Life

ராகிங் – ஆன்லைன் தீர்வு

ragging image

 

ராகிங் என்பது கல்லூரிகளில் புது மாணவர்கள் சேரும்போது பழைய மாணவர்கள் – அதாவது சீனியர்ஸ் என்று அழைக்கப்படுபவர்கள் – செய்யும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு மூலம் புது மாணவர்கள் தங்களது பயம் நீங்கி பழைய மாணவர்களுடன் சுலபமாகப் பழக முடியும். இதுவே இந்த விளையாட்டின் உண்மையான நோக்கம்.

 

இந்த விளையாட்டு எல்லைமீறிப் போகும் போது பல புது மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் போகிறார்கள். சில சமயங்களில் கொலை செய்யும் அளவிற்கும் மாணவர்களிடையே தீராத கோவம், பழி வாங்கும் மனோ நிலையையும் இந்த ராகிங் உண்டு பண்ணியிருக்கிறது.  நாவரசுவை அவரது பெற்றோர்கள் மட்டுமல்ல, நாமும் சுலபத்தில் மறக்கமுடியாது.

 

எந்த ஒரு விஷயமுமே எல்லை மீறிப் போகும்போது அபாயகரமாகிறது. எந்தக் காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகள் இப்படிப்பட்ட அவமானத்திற்கு ஆளாகக் கூடாது. இது சரியல்ல. இது மனிதத் தன்மையும் அல்ல. சட்டத்தை மீறிய செயல் இது.

 

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதீத நம்பிக்கை வைக்கிறார்கள், தங்கள் குழந்தைகள் இந்த அத்துமீறிய விளையாட்டை விளையாட மாட்டார்கள் என்று. ஆனால் இன்னொருவகை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வந்து இதுபோல கல்லூரியில் தன்னை யாரோ ‘ராக்’ செய்தார்கள் என்று சொன்னால் உடனே பயந்து போய் ‘நீ ஒன்றும் சொல்லாதே, எதிர்த்துப் பேசாதே, எதுவும் செய்யாதே, பேசாமல் இரு’ என்று ராகிங்கை பொறுத்துக் கொள்ளும்படி சொல்லுகிறார்கள்.

 

இந்த விளையாட்டில் ஈடுபடும்படி சொல்லாவிட்டாலும், இதைப் பொறுத்துக் கொள்ளச் சொல்வது நிச்சயம் சரியல்ல. பல பெற்றோர்கள் இதைபோல தப்பான அறிவுரை கொடுத்து பின்னால் வருத்தப் படுகிறார்கள்.

 

இப்போது இந்த அத்துமீறல் ராகிங்கிற்கு ஆன்லைனில் தீர்வு காண ஆன்டி-ராகிங் மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.

 

EMAIL: helpline@antiragging.in

 

ANTI RAGGING CALL CENTRE NUMBER IS: 1800 180 5522

 

தகவல் உதவி: திரு அனந்தநாராயணன்

Advertisements

11 thoughts on “ராகிங் – ஆன்லைன் தீர்வு

 1. நான் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் ராகிங் என்று இரண்டு வரி பாடச் சொன்னார்கள். சினிமா டான்ஸ் ஒரு அசைவு காட்டச் சொன்னார்கள். இரண்டும் செய்ததும் நாங்கள் நண்பர்களானோம்! சீரியசாக எல்லாம் நாங்கள் எதையும் சந்திக்கவில்லை.

 2. இந்தியாவில் ராகிங் கொடுமைகதைகளை உறவினங்க சொன்னபோ ரொம்ப பயந்து போயிட்டோம். அவசியம் ராகிங் இந்தியாவில் முழுமையா தடைசெய்யபடணும்.

 3. பயந்து பயந்து கல்லூரி போனேன் ஆனால் ராகிங் என்ற் பெயரில் தமாஷான வரவேற்புதான் கிடைத்தது அதனால் சகஜமாகிவிட்டேன் ஆனால் இப்போது கூட சில இடங்களில் இரகசியமாக இது நடந்து கொண்டுதான் இருக்கிறது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று இது நல்ல பகிர்வு பாராட்டுக்கள்

 4. இப்போதெல்லாம் கல்லூரிகளில் ராகிங் செய்வதில்லை என்று உறுதி மொழி எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். தமாஷாகத் தொடங்கும் ராகிங் கள்நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வன்முறையாக மாறி வருகின்றன. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

 5. ஆமாம் பகிடி வதை பல இடங்களில் பெரும் தொல்லை தான்.
  இது பற்றி நிறைய வாசித்துள்ளேன்.
  நல்ல பதிவு சகோ.
  பாராட்டு உரித்தாகுக.
  வேதா. இலங்காதிலகம்.

 6. கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளும் அவர்கள் பெற்றோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் உங்கள் பதிவின் மூலமாக நிறைய பேரை சென்றடையும் வாய்ப்பு அதிகம் .
  நன்றி பகிர்விற்கு….

 7. நல்லதொரு பதிவு. ராகிங் சாதாரண விளையாட்டாக இல்லாமல் எல்லை மீறும்போதுதான் ஆபத்தாகிவிடுகிறது. பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டியது நம்முடைய கையில்தான் உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s