India

இன்றைய இந்தியா!

 • இன்றைய இந்தியா இருக்கும் நிலையில் ஒருவரை எப்படி வாழ்த்தலாம்?

உங்கடைய சந்தோஷங்கள் பெட்ரோல் விலை போல உயரட்டும்!

இந்திய நாணயத்தின் மதிப்பு சரிவது போல உங்கள் வருத்தங்கள் எல்லாம் கீழே விழட்டும்.

உங்கள் மனதில் இந்திய ஊழல் போல மகிழ்ச்சி பரவட்டும்!

 • GDP இந்த வருடம் உயரும்.

G என்றால் Gas, Gold

D என்றால் Diesel, Dollar

P என்றால் petrol, Parties

 • புது மாப்பிள்ளை மாமனாருக்கு எழுதிய கடிதம்:

அன்புள்ள மாமனாருக்கு,

நான் உங்களிடமிருந்து வரதட்சணையாக கார் வாங்கியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து உங்கள் பெண்ணையோ அல்லது காரையோ திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரே சமயத்தில் என்னால் கட்டி மேய்க்க முடியவில்லை.

 • இப்போது டாடா நேனோ காரின் எரிபொருள் செலவு அதன் சுலப மாதத் தவணைத் தொகையை விட  அதிகம்.
 •  இந்திய ரூபாய் சீனியர் சிடிசன் ஆகிவிடும். ( யு.எஸ். டாலரைவிட ரூ.6௦/- க்கும் அதிகம்.)
 • பெங்களூரில் ஏற்கனவே பெட்ரோல் Senior Most Citizen ஆகிவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 81/-!!!
 • பலப்பல வருடங்களுக்குப் பிறகு பியர் பெட்ரோலை விட விலை மலிவு!

இப்போது புதிதாக ஒரு ஸ்லோகன் வரும்: Just Drink; Don’t Drive!!

 • பெட்ரோல் விலை ஏற்றத்தினால் போக்குவரத்து  நெரிசல்கள் குறையலாம். குடித்துவிட்டு ஓட்டுவது இப்போது பிரச்னையாக இருக்காது. யாரால் ஒரே நாளில் மதுபானமும் வாங்கி பெட்ரோலும் வாங்க முடியும்?
 • இந்தியாவிற்கு ஒரு புது பெருமை:

உலகின் மலிவான காருக்கு உலகின் விலையுயர்ந்த பெட்ரோல் போட்டு ஓட்டலாம்!

 • பெட்ரோல் பங்க்கில்  ஒரு அறிவிப்பு:

20,000 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்குங்கள் ஒரு TATA நேனோ கார் முற்றிலும் இலவசம்!

 • பெட்ரோல் பங்கில் கேட்ட ஒரு உரையாடல்:

காரின் சொந்தக்காரர்:  முழு டாங்க் போடுங்க

அட்டெண்டர்: PAN கார்ட் காப்பி வேண்டும் ஸார்!

கா.சொ:  என்ன???

அட்டெண்டர்: அதிக மதிப்பு பொருள் வாங்கிறீர்கள் ஸார்!

ஆடுவோம்! பாடுவோம்! கொண்டாடுவோம்!!!

Advertisements

23 thoughts on “இன்றைய இந்தியா!

 1. அருமையான பகிர்வு ஆனால் உங்கள் எழுத்தில் உள்ள நகைச்சுவையை ரசிப்பதா அல்லது இந்தியாவின் விலையேற்றத்தை எண்ணி வருந்துவதா என்று தெரியவில்லை

 2. ஹூம், என்னத்தைச் சொல்றது! மோசமாக இருக்கிறது. தொலைக்காட்சியைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்! மக்களின் கஷ்டத்தை உணராத அரசு! 😦

 3. நம்ம வீட்டு குழந்தைகள் மட்டும் எவ்வளவு படித்து இருந்தாலும் group IV முதல் IAS பரிஷை வரை எழுதணும்…அரசியல் வாதிகள் அவர்களின் கொள்ளு பேரன்..எள்ளு பேரன்வரை சொத்து சேர்த்து வைத்துவிட்டு,அவர்களையும் அரசியலில் அடுத்த வாரிசு-ஆக நியமித்து விடுவார்கள்..ஒட்டுபோட்ட மக்களுக்கு????இலவச அரிசி,டிவி,mixi,சைக்கிள்,கம்ப்யூட்டர்,…அடுத்த தேர்தல் வரும்போது இலவச செல்போன்,freetop-up,கட்டணம் இல்லாத கேபிள்டிவி. 3வேளை கோவிலில் அன்னதானம் ..வந்தாலும் வரும்…இந்தியாவுக்கு ராம ராஜ்யம் வராது …ஒரு குறைந்த பட்ச அரக்கர் ஆட்சியாவது வருமா?…இரவு வேளையில் தொடர்ந்து பெண்கள் வேலை பார்க்க(ஜவுளி துறையில் )சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு யோசிக்கிறதாம்…ஆமாம்…அப்போதுதானே …கற்பழிப்பு ,பாலியல் பலாத்காரம் என் பத்திரிகை,tv-காரர்களின் பொழப்பு ஓடும்…நான்தான் பாவம்…(ஒரு சராசரி இந்தியன் ==)

  1. வாங்க வேணுகோபால்!
   சராசரி இந்தியனின் உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை ரொம்பவும் உண்மையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

 4. குடும்பத்தில் பெரியவர்கள் யாராவது காலமாகி விட்டால்,சிலநாட்கள் கழித்து எதாவது பேசும்போது காலமாகி விட்டவரை பற்றி பேச்சுவரும்…சம்பந்த பட்டவர்கள் அழதொடங்குவர்..வீட்டில் உள்ள மற்ற பெரியவர்கள்.,..பேச்சைமாற்ற..காலமானவர் அப்போ செய்த சேஷ்டைகள்,குறும்புகளை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்பதுபோல்,இந்த கஷ்டங்களை எல்லாம்,அவலங்களை எல்லாம் நகைச்சுவையோடு தான் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s