Food · General knowledge · Health and exercise

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Inline images 1
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

 இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகின்றன,  பரோட்டா கடைகள்.  அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு!

விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா   என்று சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே!

பரோட்டாவின் கதை:

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சினை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது,  நாம் பிறந்த நாள் கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது..?

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  அதை பென்சாயல் பெராக்சைட் (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் ‘டை’ யில் உள்ள ரசாயனம்.

இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவுக்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccharine , Ajino motto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இவை மைதாவை அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் உண்டு பண்ணப்  பயன்படுகிறது. ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும்  நீரிழிவு வர காரணமாகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதாவில் நார் சத்து கிடையாது.  நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் .

இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.

Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதாவை  நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் , இருதய கோளாறு , நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர் .

மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு கொள்ளசெய்யுங்கள்.

நன்றி: திரு ஆர். கே. ஷர்மா (rk1s@yahoo.com) (எனக்கு இந்த கட்டுரையை அனுப்பியவர்.)

Original letter from Sri Ananthanarayanan Ramasamy <a.narayanan.1960@gmail.com  –

மேலதிக விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Maida_flour

கோதுமை மாவில் பரோட்டா!

Advertisements

24 thoughts on “பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

 1. அதுவும் சிலர் தினமும் இரவு இந்த இழவைத் தான் சாப்பிடுகிறார்கள்… நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு…

  திரு ஆர். கே. ஷர்மா அவர்களுக்கும் நன்றி… வாழ்த்துக்கள்…

  1. வாங்க தனபாலன்!
   நீங்க இப்படி சொல்றீங்க, google+ ல ஒருத்தரு யாரு என்ன சொன்னாலும் இதையேதான் சாப்பிடுவாராம்….காமென்ட் போட்டிருக்காரு!
   என்னத்த சொல்ல?

 2. நாங் எப்பொதாவது ஓர தடவை தான் சாப்பிடுவோம். தகவல்களிங்கு நன்றி. இருவருக்கும் நன்றி. புதுப் பக்கமா? இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

   1. சர்க்கரை நோயின் தலைநகரம் நமது இந்தியா ஆனதுக்கு பரோட்டாதான் காரணம் போலிருக்கிறதே !இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை !நல்ல பதிவுக்கு நன்றி !

   2. வாருங்கள் பகவான்ஜீ!
    சத்தில்லாத உணவுகள், நம் பராம்பரிய உணவுகளை விட்டு வேறு ஏதோ சாப்பிடுவது இவைதான் சர்க்கரை நோய் வரக் காரணம் என்கிறார்கள்.
    நாவிற்கு ருசி – வயிற்றுக்கு கெடுதல் – நாக்கைக் கட்டுப் படுத்துவது எத்தனை கஷ்டம்!

 3. ஹையோ… நாங்களும் சாப்பிடுவதே இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனாலும் ஐயோன்னுதான் சொல்லத்தோன்றுகிறது சகோதரி….

  நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.
  மிக்க நன்றி உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும்!

 4. முதலில் பிடியுங்கள் புதிய லே அவுட் க்கு பாராட்டுக்களை பரோட்டா பிரியர்களுக்கு எச்சரிக்கை சரி பரோட்டா கடைக்காரர்கள் உங்கள் மேல் படையெடுத்து வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் முதலில் எச்சரிக்கையாக இருங்கள் அதன் சுவை எப்படி
  இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது சுவைத்ததே இல்லை

  1. ஹா…ஹா… வாருங்கள் விஜயா!
   எனக்கும் தெரியாது. நாங்கள் சென்னை அண்ணாநகரில் இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரில் பரோட்டாக் கடையையும் இரவில் அங்கு வரும் கூட்டத்தையும் பார்த்து அசந்திருக்கிறேன்!

   1. வணக்கம் அம்மா,

    நல்லா இருக்கீங்களா? நல்ல ஒரு பதிவு. நேத்தே ஈமெயில்ல படிச்சுட்டேன். இப்போதான் பின்னூட்டம் போட முடிஞ்சுது.

    எங்க ஊரு ரொம்ப பேமஸ் இந்த பரோட்டாவுக்கு. சுவை கூட நல்லாத்தான் இருக்கும். ஆனா தினம் சாப்பிட்டா நல்லதில்லன்னு எனக்கு தெரியும். எப்போவாச்சும் ரெண்டு மூணு உள்ள தள்ளுவேன்.

