குழந்தை வளர்ப்பு

வளரும் குழந்தை – அற்புத அனுபவம்

செல்வ களஞ்சியமே – 27

baby creeping

‘ஒவ்வொரு குழந்தை உருவாகும்போதும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி திரும்பத் திரும்ப எழுதப் படுகிறது’ என்கிறார் டாக்டர் ஸ்பாக்.

தாயின் கருவில் ஒரே ஒரு செல் ஆக இருக்கும்போது முதன்முதலில் கடலில் தோன்றிய ஒரு செல் பிராணியைப் போல இருக்கிறது. சில வாரங்கள் கழித்து தாயின் கருவில் அம்னியோடிக் திரவத்தில் நீந்தும் போது மீன்களைப் போல செதிள்களுடன் இருக்கிறது. தவழும்போது நம் மூதாதையர்கள் நான்கு கால்களில் நடந்ததை நினைவூட்டுகிறது. இந்தக் கால கட்டத்தில் தான் தனது விரல்களை நேர்த்தியாக பயன்படுத்தக் கற்கிறது குழந்தை. நான்கு கால்களால் நடந்த மனிதன் இரண்டு கால்களால் நடந்து இன்னும் இரண்டினால் வேறு வேறு வேலைகள் செய்ய முடியும் என்று அறிந்தவுடன், எழுந்து நிற்க தொடங்கினான். நான்கு கால்களில் இரண்டை கையாக பயன்படுத்த ஆரம்பித்தான். அதேபோலத் தான் குழந்தையும்; அம்மா மேல் தட்டில் வைத்திருக்கும் அழகான பூஜாடியை எடுக்க முயலும்போது எழுந்து நிற்கக் கற்கிறது.

தன்னை சுற்றியுள்ள உலகத்தில் தன்னை எப்படிப் பொருத்திக் கொள்வது? மெதுமெதுவே எல்லாவற்றையும் கற்கிறது குழந்தை.

 

ஒரு குழந்தையின் வளர்ச்சியை பக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

 

மேலும் படிக்க: நான் வளர்கிறேனே மம்மி!

Advertisements

11 thoughts on “வளரும் குழந்தை – அற்புத அனுபவம்

 1. முந்தைய பகிர்வில் : (கணனியில் குறியீடுகள் போடுவது எப்படி?)

  /// 1. பதிவு எழுதும் போது (Compose-ல்) ♠ அல்லது ♠ என்று டைப் செய்ய வேண்டும்… ///

  கருத்துரையில் Entity Number அல்லது Entity Name வரவில்லை… அதனால் இங்கே Example : ♠ (s­pade) —> (http://www.w3schools.com/tags/ref_symbols.asp) சென்று பார்க்கவும்… நன்றி…

  1. வாங்க வேணுகோபால்!
   இதைத்தான் நான் அற்புத அனுபவம் என்று சொன்னேன்.
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 2. நிஜம்தான் ரஞ்சனி அற்புத அனுபவம் மட்டுமல்ல அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நிறைய் இருக்கும் அதனால் தான் குழந்தைவளர்ப்பு ஒரு கலை என்றார்கள் அருமையான பதிவு பாராட்டுக்கள்

  1. வாங்க விஜயா!
   உண்மையிலேயே அது ஒரு கலைதான்.
   ‘அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கும்’ – உண்மை, உண்மை!
   வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

 3. ஒரு குழந்தையின் வளர்ச்சியை பக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

  அற்புதமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s