குழந்தை வளர்ப்பு

தலைவலி மனம் சார்ந்ததா?

headache tablet

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 5

 

சென்றவாரம் ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் ‘சித்த வைத்தியத்தில் சருமப் பராமரிப்பு’ என்பது பற்றி ஒரு மருத்துவர் பேசியபோது ஒரு கருத்தை முன் வைத்தார். ‘சருமப் பராமரிப்பு பற்றி வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி அதில் காட்டும் கிரீம்களை வாங்குவதில் செலவழிக்கும் பணத்தில் பாதியை நல்ல உணவுகள் சாப்பிடுவதில் செலவழித்தால், இந்தக் க்ரீம்களுக்கு வேலையே இருக்காது. வெளிபூச்சு எத்தனை பூசினாலும் சருமத்திற்கு பளபளப்பு என்பது உள்ளிருந்து வருவது’ மருத்துவரின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.  

 

நமது ஆரோக்கியமும் இப்படித்தான். நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் நமது ஆரோக்கியம் காக்கப்படும். தலைவலிக்கு என்ன சத்துள்ள உணவு என்று கேட்கிறீர்களா? மனதை அலைபாயாமல் வைத்துக் கொள்வதுதான் தலைவலிக்கு மருந்து, சத்துள்ள உணவு எல்லாம்.

 

குழந்தைகளுக்கு வரும் தலைவலிகள்:

பள்ளி கிளம்பும் நேரத்தில் சில குழந்தைகள் தலைவலிக்கிறது என்பார்கள். பள்ளிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்துவிட்டு வாருங்கள். குழந்தையிடமே சற்று நிதானமாக உட்கார்ந்து பேசுங்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகம்.

 

எத்தனை இடங்களில் எத்தனை மனிதர்களை அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ வேண்டி இருக்கிறது, பாவம். பள்ளியில் ஆசிரியை மட்டுமல்ல; ஆயாக்களும் இருக்கிறார்களே. பள்ளியில் அசுத்தமான கழிப்பறைகள். இயற்கையின் அழைப்புக்களை சரியானபடி கவனிக்கவில்லை என்றால் கூட தலைவலி வரும். பக்கத்து இருக்கை பையனுடன் சண்டை. அவன் ‘நான் எங்கப்பாவை அழைத்து வருகிறேன்’ என்றால் இவனுக்குத் தலைவலி வரும்.

 

மேலும் படிக்க : தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு?

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 4

Advertisements

8 thoughts on “தலைவலி மனம் சார்ந்ததா?

  1. வாசித்து விட்டேன்… இந்த தளத்தில் ஓட்டும் இட்டு விட்டேன்… நன்றி அம்மா…

    (2nd) திருவிழாவில் நீங்கள் கலந்து கொள்ள முடியாதது குறித்து வருத்தமாக உள்ளது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s