Uncategorized

கவியரசருக்கு ஒரு நினைவஞ்சலி

கண்ணதாசன்

இன்று கண்ணதாசன் பிறந்த நாள். இவர் எழுதிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதிலிருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதல் பாடல்:

பலே பாண்டியா படத்தில் வரும் ‘அத்திக்காய் காய் காய்’

ஒவ்வொரு வரியிலும் வரும் ‘காய்’ என்ற சொல்லுக்கு இடத்திற்குத் தகுந்தாற்போல பொருளும் மாறும். அதுதான் இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

இரண்டாவது பாடல்:

கர்ணன் படத்தில் வரும் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’

கீதையின் சாரத்தை எளிய வரிகளில் பிழிந்து தந்திருப்பார்.

மூன்றாவது பாடல்:

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

இந்தப்பாடல் பற்றிய என் பதிவு இங்கே 

 

இன்னும் நிறைய பாடல்கள் சொல்லலாம்.

கண்ணதாசன் இந்தப் பாடல்கள் வழியே நம் நெஞ்சில் என்றும் இருப்பார்.

மிகப் பெரிய கலைஞனுக்கு ஒரு சிறிய அஞ்சலி.

Advertisements

25 thoughts on “கவியரசருக்கு ஒரு நினைவஞ்சலி

    1. வாங்க தனபாலன்!
      கவியரசரின் பாடல்கள் எல்லாமே முத்துக்கள் தான். எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் மூன்றை எடுத்தேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டியது போல கவிஞர் கண்ணதாசனின் மூன்று பாடல்களைத் தொகுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த பாடல்கள் பிடிக்கும்.

  2. நீங்க குறிப்பிட்ட பாடல்கள் அத்தனையும் தேன் தேன். வீர அபிமன்யு படத்தில் வரும் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் வர துடித்தேன் ….வரிக்கு வரி தேன் தான்.இன்று கவிப்பேரரசரின் பிறந்த நாளை மறந்த மீடியா மற்றும் சினிமாக்காரங்களை என்ன செய்யலாம் ?

    1. வாருங்கள் நாகராஜ்!
      மீடியா, சினிமாக்காரங்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இருக்கவே இருக்கிறது Utube. நமக்கு பிடித்ததை நாம் கேட்டு மகிழலாம்.

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  3. எல்லாமே இனிமையான பாடல்கள். கேட்க கேட்க தெவிட்டாதவை.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள்.
    கவிஞருக்கு சிறப்பான அஞ்சலி.

  4. காய் என்ற் ஒரு வார்த்தையை உபயோகித்து ஒரு பாடலையே எழுத கவியரசர் ஒருவரால்தான் முடியும் நல்லதொரு நினைவாஞ்சலி அவருக்கு அவருக்கு இணை அவர்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு கவி பிறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்

    1. வாங்க விஜயா!
      கவியரசருக்கு இணை அவர்தான். நீங்கள் சொல்வது ரொம்பவும் நிஜம். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க ஆனந்த் விஜயராகவன்!
      உங்கள் பெருமையில் நானும் கலந்து கொள்ளுகிறேன்.
      வருகைக்கும் பாடல்களை ரசித்ததற்கும் நன்றிங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s