இசைப்பா

உலக இசை தினம்

உலக இசை தினம் இன்று. எனக்கு மிகவும் பிடித்த இளைய ராஜாவின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை இசைப்பாவில் கேளுங்கள்.

உலக இசை தினம் 2013 இன்று (21 ஜூன்).  மனம் கனிந்த வாழ்த்துகள். இசை என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் ஒரே தேவன் தான் : ராக தேவன் ராஜா. அவரின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றை, இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். சுவாசம் போல நேசம், இசை எல்லா(ம்) தேசம்  !

இந்த வரிகள் இசைப்பா தளத்தின் பங்களிப்பாளர் திரு ஓஜஸ் அவர்களால் எழுதப்பட்டவை.

இனி, நான் இந்தப் பாடல் குறித்து எழுதியது:

இளைய ராஜாவின் பிறந்த நாள் வாரத்திலேயே வந்திருக்க வேண்டிய பாடல் இது. தாமதமாகிவிட்டது. ஆனால் இசைஞானியின் பிறந்த நாள் அன்று மட்டுமில்லை என்றைக்கும் கேட்டு மகிழக் கூடிய பாடல் இது.

தளபதி படப் பாடல்; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி குரலில் உள்ளத்தையும், உணர்வுகளையும் குளிர வைக்கும் பாடல்.

பாடலின் வரிகளும், இசையும் போட்டிபோடும் இந்தப் பாடலில். வரிகள் ஒவ்வொன்றும் காதலின் உண்மை பேசும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதை வருடும்.

பாடலை இங்கு கேட்டு மகிழுங்கள்

Advertisements

15 thoughts on “உலக இசை தினம்

 1. என்ன என்ன தினமிருக்கு? தெரிஞ்சுக்க முடிகிரது. கம்யூட்டர் கைகொடுக்கும் தினமாக எனக்கிருக்கு அழகாயிருக்கு பகிர்வு.
  .பாட்டெல்லாம் கேக்கவேணுமா, சூப்பர்தான். அன்புடன்

  1. வாருங்கள் காமாக்ஷிமா!
   கம்ப்யூட்டர் சரியில்லையா?
   எனக்கும் இந்த தினம் தெரியாது. இசைப்பா தளத்திற்கு எழுதி அனுப்பினேன். அவர்கள் அதை இந்த தினத்தன்று போட்டிருக்கிறார்கள்.

  1. ஹா…ஹா…. வாங்க துரை!
   யார் கண்டுபிடிக்கறாங்களோ தெரியாது. இசைப்பா தளத்திற்கு என் பங்களிப்பாக இதை எழுதினேன். அவர்கள் இதற்கு ஒரு முன்னுரை போட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.
   நன்றி வருகைக்கும், கருத்துரைக்கும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s