Food · Health and exercise

கோதுமை மாவில் பரோட்டா!

நேற்று எனது தளத்தில் பரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கைஎன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதற்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

எனக்கும் இந்த பரோட்டாவுக்கும் ரொம்ப ரொம்ப தூரம். இதுவரை செய்ததுமில்லை; சாப்பிட்டதுமில்லை. ஆனால் என் கணவர் நிறைய சொல்லியிருக்கிறார் இது பற்றி.

நாங்கள் சென்னை மேற்கு அண்ணா நகர் பேருந்து நிலையம் எதிரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, மாலை வேளைகளில் ஒரு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். இந்த கூட்டம் பேருந்து நிலையத்தின் வாசலில் இருந்த ஒரு புரோட்டா கடையில் புரோட்டா சாப்பிட என்று தெரிய வந்தது. எங்கள் எதிர்வீட்டுப் பெண்மணி ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ‘புரோட்டா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க…ஜன்னல் வழியா பாருங்க…ரொம்ப interesting ஆக இருக்கும்’ என்றார். அன்றிலிருந்து சில தினங்களுக்கு மிகவும் சிரத்தையுடன் (!) பார்க்க ஆரம்பித்தேன்.

மேல் சட்டை போடாத ஒருவர், கிட்டத்தட்ட ஒரு அண்டா நிறைய மாவு எடுத்து தன் முன்னால் இருந்த பெரிய மேஜையின் மேல் கொட்டி அதில் ஒரு பெரிய குழி செய்து, அதில் நீரைக் கொட்டி கலந்து, பிறகு அதில் ஏதோ சேர்த்துக் கலந்து,  கலந்து, …….மணிக்கணக்கில் இந்த ‘கலத்தல்’ நடந்தது. ஒரு கட்டத்தில் மாவை கையால் தூக்கித் தூக்கி அடித்து அடித்து கலந்தார் அந்த மனிதர்.

பிறகு கணிசமான அளவு மாவு எடுத்து அதை நீளமாக உருட்டி அதை வட்டமாக சுருட்டி வைத்தார். இதேபோல எல்லா மாவையும் செய்து, ஒரு அழுக்குத் துணியால் மூடினார்.

இரவு ஆகஆகத் தான் பரோட்டா வியாபாரம்  சூடு பிடிக்கிறது.

நேற்று எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பரோட்டா சாப்பிடுவதை விட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறார்!

‘வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியில் வேண்டாம்’ என்று பதில் எழுதினேன் அவருக்கு.

எனது பதிவு உலகத் தோழி திருமதி கீதா சாம்பசிவம் தனது பின்னூட்டத்தில்

//நல்ல பரோட்டா சாப்பிடணும்னா வட மாநிலங்களிலே குறிப்பா உ.பி. பஞ்சாப், ராஜஸ்தானிலே சாப்பிடணும். டெல்லியிலேயும் நல்லா இருக்கும்.  அங்கே எல்லாம் ஹோட்டல்களில் கூட வெண்ணை என்றால் நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வெண்ணை தான் சேர்ப்பாங்க.

வெண்ணை தான் போடுவாங்க. சுத்தமான வெண்ணெயா இருக்கும்// என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று அவரது சாப்பிடலாம் வாங்க, தளத்தில் கோதுமையில் பரோட்டா செய்வது பற்றி படங்களுடன் போட்டிருக்கிறார்.

இதோ இணைப்பு:

டிங்கடிங்க டிங்க டிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் பரோட்டா ரெடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பரோட்டா பிரியர்களுக்கு சின்ன வேண்டுகோள்: வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியில் வேண்டாம், ப்ளீஸ்!

அன்புள்ள கீதா நன்றிகளுடன் 

Advertisements

8 thoughts on “கோதுமை மாவில் பரோட்டா!

 1. பரோட்டா சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? அதில் எது மக்களைக் கவர்கிறது என்றே தெரியாத அளவு ஒரு அருமையான உணவு! நீங்கள் சொல்வது போல வீட்டில் செய்து சாப்பிட்டால் நல்லதுதான்

  சென்னையில் ராமசந்த்ரா ஹாஸ்பிட்டல் கேண்டீனில் பரோட்டா மிக நன்றாக இருக்கும்!!!! ராமச்சந்த்ராவில் யாராவது அட்மிட் ஆனால் இங்கு சென்று பரோட்டா சாப்பிடலாம் என்ற எண்ணமும் வரும்!!!

 2. ஆஹா, தன்யளானேன். சென்னையில் நல்ல பரோட்டா அதுவும் பட்டர் பரோட்டா சாப்பிடணும்னா எங்கேயுமே கிடைக்காது. அண்ணா நகர் சுக் சாகரில் கூட மைதாவில் தான் செய்யறோம், மேடம், உங்களுக்குப் பிடிக்காதுனு சொல்லிட்டு பட்டர் சப்பாத்தினு ஆர்டர் கொடுங்க. பட்டர் போட்டுச் சப்பாத்தி கிட்டத்தட்ட பரோட்டா மாதிரியே செய்து கொடுப்போம்னு சொன்னாங்க. ஒருவேளை ஸ்டார் ஹோட்டல்களில் பட்டர் பரோட்டா கோதுமை மாவில் செய்யலாம். தெரியாது. அது குறித்துப் போனவங்க கிட்டேத் தான் கேட்கணும். அண்ணா நகர் சுக் சாகரில் எல்லாமே அருமையாக இருக்கும். கீழே தென்னிந்திய உணவு வகைகள். அதுவே பாஸ்ட் புட் ஆக சைடில் ஒரு பக்கம். மாடியில் ஏ.சி. ஹாலில் ஆர்டர் கொடுத்து உணவு வரவழைத்துச் சாப்பிடலாம். சுத்தமான வட இந்திய உணவு வகைகள்.எல்லாமே நல்லா இருக்கும்.

 3. பரோட்டா பிடிக்கிறதோ இல்லையோ, அந்த “டிங்க டிங்க டிங்க் டிங்க்” இசையை மிகவும் பிடிக்கும்…(கொத்து பரோட்டா)

  உலகத் தோழி என்று இன்று தான் தெரியும்… ஹா… ஹா…

  1. உலகத் தோழி என்று இன்று தான் தெரியும்… ஹா… ஹா//

   டிடி, :)))) முன்னால் “பதிவு” உலகத் தோழினு தான் சொல்லி இருக்காங்க இல்ல??? :)))))

 4. வணக்கம்
  அம்மா
  அருமையான பகிர்வு நீங்கள் சொன்னதில் இருந்து பரோட்டா சாப்பிட விருப்பம் இல்லாமல் போய்விட்டது தகவல் தந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 5. பரோட்டா வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் இந்தச் சின்னப் பசங்க எங்கே கேட்கிறாங்க! பரோட்டா பற்றி எழுதியுள்ளது ரசிக்கும்படி இருந்தது.தோழி கீதா சாம்பசிவம் அவர்களின் சாப்பிடலாம் வாங்க வலைத்தளம் பயனுள்ளதாக இருந்தது. அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s