!
    மீள் வருகைக்கு நன்றி!
    உங்கள் கருத்து கலக்கலாக இருக்கிறது என்று DD சொன்னதற்கு நீங்கள் வந்தாலே கலக்கலான கருத்துக்களைப் போடுவீர்கள் என்ற அர்த்தத்தில் நான் எழுதியதை தவறாக நினைத்துவிட்டீர்களோ?

    மற்றபடி நீங்கள் வந்தால் எனக்கு வயிற்றைக் கலக்குவது இல்லை. நீங்கள் போடும் பின்னூட்டங்களை அப்படியே போட்டுவிடுகிறேன். காக்கா ஊஷ் ஆவதற்கு நான் பொறுப்பாளி இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 4. மிகவும் பயனுள்ளப் பகிர்வு ரஞ்சனி ஆனால் வருமானத்தையோ அதற்கு வரி கட்டுவதைப் பற்றிய கவலை எனக்குத் தற்போது இல்லை என்பது சந்தோஷமாக உள்ளது.

  1. வாங்க விஜயா!
   நானும் உங்களைப் போலத்தான்.
   எனக்கு வந்த தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s