இசைப்பா · Uncategorized

மறைந்தும் மறையாத வாலி

எனக்குப் பிடித்த வாலியின் பாடல்கள்

மறைந்த வாலியை பற்றி இணையம் முழுக்கத் தகவல்கள்.

எல்லோருக்கும் தெரிந்ததை எழுதுவதைவிட எனக்குப் பிடித்த அவரது பாடல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தலாமே என்று இந்தப் பதிவு.

முதல் பாடல் சந்த்ரோதயம் ஒரு பெண் ஆனதோ. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

 சந்திரோதயம் ஒரு பெண் ஆனதோ

 

 

 

காற்றில் வரும் கீதமே

 

பாடல் வரிகள், இசை எல்லாமே நம்மை மயக்கும். பாடல் காட்சியும் ஒரு சிறுகதை போல நம் மனதை ஆக்கிரமிக்கும்.

உன்னே நினெச்சேன்

 

நீ பாதி நான் பாதி

 

வாலி மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாமல் நம்முடன் பயணிக்கும். சினிமாவில் பல தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய வாலியின் இசை வரிகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பயணப்படும்.

 

இதைவிட ஒரு கலைஞனுக்கு சிறப்பு வேறு உண்டா?

Advertisements

20 thoughts on “மறைந்தும் மறையாத வாலி

 1. நறுக்கென்று நாலைந்து பாடல்களைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ;)))))

  //வாலி மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாமல் நம்முடன் பயணிக்கும். சினிமாவில் பல தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய வாலியின் இசை வரிகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பயணப்படும்.//

  ஆம் …… நிச்சயமாக !

  //இதைவிட ஒரு கலைஞனுக்கு சிறப்பு வேறு உண்டா?//

  வேறு ஏதும் இருக்கவே முடியாது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

 2. தேசிய விருது பெற்ற “உன்னை நெனைச்சேன்” பாடல் உட்பட அனைத்தும் பாடல்களும் இனிமையானவை…

  ஒன்றா…? இரண்டா…? …ம்… அவரின் வரிகள் என்றும் வாழும்…

  1. வாங்க வெங்கட்!
   உங்கள் தளத்தில் நீங்கள் பதிந்திருக்கும் பாடல்களையும் ரசித்தேன்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. சந்திரோதயம் பாடல் எப்பவும் ‌என் மனசில ரீங்காரமிடுற பாடல். மத்த பாடல்களும் ரசிக்கற லிஸ்ட்ல இருக்கறவைதான். மகத்தான அந்தக் கவிஞனுக்கு மறக்க இயலாத அஞ்சலி பண்ணிருக்கீங்கம்மா.

  1. வாங்க கணேஷ்!
   நீங்களும் உங்கள் தளத்தில் அருமையான கவிதை எழுதி வாலியை பெருமைப் படுத்தியிருக்கிறீர்கள்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல நாட்கள் போதாது அந்த்க் கவிஞனின் பாடல்களை வர்ணிக்க வார்த்தைகளும் போதாது என்பதுதான் நிதர்சனமான உண்மை நிறைவான அஞ்சலி செலுத்தியுள்ளீரகள் ரஞ்சனி

 5. சிறியவர்,பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரையும் அரவணைத்துச் சென்ற‌ வாலி அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

 6. மரணத்தில் எல்லோரும் மரணிப்பதில்லை.
  மரணங்களை கடந்து மண்ணில் புகழோங்கி மனங்களில் நிறைந்திருக்கும் வல்லமை கொண்டோரும் இம் மண்ணுலகில் நித்தியமாய் வாழ்வதுண்டு.
  அத்தகைய நித்தியக் கலைஞன்,கவிஞன் “வாலி”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s