Health and exercise · Life

புதிய தொடர் ஆரம்பம்

health image

 

போன மாதம் தும்கூர் போயிருந்தேன். கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் போனேன். கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி. மருத்துவ மணிக்குள்ளேயே இருந்த  மருந்துக் கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!

9 ஆம் நம்பர் வெளியே வந்தார். மிகவும் சிறிய வயது. காலில் ஏதோ அடி. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து வகைகள் ஒவ்வொன்றிலும் 5 கொடுங்கள் போதும் என்று வாங்கிக் கொண்டார். வசதி இல்லாதவர், அதிகம் படிக்காதவர் என்று அவரது நடை உடை பாவனைகளிலிருந்தே தெரிந்தது. பாவம் என்ன உடம்போ என்று நினைத்துக் கொண்டேன்.

ஒவ்வொருவராக மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்து, மருந்துக் கடைக்காரரிடம் மருத்துவர் சொன்ன மருந்துகளில் பாதி அளவே வாங்கிக் கொண்டு போனார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. சில மருந்துகள் மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் – குறிப்பாக anti- biotic மருந்துகள்.

இவர்களுக்கெல்லாம் யார் சொல்வது இதை என்று ஆயாசம் ஏற்பட்டது.

 

நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம் தேவை. என்னால் முடிந்தது நான் படிக்கும் மருத்துவக் கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

நான்கு பெண்கள் தளத்தில் வரும் புதன்கிழமையிலிருந்து மருத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும், செய்திகளையும் எழுத இருக்கிறேன்.

இந்தக் கட்டுரைக்கான முன்னுரையை கீழே இணைப்பில் படிக்கலாம்.

நோய்நாடி நோய்முதல் நாடி

Advertisements

39 thoughts on “புதிய தொடர் ஆரம்பம்

 1. வணக்கம் அம்மா,,

  தயவு செய்து எழுதுங்கள். நம் மக்களுக்கு வலி போனால் போதும். அவர்கள் புரிந்து கொள்வது அவ்வளவே. நான் என் மருத்துவமனைக்கு வருவோரிடம் எடுத்து சொல்வதுண்டு. ஆனாலும் அவர்கள் “டாக்டருக்கு கமிஷன் கெடைக்குது போல” என்று சொல்லி நான் சொல்லும் அளவில் பாதி மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். வலி, காய்ச்சல் என்பவை எல்லாம் வெறும் அறிகுறிகள் மட்டுமே. அவற்றை உண்டாக்கும் காரணிகள் வேறு என்பதை புரிந்து கொண்டாலே போதும். மருந்து ஒழுங்காக சாப்பிடுவார்கள்.

  நன்றி.
  மதுரக்காரன்.

  1. வாருங்கள் டாக்டர்!
   உங்களது கருத்துக்களை நிச்சயம் பதிவு செய்கிறேன். நான் படிக்கும் பல்வேறு புத்தகங்களிலிருந்து இந்தக் கட்டுரைகளை தொகுத்து எழுத இருக்கிறேன். நான் எழுதும் கட்டுரைகளில் ஏதேனும் திருத்தம் இருந்தாலோ, அவை தொடர்பான புதிய செய்திகள் இருந்தாலோ தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் பங்களிப்பு இந்தக் கட்டுரைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.
   நன்றி!

 2. //கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி//

  இதைப்படியுங்கோ:

  http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html
  ”வாய்விட்டுச்சிரித்தால்”

 3. ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!//

  ரொம்பவும் செளகர்யம் தான். உட்கார்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அங்கு நடந்த கூத்துக்களை வைத்து, ஒருசில பதிவுகள் தேத்தவும் முடிகிறதே !!!!! 😉

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  1. நிச்சயம் தெரிவிக்கிறேன்.
   நான்குபெண்கள் தளம் http://wp.me/p2IA60-rj
   fourladiesforum.wordpress.com
   இந்த தளத்திற்காக பிரத்யேகமாக எழுதுவதால் முழு கட்டுரையையும் எனது இந்த தளத்தில் போட அனுமதியில்லை.
   நான் மேலே கொடுத்திருக்கும் இணைப்பை தொடர்ந்து போய் படிக்க வேண்டும்.
   ஒவ்வொருவாரமும் இங்கே முன்னுரை போலக் கொடுத்து மீதியை அங்கே படிக்க வேண்டும். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் தொடர் சிறப்பாக அமைய உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை.

   சிரமத்திற்கு மன்னிக்கவும்.

  1. வாங்க வெங்கட்!
   உங்களைப் போன்றவர்களின் உற்சாகம் தான் எனக்கு பெரிய டானிக்! தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!

 4. வணக்கம்
  அம்மா
  நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அம்மா தொடர்ந்து எழுதுங்கள் படிக்க ஆவலாக உள்ளேன் உங்களின் இந்த முயற்சி சிறப்பாக அமையட்டும்

  -நன்றி,
  -அன்புடன்-
  -ரூபன்-

 5. // எல்லோருக்குமே ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்ற நினைவு தான், இல்லையா?
  நம்மில் பல பேர் நமக்கும் எல்லாம் வரக் கூடும் என்று நம்பவே தயாராக இல்லை. //

  இந்த வரிகளைப் படித்ததும் எனக்குள் ஒரு உறுத்தல். ஏன் என்றால், ஒருவகையில் நானும் இந்த கேஸ் மாதிரிதான்.

  // எப்படி என்று வரும் புதன்கிழமையிலிருந்து எழுத இருக்கிறேன். எப்போதும் போல உங்களுடைய ஆதரவை நாடுகிறேன். //

  புதன்கிழமையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  1. வாருங்கள் இளங்கோ!
   நோய்களைப் பற்றி விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. இதுதான் இந்தக் கட்டுரைகளின் நோக்கம்.
   தொடர்ந்து படித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி!

  1. வாருங்கள் வேதா!
   உங்களது தொடர் வருகைதான் இதுபோல புது முயற்சிகளை எடுக்க வைக்க காரணம்.
   வருகைக்கும் நீங்கள் கொடுக்கும் உற்சாகத்திற்கும் நன்றி!

 6. மிக நல்ல விடயம் சொன்னீர்கள். மருந்துகளை மருத்துவர் குறிப்பிடும் அளவிற்கு கட்டாயம் எடுக்க வேண்டும். நோய் முழுமையாகக் குணமாகாது விடுவது மட்டுமின்றி. Antibiotic resistance பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருவது இதனால்தான்.

  1. வாருங்கள் டாக்டர்!
   தினமும் தூரதர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சி பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து வைத்துள்ளேன். இதன் மூலம் நான் அறிந்தவற்றை இந்தக் கட்டுரைகள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
   உங்களது பங்களிப்பையும் விரும்புகிறேன். நீங்கள் மிகவும் ‘பிஸி’ யாக இருப்பீர்கள்.
   நேரம் கிடைக்கும்போது வந்து படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஐயா!
   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

 7. மருத்துவத் தொடர் மிகவும் பயனுள்ளதே. எழுதுங்கள். படிக்கப் பயனுற பகிர்ந்துகொள்ள ஆவலாயுள்ளேன்.

  வாழ்த்துக்கள் சகோதரி!

  1. வாருங்கள் இளமதி!
   இப்போதுதான் உங்களின் பஞ்சபூதங்கள் பற்றிய கவிதை படித்துக் கொண்டிருந்தேன். இங்கே உங்கள் பின்னூட்டம்.
   வருகைக்கும், படிக்க ஆவலாக இருப்பதற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s