    தினம் திங்கிற அரிசி சோறே நல்லதில்லன்னு சொல்லுறப்போ இது நல்லது இல்லன்னு தீர்க்கமா சொல்லலாம். இப்போ எல்லாம் எங்க வீட்டுல வாரத்துக்கு ரெண்டு நாள் சாம அரிசி, கார் அரிசி, இல்ல வரகு அரிசி சோறு தான்.. 🙂

    அன்புடன்,

    மதுரக்காரன்.

   2. வாருங்கள் டாக்டர்!
    நல்லா இருக்கேன். ரொம்ப நாளா உங்களைக் காணோமே!

    டாக்டரே சொன்னபிறகு வேறென்ன வேண்டும்?

    நேற்று கூட தொலைக்காட்சியில் வரகு அரிசி – கொத்தமல்லி சாதம் என்று காண்பித்தார்கள். வரகு என்றால் கேழ்வரகா? அல்லது வேறெதாவதா? பார்ப்பதற்கு வெளுப்பாக சின்ன சின்ன தாக இருந்தது. உங்களிடம் படம் இருந்தால் போடுங்களேன்.
    சாம அரிசி, கார் அரிசி என்பது என்ன? கொஞ்சம் ஆங்கிலத்தில் பெயர்கள் வேண்டும்.

   3. நீங்க கேட்டு சொல்லாம இருப்பேனா?

    http://arockyasanthai.com/products/index.php?route=product/category&path=61

    இந்த இடுகையில் போய் பாருங்க மேடம். உங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கே இருக்கும்ன்னு நெனைக்கிறேன். 🙂 கேழ்வரகை எங்களூர் பக்கம் கேப்பை என்று அழைப்பார்கள். வரகு என்பது தனியான ஒரு அரிசி வகையே. நீங்கள் குறிப்பிட்டது போலத்தான் இருக்கும்.

   4. கேழ்வரகு நன்றாகத் தெரியும். இங்கு ராகி முத்தை பிரபலமான உணவு.
    வரகு என்பதை ஆங்கிலத்தில் millet என்று போட்டிருந்தார்கள்.
    நீங்கள் கொடுத்திருக்கும் தளம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர்களிடமே எல்லா தானியங்களும் கிடைக்கிறது. ஆன்-லைனில் வாங்கலாம் என்று போட்டிருக்கிறார்கள். இனிமேல்தான் நிதானமாகப் பார்க்க வேண்டும்.
    நன்றி டாக்டர்!

 5. மைதாவின் மகத்துவம் இவ்வளவு இருக்கா?உபயோகிக்காமல் இருக்கவேண்டும். எல்லோரும் புரிந்து கொண்டால் ஸரி. நல்ல விஷயங்களைச் சொல்லுகிராய், நன்றி.அன்புடன்

 6. பரோட்டா எங்க வீட்டிலும் ஃபேவரிட் உணவு. நான் வீட்டிலேயே செய்வேன் ரஞ்சனி மேடம்! வேலை அதிகம் என்பதால் அடிக்கடி செய்யாமல் எப்பவாவது ஒரு முறை செய்வேன். இப்போழுது அது மறந்தே போய்விட்டது. உங்க பதிவைப் பார்த்ததும்தான் நினைவு வருகிறது! 🙂

  இந்த எச்சரிக்கையை பல நாட்கள் முன்பே இணையத்திலும் பார்த்திருக்கிறேன். மைதா உபயோகத்தை விட கோதுமை மாவை உபயோகிப்பதே நல்லது. ஆனா அத்தி பூத்த மாதிரி ஏதோ ஒரு நாள் சாப்பிடலாம்தானே? 😉 🙂 [என்ன பண்ண..நாக்கு நீளம்ம்ம்ம்ம்! :)]

  1. வாங்க மகி!
   என்றைக்கோ ஒரு நாள் சாப்பிடுவது, அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது எல்லாமே சரி தான்!
   கோதுமை மாவில் செய்யலாம் என்று திருமதி கீதா எழுதி இருப்பதை முயற்சி செய்யுங்களேன்!
   எல்லோருக்கும் இதனை பிடித்த பரோட்டாவை நான் சாப்பிட்டதே இல்லை!
   வீட்டிலேயே பண்ணி சாப்பிட்டுவிடவேண்டும், என்ன சொல்றீங்க?

 7. இப்போ தான் பரோட்டா செய்து பார்க்கும் ஆவல் வந்தது… இந்த பரோட்டா-லயா இவ்ளோ சங்கடம் இருக்கனும்…..

  எப்பவும் வாய்க்கு ருசியா இருந்தா அது வயிற்றுக்கு சரியா இருகறதில்ல!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s